ஆர்க்டிக் பகுதியில் வாழும் பனிக்கரடி உறையாமல் இருப்பது எப்படி?

 

 

 

 

 Christmas, Christmas Decoration, Christmas Time

 

 

 

பனிக்கரடிகளின் சிறப்பம்சங்கள்


பனிக்கரடிகளின் உடலில் 4 அங்குல அளவிற்கு கொழுப்பு நிறைந்துள்ளதால், அதன் உடல் எப்போதும் கதகதப்பாக இருக்கிறது. அடுத்து, அதன் உடலிலுள்ள இரண்டு அடுக்கு முடிக்கற்றைகள். சிறிய முடிக்கற்றைகள் காற்றை உள்ளே அனுமதித்து உடல் வெப்பத்தை பராமரிக்க உதவுகிறது. நீண்ட முடிக்கற்றை, நீரில் வேட்டையாட கரடிகள் செல்லும்போது உடலுக்குள் நீர் செல்லாமல் வாட்டர் ப்ரூப்பாக உதவுகிறது.


பனிக்கரடிகள் இடைவேளை இன்றி, நூறு கி.மீ. தூரம் துணிச்சலாக நீந்தும்.


இதன் கண்களிலுள்ள கூடுதலான இமைகள் கடலில் இரையை வேட்டையாடும்போது தெளிவாக பார்க்க உதவுகிறது. எப்படியென்றால், பனிப்புயல் வீசும்போது கூட தனது இரையைத் தெளிவாக பார்க்கும் திறன்கொண்டது.


கரடியின் மூக்கு பார்க்க சாதாரணமாக இருந்தாலும் மோப்பம் பிடிப்பதில் சிறந்தவை. 30 கி.மீ தொலைவுக்குள் சீல்கள் இருந்தால் உடனே அதனை அறிந்துவிடும்.


இதன் முடியில் மற்றொரு ஸ்பெஷல் உள்ளது. அதுதான் அதன் ஹாலோ தன்மை. இதனால் கிடைக்கும் சூரியனின் வெப்பத்தை எளிதாக உடலுக்கு கடத்திக் கொள்ளமுடியும்.


இதன் பாதங்கள் பனிக்கட்டிகளுக்கு இடையில் சிறந்த ஷூக்கள் போல செயல்படுகின்றன. கடலில் வேட்டைக்கு கிளம்பும்போது, நீந்தவும் உதவுகின்றன.




கருத்துகள்