உற்பத்தி துறையை மேம்படுத்த மேக் இன் இந்தியா, ஆத்மாநிர்பார் போதாது! சேட்டன் பகத்

 

 

 

 

 

ரூபாய் மதிப்பு சரிவை பலாத்காரத்துடன் ஒப்பிட்டு ட்விட் செய்த சேட்டன் ...

 

 

 

இந்தியாவின் உற்பத்திதுறையை மேம்படுத்த மசோதா தேவை!


சேட்டன் பகத்


சில சமயங்களில் நமக்கு மக்கள் எதிர்க்கும் விஷயங்களில் கூட நல்ல விஷயங்கள் கிடைக்கும். வகுப்பறையில் மாணவர்களுக்கு பாஸ்தா, பீட்ஸா கொடுப்பதை விட காய்ச்சலைக் குணப்படுத்த கசப்பு மாத்திரை கொடுக்கும் மருத்துவர் முக்கியமானவர். அதேபோலத்தான் அரசு மக்களுக்கு ஏராளமான இலவச சலுகைகளை வழங்கி பின்னர் வரி ஏற்றி மக்களை வருத்துவதை விட கடினமான முடிவுகளை முன்னமே எடுத்து மக்களை காப்பது சிறப்பானது. பொதுவாக மக்கள் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி என்பதை விரும்புவதில்லை. ஆனால், அதனை அவர்கள் செய்யும்போது கிடைக்கும் பலன்கள் அபாரமானவைதானே!


நாம் பல்லாண்டுகளாக காத்திருந்துவிட்டோம். உற்பத்தித்துறை சார்ந்த துறையில் இந்தியா முன்னேறுவதற்கான திட்டங்கள் உருவாகவில்லை. ஆனால் இப்போது இந்திய அரசு அந்த திசையில் தனது காலடிகளை மெல்ல எடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. மேக் இன் இந்தியா, ஆத்மாநிர்பார் ஆகிய திட்டங்களை இந்த வகையில் நாம் கூறலாம். அரசு இத்திட்டங்களுக்காக லட்சம் கோடிகளில் நிதியை ஒதுக்கி வருகிறது. இப்படி சில திட்டங்கள் நாம் நினைக்கும் லட்சியத்திற்கு நெருக்கமாக வந்தாலும் உற்பத்திற்கான தலைமையிடமாக நாம் மாறுவதற்கு சிறப்பான மசோதாவும் சட்டமும் தேவை. அப்படியில்லாதபோது இத்திட்டத்தில் நாம் வெற்றி பெற முடியாது.


இந்த நேரத்தில் நாம் உலகளவில் உற்பத்தித்துறையில் சீனா முன்னிலை வகிப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தியாவை விட சீனா உற்பத்தித்துறையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. பெற்று வருகிறது. இதற்கு என்ன காரணமென்றால், அவர்கள் தம் நாட்டை உற்பத்தித்துறையில் முன்னேற்ற முப்பதாண்டுகளாக உழைத்து வந்தனர் என்பதுதான். புதிய திட்டங்கள் வரும்போது எப்போதும் அதற்கு எதிர்ப்பு உருவாவது இந்தியாவில் இயல்பான காட்சி. அந்த வகையில் மக்கள் பல்வேறு தொழில்திட்டங்களை எதிர்க்கின்றனர். இதனால் வறுமை ஒழியாது. வறுமையில் உள்ள விவசாயிகள் வரிசையில் தொழிலாளர்களும் சேர்வார்கள். டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இதனால்தான் மேற்கு நாடுகள், இந்திய அரசை கொடூர ஆட்சி, சர்வாதிகார போக்கு என விவாதிக்கின்றன. விவசாயிகளை மசோதாவை அரசு நடைமுறைக்கு கொண்டு வந்ததைப் போலவே, உற்பத்தி மையம் தொடர்பான மசோதாவையும் கொண்டு வரவேண்டும்.


நான் முன்னமே சொன்னதுபோல, பேக்கரி உணவை விட மருத்துவரி்ன் நோய் தீர்க்கும் கசப்பு மாத்திரை சிறப்பானது. உற்பத்தி மையம் உருவாக்கப்படுவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன. முதலில் நிலத்தை கையகப்படுத்துவது, இதனை மெட்ரோ ரயிலுக்கு நிலங்களைப் பெறுவது போல பெற்றால்தான் உண்டு. இல்லையெனில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் வழக்கு போட்டால் அதோடு தொழில்முயற்சிக்கு முற்றுப்புள்ளி விழுந்து விடும். அடுத்து தொழிலாளர்களை ஏஜென்சிகள் மூலம் பெறுவதும் அவர்களுக்கு சரியான முறையில் வசதிகளை ஏற்படுத்துவதும் அவசியம். அடுத்து, பொருட்களை சரியானபடி கொண்டு சேர்க்கும் வசதிகள் முக்கியமானவை. இதற்கு சுங்கத்துறையினரில் ஒத்திசைவான பணிகள் உதவும்


தொழிற்சாலைகளை நாம் கோவில்களாக பார்க்கவேண்டும். அப்போதுதான், அதன் தூய்மையை நம்மால் உணர முடியும். அதுதான் இந்தியாவை பொருள்தார வளர்ச்சியில், மக்களை செழிப்பின் பாதையில் பயணிக்க வைக்கும்.


டைம்ஸ் ஆப் இந்தியா






கருத்துகள்