ஊடகங்களை அச்சுறுத்தும் அவதூறு வழக்கு எனும் ஆயுதம்! - அதிமுக தொடங்கிய ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடு

 

 

 

 

Defamation no tool for mighty to browbeat citizens: Delhi ...

 

 


அவதூறு வழக்கு எனும் ஆயுதம்!


இந்த கட்டுரையை எழுதும்போது வரையில் அறுபதிற்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளை அரசும், அரசுத்துறையைச் சேர்ந்தவர்களும் ஊடகங்களின் மீது தொடுத்துள்ளனர். இந்த அணுகுமுறையை முதன்முதலில் கையில் எடுத்தது. அதிமுக அரசுதான். இத்தகைய வழக்குகள் இன்றும் கூட செஷன் கோர்ட்டுகளில் இன்றும் வழக்கில் உள்ளன. இதனால் என்ன பயன் விளையும் என நினைக்கிறீர்கள்? தனது செயல்பாடுகளை யாரும் விமர்சிக்க கூடாது என்ற பாசிச மனப்பான்மையின் கொக்கரிப்புதான். 1992ஆம் ஆண்டு தொடங்கிய நடைமுறை இன்று விரிவாகியுள்ளது.


சென்னையில் வெளிவரும் ஆங்கில தமிழ் நாளிதழ்கள் அனைத்தின் மீதும் 120 வழக்குகளை ்அதிமுக அரசு தொடுத்தது. இப்படி வழக்கு தொடுத்து ஊடக நிறுவனங்களை அச்சுறுத்துவதோடு இதற்கான செலவுகளும் பெரும் சுமைதான். அதிமுகவின் ஆட்சிக்குப்பிறகு வந்த திமுக அரசு, ஊடகங்களின் மீதான வழக்கை ஒரே ஆணையில் நீக்கியது. ஆனால் இந்த வழக்கத்தை அப்படியே கடைபிடித்து ஊடகங்களின் மீது 50 வழக்குகளை பதிவு செய்தது. இதனை ரத்து செய்தது அதிமுக அரசுதான்.


திமுக, அதிமுக ஆகிய இரண்டு அரசுகளும் தொடுத்த அவதூறு வழக்குகள் எதுவும் முறையான விசாரணைக்கு வரவில்லை. இதற்காக தனி வழக்குரைஞர் நியமித்து செய்யும் செலவுகள் மக்களின் வரிப்பணத்திலிருந்து செய்யப்படுகின்றன என்பதை அரசுகள் நினைத்துப் பார்ப்பதில்லை. கடந்த ஆண்டு மே 21 அன்று சென்னை உயர்நீதிமன்றம் அவதூறு வழக்குகளை அரசு கவனித்து விரைவில் தீர்க்கவேண்டும் என தீர்ப்பளித்தும் நிலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.


ஒருவர் பேசிய பேச்சு, எழுதிய எழுத்து ஆகியவற்றில் குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய அவதூறு எப்படி உள்ளது, குறிப்பிட்ட இடம், பாதிக்கப்பட்டவரின் பெயர் ஆகியவற்றை முறையான புகாரில் குறிப்பிடவேண்டும். அப்போதுதான் சட்டப்பிரிவு 199(2) பிரிவுப்படி புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கு தொடர முடியும். அரசு தொடுக்கும் வழக்குகளில் கூட மேற்படி கூறப்படும் தெளிவு காணப்படுவதில்லை என்பதுதான் நகைமுரணாக உள்ளது. இதனால் இதுபோன்ற செய்திகள் தினத்தந்தியில் பெட்டிச்செய்திய.ளவுக்கு மட்டுமே இடம்பெறுகின்றன.


2013ஆம் ஆண்டு நக்கீரன் வார இதழ் மீது, ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டது தொடர்பாக வழக்கு பதியப்பட்டது. 2015இல், ஜூனியர் விகடன் மீது கொடநாட்டில் முதல்வர் ஜெயலலிதா தங்கியிருப்பதாகவும், கட்சி தலைவர்களை சந்திப்பதாகவும் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு தடைவிதிக்க கோரி புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் பின்னாளில் தள்ளுபடி செய்யப்பட்டன.


2021இல் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது தமிழக முதல்வரை மோடியின் தபால்காரர் என்று கூறி பேசியதற்கு வழக்கு தொடரப்பட்டது. இவர் பேசியது சத்தியம் டிவியில் ஒளிபரப்பானது. இதற்காக சீமான், சத்தியம் டிவி நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


இதுபோல அவதூறு வழக்குகளை ஊடக நிறுவனங்கள் முதுகெலும்பு வளையாமல் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும். அப்போதுதான் அரசுகள் தேவையின்றி அவதூறு வழக்குகளை தொடுப்பதை கைவிடும்.


டைம்ஸ் ஆப் இந்தியா

பிடி பெருமாள்


கருத்துகள்