அசாமைச் சேர்ந்த ஒரினச்சேர்க்கையாளருக்கு கிடைத்த தேசிய விருது! - பெஞ்சமின் டெய்மேரி
அசாமின் பாக்சா மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெஞ்சமின் டெய்மேரி. இவர் நடித்த ஜோனகி என்ற படம் தேசிய விருதுக்கான ஜூரி பிரிவில் நடிப்புக்கான விருது பெற்றுள்ளது. இச்செய்தியை டெய்மேரிக்கு போன் செய்து, படத்தின் இயக்குநர் பிரகாஷ் தேகா சொல்லும்போது, டெய்மேரியால் நம்ப முடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்தவர். அந்த ஆச்சரியத்தை நம்ப முடியாமல் இணையத்தை சோதித்து அதனை உறுதி செய்துகொண்டார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய விருது வழங்கப்படுவது 2001ஆம் ஆண்டு முதலே தொடங்கிவிட்டது. ஆனால் டெய்மேரிக்கு நடிப்புக்காக வழங்கப்பட்டதுதான் இதில் சிறப்பானது. அபூர்வா அஸ்ரானி என்பவருக்கு ஸ்னிப் என்ற படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. 2012இல் ஓனிர் இயக்கிய ஐ எம் என்ற படத்திற்கு சிறந்த படத்திற்காக விருது வழங்கப்பட்டது. இந்தப்படம் ஒரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளைப் பற்றிப் பேசியது.
இப்படி விருதுகள் வழங்கப்பட்டாலும் அதிகளவில் இவை வழங்கப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். இவர் நடித்த அசாமிய படம் இன்னும் வணிகரீதியில் திரையரங்குகளைத் தொடவில்லை. ஆனால் இவர் மும்பையில் தங்கி பல்வேறு ஆடிசன்களுக்கு சென்று வருகிறார். நடிப்பு பயிற்சிக்கு கௌகாத்தி சென்று வந்த அக்காவுக்கு சாப்பாடு கொண்டுபோய் கொண்டுபோய் கொடுத்து ஆர்வம் வந்திருக்கிறது. ஆனால் நடிக்கும்போது பெரியதாக சோபிக்கவில்லை. இதனால் நாடகங்கள், மேக்கப் கலைஞராக வேலைபார்த்திருக்கிறார். இதற்காக நடிக்கும் பயிற்சியை உடனே கைவிடவில்லை. இப்படி சென்றபோதுதான் ஜோனகி போருவா என்ற பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவரின் பாத்திரத்திற்கு ஏற்ப உணர்ச்சிகளை அடக்கி நடிக்கும் முறை இயக்குநர் பிரகாஷிற்கு பிடித்துப்போயிருக்கிறது.
எனது பாத்திரத்திற்கும் படத்தின் பாத்திரத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. அதனை நான் உணர்ந்துதான் நடித்தேன் என்றார் டெய்மேரி. பெற்றோர் இவரது இளமைப் பருவத்தில் ஆதரவாக இருந்தாலும் சுற்றியிருந்த சூழல் எப்போதும் போல அவமானங்களைச் சந்திப்பதாகவே இருந்தது. அதனையும் சமாளித்து வந்திருக்கிறார். வகுப்பில் கூட இவரை ஆசிரியர் பெண் என்றுதான் கூப்பிடுவாராம்.
மாற்றுப்பாலினத்தவருக்கான பாத்திரங்கள் மட்டுமல்லாது பிற பாத்திரங்களிலும் நடிப்பதற்கான ஆர்வத்தோடு இருக்கிறார். இதன்மூலம் இந்தியாவின் பிற நடிகர்களை விட மாறுபட்ட முகத்தோற்றம் கொண்ட அசாமிய நடிகர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறார்.
டைம் ஸ் ஆப் இந்தியா
மொகுவா தாஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக