நவாஸூதின் சித்திக் நேர்காணல்
வாழ்வின் கடினமான தருணங்களே என்னை பக்குவப்பட்ட மனிதனாக மாற்றியது - நவாஸூதீன் சித்திக் மான்ஞ்சி திரைப்படம் நவாஸூதின் சித்திக்கை பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகராக ஏன் அவர் இருக்கிறார் என்பதை அனைவருக்கும் உணர்த்தியிருக்கிறது. அவர் நம்மோடு தன் வாழ்வின் போராட்ட காலங்களில் நான்கு ஐந்து நண்பர்களோடு தங்கி வாய்ப்புக்காக போராடி வந்த காலங்களில் வறுமையின் விளைவாக தான் கற்றதும் பெற்றதுமான அனுபவங்களே தான் யார் என்பதை உணர்த்தியதாக கூறுகிறார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான வேடங்களை ஏற்று நடிக்கும் உங்களை காண்பதற்காக மக்கள் திரையரங்கிற்கு ஆவலாக வருவது குறித்து எப்படி உணர்கிறீர்கள்? மக்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பது நல்ல விஷயம். ஏனெனில் அதுதான் என்னை வாழ வைக்கிறது. ஒவ்வொரு படமும் சிறு கீறல் போல தொடங்கியவைதான். பாராட்டு என்பது அவற்றினை எளிதில் திசைதிருப்பி விட முடியும். எனவே நான் இந்த பாராட்டுக்களை பெரிதாக நினைக்காமல் தவிர்த்துவிட்டு வேலையில் கவனமாக இருக்க முயல்கிறேன். எப்படி அதனை செயல்படுத்துகிறீர்கள்? நான் என்னுடைய பழைய நண்பர்களை சந