கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா?
கலாசார அழுத்தங்கள் தூக்கத்தை பலி கேட்கிறதா?
சரியான நேரத்தில் படுத்து சரியான நேரத்தில் எழவேண்டியது ஆரோக்கியத்திற்கு முக்கியம்.ஆனால் இன்று நகரவாசிகள் நள்ளிரவில் படுத்து காலையில் 9.30க்கு ஆபீஸ் செல்லவேண்டிய அவசரத்திற்கு வேகமாக எழுந்து வருகின்றனர். இது அவர்களின் உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தை பாதிக்கிறது. உயிரியல் கடிகாரம் என்பது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குமுறைபடுத்துகிறது. இதுவே பகலா,இரவா எந்த நேரத்தில் உறங்குகிறோம் என்பதை கவனிக்கிறது. ஆனால் இந்த கடிகாரம் நாம் தூங்கவேண்டிய நேரத்திற்கு அலாரமடித்து நம்மை உஷார் செய்யாது. ஆனால் எழவேண்டிய நேரத்தை இதுவே தீர்மானிக்கிறது.
இதுபற்றி சயின்ஸ் அட்வான்ஸ் இதழில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் ஒருவ்ர் தூங்கச்செல்வது அவரின் கலாசார அழுத்தம் சார்ந்தது. ஆனால் எழுவதை உயிரியல் கடிகாரம் தீர்மானிக்கிறது என்றார் ஒலிவியா வாட்ச். இவர், மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தூக்கம் பற்றிய ஆய்வை செய்து வரும் பட்டதாரி மாணவி. . இந்த ஆய்வில் நூறு நாடுகளைச் சேர்ந்த 8 ஆயிரம் பங்கேற்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளில் சூரிய உதயம் மாறுபடுவதால், அதற்காக ஸ்மார்ட்போன் ஆப்பை பயன்படுத்தி நிலப்பரப்பு ரீதியாக நேரத்தை மாற்றியமைத்துக்கொண்டனர். இதன் காரணமாக எந்த நேரத்தில அவர்களின் மீது சூரிய ஒளி படுகிறது, இரவு எப்போது வருகிறது என ஆராய்ச்சி சென்றது. இதில் ஜப்பான், சிங்கப்பூர் நாட்டிலுள்ள மக்கள் ஏழு மணிநேரம் 24 நிமிடங்கள் மட்டுமே தூங்குவதாக அறியப்பட்டது. நெதர்லாந்து நாட்டில் 8 மணி நேரம் மக்கள் தூங்குவதாக அறியப்பட்டுள்ளது. மேலே சொன்னது ஆய்வில் கூறப்பட்ட தோராயமான அளவேயாகும்.
கலாசாராரீதியாக ஒற்றுமை கொண்டவை ஜப்பான், சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இங்கு ஒருவர் தூங்கும் நேரம் என்பது பெரியளவு மாறுபடவில்லை. ஆண்கள், பெண்கள் யார் அதிக நேரம் தூங்குகிறார்கள் என்று பார்த்தால் இதிலும் டாப்பாக ஸ்கோர் செய்வது பெண்கள்தான். நேரமே தூங்கச்சென்று தாமதமாக எழுவது இவர்கள்தான்.
ஒருவர் தினசரி ஆறுமணிநேரம் தூங்கினால் அவருக்கு ஸ்லீப் டெப்ட் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதாவது, அவருக்கு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்று பொருள். குறைந்தபட்சம் ஒருவர் அரைமணிநேரம் தூங்கி எழுவது அவரின் மூளை, உடலுக்கான ஒத்திசைவை ஏற்படுத்துவதாக கூறுகிறார்கள். முறையாக தூங்காமல் வேலை வேலை என்று அலைபவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக