சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களை கொன்ற மாவோயிஸ்ட் தலைவர்! - ஹிட்மா
மாவோயிஸ்ட் தலைவர் ஹிட்மா
சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 22 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். இதில் மூளையாக செயல்பட்டவர் கமாண்டர் ஹிட்மா என்று அறிய வந்துள்ளது. இவரது ராணுவப்படைதான் அரசின் படைகளை தாக்கி வீழ்த்தியுள்ளது.
ஹிட்மா, வெளியே தெரியாத கமாண்டர் தலைவராக மக்கள் விடுதலை கொரில்லா படைபிரிவை நடத்தி வந்தவர் ஆவார். தண்டகாரண்யா சிறப்பு பகுதி அமைப்பின் உறுப்பினருமாவார். தெற்கு பஸ்தர், பிஜாபூர், சுக்மா ஆகிய மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்பு இயங்கி வருகிறது. 2010இல் சிஆர்பிஎப் படைப்பிரிவைச் சேர்ந்த 76 வீரர்களைக் கொன்றது. 2013இல் மாநில காங்கிரஸ் தலைவரை கொன்றது, பேஜி, புர்காபால், மின்பா, டாரம் ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளது மாவோயிஸ்ட் அமைப்பு. இவரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 25 லட்சம் பரிசு கொடுப்பதாக சத்தீஸ்கர் அரசு கூறியுள்ளது. பிற மாநில அரசு அமைப்புகள் ரூ.20 லட்சம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளனர்.
ஹிட்மா என்று சுருக்கமாக குறிப்பிடப்படும் மாவோயிஸ்ட் தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை இன்னும் தெளிவாக தெரியவில்லை. 35 முதல் 45 வயது கொண்டவருக்கு சிறிய அழுத்தமான மீசை உள்ளது. கையில் ஏகே 47 துப்பாக்கி வைத்துள்ளார்.இதுவும் கூட புகைப்படத்தில் உள்ள விஷயங்கள்தான். புவெர்வி எனும் கிராமத்தில் பிறந்தவர், பழங்குடி இனத்தை சேர்ந்தவர். மாத்வி என்று இவரது பெயர் குறிப்பிடப்படுகிறது.
தொழில்நுட்பங்களின் மேல் ஆர்வம் கொண்டவர். படைப்பிரிவுகளை சுற்றி வளைத்து நடத்தும் தாக்குதல்களுக்கு புகழ்பெற்றவர். செய்தியாளர்களுக்கு பல்வேறு செய்திகளை ஒருங்கிணைத்து கொடுத்து தங்களைப் பற்றிய செய்திகளை வெளிவரச்செய்வதில் ஆர்வம் கொண்டவர். தாக்குதல் திட்டங்களை சிறப்பாக திட்டமிட்டு களத்தில் அதனை நிறைவேற்றுவதில் அசாதாரண திறமை கொண்டவர் என ஹிட்மாவைப் பற்றி முன்னாள் மாவோயிஸ்டுகள் தகவல் கூறியுள்ளனர்.
ஆதிவாசி மக்களோடு இணைந்து தாக்குதலை திட்டமிடுவதால் இயக்கத்திற்கு இவர் முக்கியமானவர்.
கருத்துகள்
கருத்துரையிடுக