உடலிலுள்ள செல்கள், உறுப்புகள், எலும்புகளின் பணி என்ன?

 

 

 

 

 Woman, Human, Pair, Man, Face, Body, Lips, Mouth, Skin

 

 

உடலிலுள்ள செல்கள், உறுப்புகள், கட்டமைப்பு ஆகியவை உடலின் இயக்கம் தடையற நடைபெற உதவுகின்றன.


திசுக்கள்


செல்கள் இணைந்து பல்வேறு வித திசுக்களை உருவாக்குகின்றன. நமது குடல் பகுதி, நான்கு வகை திசுக்களால் உருவானது. இதில் செரிக்கப்பட்ட உணவு தவிர்த்த கழிவுகளை குடலுக்குள் தள்ளும் தசைகளும் உள்ளடங்கும்.


உடலிலுள்ள செல்கள் அனைத்தும் விதவிதான அமைப்பைக் கொண்டவை. அவற்றின் செயல்பாடும் இதுபோலவே மாறுபடும். குடலிலுள்ள சில வகை செல்கள் உணவிலுள்ள சத்துக்களை உறிஞ்சுகின்றன.


உடலிலுள்ள அனைத்து பாகங்களின் உருவாக்கத்திலும் செல்களின் பங்குண்டு. அதிக எண்ணிக்கையிலான செல்கள் இணைந்துதான் திசு உருவாகிறது. திசுக்கள் ஒட்டுமொத்த உருவம்தான் உறுப்புகள். உறுப்புகள் உடலின் செயல்பாடுகள் நடைபெற உதவுகின்றன.


நரம்பு செல்கள் ஒன்றாக இணைந்திருப்பதால் முக்கியமான சமிக்ஞைகளை உடலெங்கும் கடத்துகின்றன. இவை மூளைக்கு அனுப்பப்படுகின்றன. தசை செல்கள் உடலின் தசைகளை இறுக்கமாக்கி அதனை சுருக்குகின்றன. கால் மற்றும் கைகளின் தசைகளை நீட்டி நெகிழ்த்தவும் உதவுபவரை தசை செல்கள்தான்.


உடல் உறுப்புகளின் ஒட்டுமொத்த தன்மையை அமைப்பு எனலாம். குடல் பகுதியை செரிமான அமைப்பின் பகுதியாக கூறலாம். இந்த அமைப்பு, உணவை செரித்து சத்துகளை சேகரிக்கும் பணியைச் செய்கிறது.


ஸ்டெம் செல்கள், மனிதர்களின் தோல், தசை, ரத்தம் என பல்வேறு விஷயங்களைத் தீர்மானிக்கிறது.


தோல்


உடலிலுள்ள வாட்டர் ப்ரூப் அமைப்பு எது தெரியுமா? தோல்தான். உடலை நோய்க்கிருமிகளிடமிருந்தும், சூரியனின் வெப்பத்திலிருந்தும் காக்கிறது. உடலை சரியான வெப்பநிலையில் வைத்திருக்க உதவுகிறது. உடலின் நீளமான உறுப்பும் தோல்தான்.


தோலில் இரண்டு அடுக்குகள் உள்ளன. முதல் அடுக்கை எபிடெர்மிஸ், இரண்டாவது அடுக்கை டெர்மிஸ் என்றும் கூறலாம். முதல் அடுக்கின் கீழேதான் முடிகள் வளர்கின்றன. இரண்டாவது அடுக்கில் கொழுப்பு உள்ளது. இதுவே குஷன் போல செயல்பட்டு தோல் இயங்குவதற்கு உதவுகிறது.


தோலின் நிறம் மெலனின் என்ற வேதிப்பொருளால் தீர்மானிக்கப்படுகிறது. மெலனின் அதிகரிக்கும்போது ஒருவரின் நிறம் கருப்பாக இருக்கும்.


உலகிலுள்ள அனைத்து மனிதர்களுக்கும் தனித்துவமான கைரேகை உண்டு. இதை வைத்துத்தான் தடயவியல் துறை உருவானது. இந்த வகையில் புலிகளுக்கும். சிறுத்தைகளுக்கும் கூட தனித்துவமான உடல் வரிகள் உண்டு.


தோல் செல்களால் உருவாகிறது. இந்த செல்கள் கெராட்டின் எனும் வலுவான பொருளால் உருவாக்கப்படுகிறது.


பத்து மில்லியனுக்கும் அதிகமான தோல் செல்கள் தினசரி நமது உடலிலிருந்து உதிர்கின்றன.


எலும்புகள்


உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவை எல்லாமே சேர்ந்துதான் உடல் அமைப்பாக உருவாகியுள்ளன. எலும்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக இயங்குகின்றன. இதன் காரணமாகவே, கை, கால்களை நம்மால் நகர்த்த முடிகிறது.


பொதுவாக எலும்பின் மேற்பகுதி கடினமானவையாக இருக்கும். இதன் உள்பகுதி மென்மையானவை. ஸ்பாஞ்ச் போன்ற பகுதியாக உள்ளதை எலும்பு மஜ்ஜை என்று கூறலாம். இதில்தான் ரத்த செல்கள் உருவாக்கப்பட்டு உடம்பு முழுக்க செல்கின்றன..


பெல்விஸ்


இடுப்பிலுள்ள வட்ட வடிவமான எலும்பு. உடலின் கீழ்பகுதியை நிலைநிறுத்த பயன்படுகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது ஒருவர் நடக்க முடியாது.


ஸ்பான்ஞ்


முழங்காலில் தேங்காய் தொட்டியை கவிழ்த்து வைத்தது போல இருக்கும் அமைப்பு முழுக்க ஸ்பான்ஞ் போன்றது. இதில் சிறு சிறு துளைகள் கூட உண்டு.


ஃபெமர்


இது முழங்கால் எலும்பு. உடலில் நீளமான எலும்பு இதுதான். இடும்பு எலும்பு எளிதாக செயல்பட உதவுகிறது.


மண்டையோடு


இதில் இருபத்திரெண்டு எலும்புகள் உள்ளன. இதில் உள்ள ஒரே அசையும் எலும்பு தாடைதான்.



முதுகெலும்பு


முதுகெலும்புதான் மனிதர்கள் எழுந்து நிற்க உதவுகிறது. மூளைக்கு செல்லும் சிக்னல்கள் இதன் வழியே செல்கிறது.


மார்பெலும்பு


இதயத்தையும் நுரையீரலையும் பாதுகாக்கும் எலு்ம்பு அமைப்பு.. ஒருவர் மூச்சு விடும்போது ஏறித்தாழும் எலும்பு அமைப்பு இதுவேதான்.


எலும்பு இணைப்புகள்


இவைதான் கைகளை கால்களை நாம் அசைக்கவும் மடக்கவும் உதவுகிறது.
















கருத்துகள்