சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவும் சிம்பிளான சில பழக்கங்கள்!
சிகரெட் புகைப்பதை எப்படி நிறுத்துவது?
நடக்கலாம் குதிக்கலாம் ஓடலாம்
பொதுவாக சிகரெட் பிடிப்பதற்கான துடிப்பு ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள்ளாகவே ஏற்படுகிறது. எனவே அந்த நேரத்தில் எழுந்து நடப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்லது. இதன்மூலம் உடனே சிகரெட் பிடிப்பதற்கான எண்ணம் ஏற்படாது. தினசரி உடற்பயிற்சி செய்வது என்பது மன அழுத்தத்தைப் போக்கும்.
புகைப்பதை எழுதுங்களேன்
எப்போது புகைப்பிடிக்க தோன்றினாலும் உடனே அதனை நோட்டில் எழுதி வையுங்கள். இதன்மூலம் எந்த நேரத்தில் சூழலில் புகைப்பது தொடங்குகிறது என்பதை அறியலாம். கொஞ்சம் பழங்கால டெக்னிக்காக இருந்தாலும் சூப்பரான வெற்றி சூத்திரம்தான். தயங்காமல் பயன்படுத்தலாம்.
ஆலோசனை
குழுவாக, தனியாக ஆலோசனை செய்யலாம். இதன்மூலம் பிறரின் அனுபவங்கள் இழப்புகள் ஆகியவை மற்றவருக்கு பாடமாக அமையும். போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கு குழு தெரபி கூட வழங்கப்படுகிறது.. ஒருவர் டூ ஒருவர் என ஆலோசனை செய்வது புகைப்பிடிப்பதில் பெரிய பலனை அளிக்காது. இணையத்தில் பல்வேறு ஆலோசனைகள் கிடைக்கின்றன. இதற்கென தொலைபேசி எண்களும் உள்ளன.
எடையைத் தூக்குங்கள்
உடனே பக்கத்திலிருக்கும் மனைவியை தூக்க கிளம்பிவிடாதீர்கள். உடற்பயிற்சி நிலையத்தில் உள்ள எடைக்கற்களைத்தான் சொல்லுகிறோம். கூடவே இதய தசைகளுக்கான கார்டியோவஸ்குலர் பயிற்சிகளும் செய்யலாம். இதன்மூலம் சிகரெட் குடிக்கும் எண்ணம் குறையும். ஏராளமான உடற்பயிற்சி செத்து சத்துகளை கரைத்தால் வீட்டு கேட்டை திறக்ககூட மனைவியை உதவிக்கு கூப்பிடும்படி ஆகலாம்.
நிகோடினுக்கு மாற்று
சிகரெட் பிடிப்பதை உடனே நிறுத்தினால் மனநலனிலும் உடலிலும் ஏராளமான மாற்றங்கள் ஏற்படும். அதனை எதிர்கொள்வது கடினம், தலைவலி, மனநிலை மாற்றம், கோபம் என பலதும் ஒயிட்போர்டு பஸ்ஸாக கிளம்பி வரும். இதைத் தடுப்பதற்காகத்தான் நிகோடின் சூயிங்கம், இ சிகரெட் என பல்வேறு சமாச்சாரங்கள் உள்ளன. நிறையப் பேர் சிகரெட்டை விட்டு நிகோடினின் மாற்றுக்கு அடிமையாகின்றனர்.
நாள் குறிப்போம்
சிகரெட்டை எப்போது விடப்போகிறோம் என்பதை பற்றி வளவளவென பேசாமல் அனனை எழுத்துப் பூர்வமாக எழுதி வைக்கவேண்டும். அதன் நிலைகள், என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை நண்பர்களுடன், குடும்பத்தினருடன் பேசவேண்டும். இதனால் அவர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். புகைப்பிடித்தலை கைவிட்ட நண்பர் யாரேனும் இருந்தால் அவரிடமும் டிப்ஸ் கேளுங்கள்.
குறுஞ்செய்தி
சாதாரண குறுஞ்செய்தியை இப்போது பலரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அதுபோன்று வசதியைப் பயன்படுத்தி புகைப்பிடிப்பவர்களுக்கு ஆலோசனை இதற்கு முன்பு அமெரிக்காவில் வழங்கப்பட்டுள்ளது. எனவே அங்குமிங்கும் அலையாமல் போனிலேயே உங்களுக்கு யோசனைகள் கிடைத்துவிடும்.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக