இடுகைகள்

விதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பதன் காரணம்.....

படம்
      இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலை அதிகரிப்பது ஏன்? காலநிலை மாற்றம் மற்றும் மத்திய, மாநில அரசின் விவசாய கொள்கைகளால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாத பல நூறு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தின், மராத்வாடா பகுதியில் மட்டும் அறுநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். இதுபற்றிய தகவலை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களிலுள்ள பயிர்கள் அதீத மழைப்பொழிவால் அழிந்ததால், பெருமளவு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக காரணம் கூறப்படுகிறது. வேளாண்மை வல்லுநர்கள், தற்கொலையால் இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள். 2021ஆம் ஆண்டு வரையில் அடுத்தடுத்து ஆட்சியமைத்த மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தன. ஆனாலும் கூட மராத்வாடாவின் எட்டு மாவட்டங்களில் தற்கொலை செய்து இறந்த விவசாயிகளின் எண்ணிக்கை 80

மரபணுமாற்ற பருத்தியால் விவசாயிகள் கற்றதும், பெற்றதும்!

படம்
  அதிக உற்பத்திச் செலவு, குறைந்த வருமானம் -பிடி பருத்தியால் பாதிக்கப்படும் விவசாயிகள் மரபணு மாற்ற பருத்தியை உற்பத்தி செய்யும் விவசாயிகள்,   குறைந்துவரும் விளைச்சல், அதிக உற்பத்திச் செலவுகளை சந்தித்து வருகிறார்கள். இருபது ஆண்டுகளுக்கு முன்னர், விவசாயிகளுக்கு பிடி பருத்திப் பயிர் அறிமுகமானது. புழுத்தாக்குதலிலிருந்து பாதுகாப்பு, அதிக விளைச்சல், சந்தையில் அதிக விலை கிடைக்கும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ‘’சில ஆண்டுகளுக்குப் பிறகு பிடி பருத்தியின் உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. ஆனால் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை. நாங்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக பருத்தியை பயிரிட்டு வருகிறோம். 1995-2005 காலகட்டத்தில் பருத்தி பயிரிடல் உச்சகட்டத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாகத்தான் பிடி பருத்தி பயிரிடல் அதிகரிக்கத் தொடங்கியது. பிடி பருத்தி, நிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் என்ன செய்கிறது என்பது புதிராக விடை தெரியாததாகவே இருக்கிறது ’’ என்றார் தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த உப்பின் பெடாகெரி கிராமத்து விவசாயி சன்னபசப்பா மசுடி. இவர், பத்து ஆண்டுகளுக்கு   முன்னரே தன் நிலத்தில் பிடி பருத்தியை

ஆயிரம் மரங்களை வளர்த்த பொள்ளாச்சி அரசு உதவிபெறும் பள்ளி

படம்
  பொள்ளாச்சியில் ரெட்டியாரூர் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மாணவர்களை மரக்கன்றுகளை ஊன்ற வைத்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர். இவற்றை நட ஊக்கப்படுத்தியவர் விவசாய ஆசிரியர் டி பாலசுப்பிரமணியன்.   இதனை நட்டவர்கள் அனைவருமே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தானே? ஆயிரம் மரங்கள் இப்போது வளர்ந்துள்ளது ஆச்சரியம் என்றாலும் இதற்கான திட்டமிடல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கிறது. இதனை பள்ளி நிர்வாகம் முன்னெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் விதைகளை பெற்றிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமும் நிறைய விதைகளைப் பெற்றிருக்கிறது. விதைகளை முளைக்க வைத்து அவை முளைவிட்டதும் கிராமத்தினருக்கும், அருகிலுள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அரசுப்பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.  பள்ளியில் விளையும் காய்கனிகளை பறித்து சமைத்து சாப்பிட சமையல் அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்

குறைந்த நீரைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஸ்டேஷனரி பொருட்கள்! - சாந்தனு பிரதாப் சிங்

படம்
      சாந்தனு பிரதாப் சிங்     குறைந்த நீரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஸ்டேசனரி பொருட்கள் பொதுவாக அனைவருமே சூழல், சுத்தம், சுகாதாரம் என பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் அதெல்லாம் சாத்தியமில்லை என்று ஒற்றைச்சொல்லில் சொல்லிவிட்டு அவர்கள் பாட்டிற்கு நடந்து போய்க்கொண்டே இருப்பார்கள். இந்த வகையில் சாந்தனு பிரதாப் சிங் கொஞ்சம் மாறுபட்டவர். சமூகத்திற்கு என்னுடைய பங்கை செய்கிறேன் என்று சூழலுக்கு பாதிப்பில்லாத காகிதம், பென்சில் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து விற்று வருகிறார். உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தைச் சேர்ந்த இளைஞர் சாந்தனு. இவர் எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் பிடெக் படித்து முடித்தவர். அரசியல்வாதிகள், ஊடகங்கள் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பேசிக்கொண்டே இருப்பார்கள். அதனால் எந்த பிரச்னையும் தீராது. இதனை உணர்ந்து நானே களமிறங்கு என்னால் செய்ய முடியும் விஷயங்களைச் செய்து வருகிறன். என்கிறார். காகிதம், பேனா, பென்சில், ஸ்ட்ரா, மூங்கில் பிரஷ் ஆகியவற்றை சாகேஸ் என்ற பிராண்டில் விற்கிறார். காகிதங்களில் விதைகளை பதித்து சீட் பேப்பர் விற்பனையும் செய்கிறார். இதனால் காகிதங்கள் மண்