ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும்!
ஏழு ஆண்டு கால ஆட்சியில் நோய்களும் மரணங்களும்!
ப.சிதம்பரம்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக கட்சி, 303 சீட்டுகள் வென்று ஆட்சியைப் பிடித்தது. கூட்டணியாக 353 இடங்கள் கிடைத்தன. இப்போது மூன்றாவது ஆண்டாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. அக்கட்சியில் என்ன விஷயங்கள் நமக்கு கிடைத்துள்ளன என்பதைப் பார்ப்போம். உணவு, பாதுகாப்பு, வேலை, வீடு, சுகாதாரம், கல்வி ஆகியவை மக்களுக்கு சரியான முறையில் கிடைத்திருக்க வேண்டும்.
உலகிலேயே இந்தியாதான் அதிகளவில் பருப்பு, தானியங்கள், பால், காய்கறிகள், மீன்களை உற்பத்தி செய்கிறது. அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு கிடைக்கச்செய்வது அவசியமானது. ஆனால் அப்படி கிடைக்கவில்லை. 2015-16 ஆண்டு குடும்பநலத்துறை ஆய்வு அறிக்கையில் 58.6 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர். இவர்களுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. இதில் உணவு வீணாக்கப்படும் பிரச்னையும் உள்ளது. 22 மாநிலங்களில் ஆய்வு செய்ததில் 18 மாநிலங்களில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு உள்ளது. 12 மாநிலங்களில் உணவு வீணாக்கப்படுவது நடந்து வருகிறது.
இதன்பொருள் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. தனிநபர் வருமானமும், உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளதோடு விலைவாசியும் கூடியுள்ளது. இதனால் பருப்பு, தானியங்கள் உற்பத்தி கூடினாலும் கூட மக்களுக்கு சென்றுசேரவில்லை. மக்களிடையே பாலின பாகுபாடும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இங்கு ஏற்பட்டுள்ள பெருந்தொற்று பாதிப்பு நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 30 அன்று முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். இதனை சரியாக கையாளததால நோய்த்தொற்று அனைவரையும் கடுமையாக பாதித்துள்ளது. இதற்கு ஆட்சிப்பொறுப்பிலிருந்த மனிதர்களே காரணம்.
பொருளாதார பிரச்னைகளால் மக்கள் கடன்தொல்லை மற்றும் வறுமையில் சிக்கினர். மத்திய தர வர்க்கம் பெரும்பகுதி வறுமைக்குள் மீள முடியாமல் வீழ்ந்தது. சிறு, குறு தொழிற்சாலைகள் பலவும் பெரும்பான்மையாக மூடப்பட்டன. ஏராளமான மக்கள் வேலையிழந்தனர். ஆண்களை விட பெண்களுக்கு இதில் பாதிப்பு அதிகம். அவர்கள் பெரும்பான்மையான பணிகளை இழக்க நேர்ந்தது. கடந்த ஆண்டில் கொரோனாவை நாம் வென்றுவிட்டோம் என்று பிரதமர் கூறியபிறகுதான் இரண்டாவது அலை பாதிப்பு நம்மை தாக்கத் தொடங்கியுள்ளது.
இரண்டாவது அலை நோய்த்தொற்று பாதிப்பு பரவிக்கொண்டிருந்தபோது பிரதமர் தேர்தல் பிரசாரத்தில் இருந்தார். ஏராளமான மக்கள் ஒன்றுகூடிய கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தார். மாநில முதல்வர்கள் உதவிக்கு கேட்டாலும் பிரதமரின் கரம் அவர்களுக்காக உயரவில்லை.
சுகாதாரத்துறை அமைச்சர் இடையறாது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. படுக்கைகள் உள்ளன என ஒரே வாக்கியத்தை இடையறாது சொல்லிக்கொண்டிருந்தார். உண்மையை மக்களின் பார்வையில் மறைத்துக்கொண்டிருந்தார்.
மத்திய அமைச்சர், வெளிநாடுகளில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்தக்கூடாது என்று கூறிக்கொண்டிருந்தார். பின்னாளில் மத்திய
அரசு வெளிநாட்டு தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் முடிவையே எடுத்தது.
சீரம் இன்ஸ்டிடியூட் தடுப்பூசிகளை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடாக கேட்டபோது மத்திய நிதியமைச்சர் மௌனம் காத்தார். தடுப்பூசி தயாரிப்புக்கான உரிமங்களை உரிய காலத்தில் வழங்கவில்லை.
மாநில அரசுகள் நோய்த்தொற்றுக்கு பலியானவர்களின எண்ணிக்கையை க் குறைத்துக் காட்டின. இதன் காரணமாக ஆம்புலன்சில் ஏராளமான நோயாளிகள் கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் வெளியே நின்றனர். அதோடு இறந்துபோன நோயாளிகளை சுடுகாட்டில் எரிக்க கூட இடம் கிடைக்கவில்லை. அதற்கும் வரிசையில் பிணங்கள் நிற்கவேண்டிய அவலநிலை ஏற்பட்டது. குஜராத் டெல்லி சம்பவங்களே இதற்கு சான்று.
பல்வேறு தடுப்பூசிகளுக்கு நிறுவனங்களுக்கு மாறுபட்ட விலை நிர்ணயம் செய்து அறிக்கை வெளியிட்டது அரசு. 18-44 வயது வரை்யிலானவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால் இதற்கு அவர்கள் கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் நாட்டின் மோசமான நிலை பற்றி வாயே திறக்காமல் கள்ள மௌனம் சாதித்து வ்ருகின்றனர். அரசு இயங்குகிறதா என்று எண்ணும்படி அதன் செயல்பாடுகள் கரும்பலகை, சாக்பீஸ் கொண்டு செயல்படும் காலத்திற்கு சென்றுவிட்டதாகவே தோன்றுகிறது. இதற்காகத்தான் மக்கள் 2019இல் மத்திய அரசை, பிரதமரைத் தேர்ந்தெடுத்தார்களா? நான் இதற்கு பதிலாக இல்லையென்றுதான் சொல்லுவேன்.
வலைத்தளம் pchidambaram.in
கருத்துகள்
கருத்துரையிடுக