காதலியைத் தேடுவதற்காக தண்ணீர் கேன் போடும் இதய அறுவைசிகிச்சை வல்லுநர்! - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்

 

 

 

 

 

 

Doctor Stranger

 

 

 

 

டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்


10 எபிசோடுகள்


எம்எக்ஸ் பிளேயர் 

 

Written by:Park Jin-woo, Kim Joo
Directed by:Jin Hyuk, Hong Jong-chan

 

 

Sinopsis Doctor Stranger Episode 3 | Drama Populer

தண்ணீர் கேன் விற்பனை செய்பவன், குழந்தையின் உடைந்த விரலை சரி செய்கிறான். குழந்தையின் அப்பாவுக்கு ஆபரேஷன் செ்ய்துவிட்டு மாயமாகிறான். யார் அவன் என்பதை பார்வையாளர்கள் அறிந்தால் அதுதான் டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்.


இந்த தொடர் வெறும் காதல் மட்டும் கொண்டது அல்ல. வடகொரியா, தென்கொரியா என இருநாட்டு அரசியலும் தீவிரமாக பேசப்படுகிறது. இதில் எதிர்மறையாக திடமாக காட்டப்படும் நாடு வடகொரியாதான். இரு நாட்டு அரசியல்வாதிகளும் எப்படி மக்களை பயன்படுத்தி தங்கள் நலன்களை வளர்த்துக்கொள்கிறார்கள், அதற்கு பலியாகும் மனிதர்கள், அவர்களின் குடும்ப வாழ்க்கை என உணர்ச்சிகரமாக தொடரை எடுத்திருக்கிறார்கள்.


பார்க் குவான் பள்ளி சென்று கொண்டிருக்கும் சிறுவன். அவனது அப்பா, மியாங் சாங் மருத்துவமனையில் புகழ்பெற்ற இதயநோய் மருத்துவர். அவரை வடகொரிய அதிபருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வைக்க தென்கொரிய அரசியல்வாதி திட்டமிடுகிறார். அப்படி அவர் அங்கு செல்ல மியாங் சாங் மருத்துவமனை நிர்வாகம் அனுமதித்தால், அதன் பல்கலைக்கழக மருத்துவமனையாக தரம் உயர்த்திக்கொள்ள உதவுவதாக பேரம் பேசுகிறார். மருத்துவமனை தலைவரும் தன் நண்பர் என்று கூட பார்க்காமல் பார்க் குவானின் தந்தையை வேண்டுமென்றே ஒரு நோயாளியின் பிரச்னையில் இழுத்துவிட்டு அவரை வடகொரியாவுக்கு அனுப்ப உதவுகிறார். இதில் மற்றொரு நண்பர் சோயின் பங்கும் உண்டு

 

[HanCinema's Drama Review] "Doctor Stranger" Episode 2 ...

வடகொரியாவுக்கு தனது மகனுடன் செல்கிறார் பார்க்கின் தந்தை. சிகிச்சையை செய்தால் போரைத் தடுக்கலாம் என்ற சூழல். ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்தாலும் இதய நோய் மருத்துவரின் திறமையைப் பார்த்த அதிபர், அவரை அங்கேயே சிறைப்பிடித்து தங்க வைத்துக்கொள்கிறார். போரைத் தடுத்ததால் தென்கொரிய அரசியல்வாதி தேர்தலில் வென்று பிரதமராகிறார். மேலும் அவர் பார்க்கின் தந்தையை திரும்பிக்கூட பார்க்கவில்லை. வடகொரிய ராணுவ அதிகாரிகளுக்கும் தென்கொரிய அரசியல்வாதிகளுக்கும் தனிப்பட்ட சில ஒப்பந்தங்கள் இருந்தது பார்க்கின் தந்தைக்கு தெரியாது. இதனால் அவர் வடகொரியாவில் தனிமைப்பட்டு தனது மகனுடன் வாழ்கிறார். அங்கு ்பார்க்கிற்கு ஆறுதலாக இருப்பது ஜே என்ற சிறுமிதான். மெல்ல வளரும் இருவரும் ஒரே மருத்துவப்பள்ளியில் படிக்கிறார்கள். அதேதான். ...இருவரும் காதலில் விழுகிறார்கள்.


அதேநேரம் பார்க் குவானை அதிபரின் உடல்நலனை மட்டுமே பராமரிக்கும் மருத்துவமனைக்கு அழைக்கிறார்கள். அங்கு சென்றவர்கள் யாரும் வெளியே வரமுடியாது. அங்கேதான் காலத்திற்கும் இருக்கவேண்டும். மீறுபவர்கள் சுட்டுக்கொல்லப்படுவார்கள். பார்க் குவான் அதிபரின் மருத்துவமனைக்கு வரும் முன்னரே அவனது காதலியை ராணுவம் கைது செய்து லேபர் கேம்புக்கு அனுப்பி விடுகிறது. அவளை பின்னாளில் பார்க் குவான் சந்திக்கும்போது அவளது சிறுநீரகம் செயலிழந்து விடுகிறது. அவளை ஆபரேஷன் செய்து காப்பாற்றுவது பார்க் குவான்தான்.

அதேநேரம் அவனை நாட்டை விட்டு வெளியேறச்சொல்லும் அவனது தந்தை சுட்டுக்கொல்லப்படுகிறார்

 

Doctor Stranger Episode 11 - 닥터 이방인 - Watch Full Episodes ...

ஜேவை காப்பாற்றி சாதுரியமாக வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு செல்கிறான். ஆனால் அதற்குள் தென்கொரிய பிரதமர் ஆடும் அரசியல் ஆட்டத்தால் தனது காதலியை பறிகொடுக்கிறான். அதாவது, வடகொரிய தளபதி அவளை சுட்டுவிடுகிறான். அவள் அப்படியே பூ போல மிதந்து ஆற்றில் விழுகிறாள், மறைகிறாள். பார்க் குவானை தென்கொரிய அரசு சிறையில் போடுகிறது.


சில ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் பார்க் குவானுக்கு தண்ணீர் கேன் போடும் பெண் ஒருவள் உதவுகிறாள். அவளை தனது தங்கையாகவே நினைக்கிறான் பார்க் குவான். தனது வீட்டிலேயே மருத்துவமனை ஒன்றையும் நடத்தி வருகிறான். அதில் அவனும் அவனது தங்கையும் பணம் முதலீடு செய்துள்ளனர். பார்க் குவானை கண்காணிக்கும் பிரதமர் அலுவலக அதிகாரி அவனை வைத்து இதய அறுவை சிகிச்சையை பிரதமருக்கு செய்ய திட்டமிடுகிறார். அதற்கு அவன் மியாங் ஸாங் மருத்துவமனைக்கு செல்லவேண்டுமே? இதற்கான சம்பவங்கள் தற்செயலாக நடைபெறுகிறது. இதில் பார்க் குவான் மருத்துவராக மாறினானா? காணாமல் போன காதலி ஜே கிடைத்தாளா? பார்க் குவான் தென்கொரியாவில் இருப்பதற்கு என்ன காணணம்? அவனது வாழ்க்கை குலைந்து போக காரணமான பிரதமரை பலிவாங்கினானா என்ற கேள்விகளுக்கு பரபர வேகத்தில் பதில் சொல்லும் கொரிய தொடரே டாக்டர் ஸ்ட்ரேஞ்சர்.


நாயகனாக நடித்துள்ள பார்க் குவானைப் பார்த்தால், அலட்டலே இல்லாமல் நடிக்கும் தனுஷ் நினைவுக்கு வருகிறார். டாக்டர் ஓ வைப் பார்த்து கிராக்கு என கிண்டல் செய்வது, ஜே வை நினைத்து கண்ணீர் விடுவது, அவளை கண்டுபிடிக்க காசு செலவிடுவது. 50 காசுக்காக இதய அறுவைசிகிச்சைக்கு ஒப்புக்கொள்வதது, , சீரியசான நேரங்களிலும் ஜாலியாக கண்ணடித்து சிரிப்பது என தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்துகிற நடிகர் இவர்தான்.

Doctor Stranger Episode 2 - 닥터 이방인 - Watch Full Episodes ...

அதற்கடுத்து நகைச்சுவையில் ஸ்கோர் செய்வது, டாக்டர் மூன். தனது பதவியை ஜூனியரிடம் இழந்துவிட்டு அதனை பெற அப்பாவின் ஆசை என்று சொல்லி பார்க்கின் பின்னாலேயே அலைந்து மூக்கு உடைந்து ரத்தம் வர நிற்பது என இவர் வரும் காட்சிகளில் எல்லாம் காமெடி உத்தரவாதம்.


பெஸ்ட் டாக்டராக வேண்டுமா, குட் டாக்டராக வேண்டுமா என்று டாக்டர் ரொமான்டிக் வெப் தொடரில் ஒரு கேள்வியை கங் டம் ஜூ கேட்பார். அதற்கான பதிலை இத்தொடரில் கண்டுகொள்ளலாம்.


காதல் எல்எஸ்டி


கோமாளிமேடை டீம்



கருத்துகள்