இடுகைகள்

ஆள்மாறாட்டம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆள் மாறாட்டத்தால் தங்கத்திருட்ட பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் பங்காருராஜூ- இதே கோல்ட் இஹெ

படம்
  இதே கோல்ட் இஹெ இயக்கம் - வீரு போட்லா இசை - சாகர் மகதி தலைப்பில் கூறியது போல சிரிக்கும் புத்தர் சிலை ஒன்றைத் திருடுகிறார் ஒருவர். சிலையை பறிகொடுத்த கும்பல் அதை தேடுகிறபோது, மாட்டுகிறவர்தான் பங்காரு ராஜூ. நேர்மையாக இருந்து வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வம்பும் வழக்குமாக இழுத்துவிடுபவர். தங்க கடத்தல் பிரச்னையில் மாட்டுகிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை.  படத்தில் சுனில் தான் நாயகன் என்பதால், காமெடியில் அடக்கி வாசிக்க அவரது  சக நண்பர்கள் எல்லோரும் அட்டகாசம் செய்கிறார்கள். குறிப்பாக தன் நண்பன் பங்காருவிடம் கூட புரோபெஸ்னலாக திருடும் சகலகலா சங்கர். இவர் வரும் காட்சிகள் மட்டும் தான் படத்தில் சற்று ஆறுதலாக இருக்கின்றன. மற்றபடி படத்தில் வரும் காட்சிகள் 70,80 கால திரைப்படங்களில் சற்றேறக்குறைய சுட்டதுதான்.  அம்மா சென்டிமென்ட் காட்சி, அவர் சுனிலை தனது மூத்தமகனாக ஏற்பது, அவரை அடிக்கும்போது சுனில் கண்கள் சிவப்பாவது, சுஷ்மா ராஜை கடத்திச்செல்லும்போது மெல்ல அவருக்குள் கோபம் வந்து அடிப்பது என படத்திற்குள் அவர்களை அவர்களே கிண்டல் செய்துகொள்கிறார்களா என நாம் யோசிக்கும் வகையில் நி

குற்றவாளியும், நல்லவனும் ஒரே உருவத்தில்! - முடிஞ்சா இவனப் புடி!

படம்
முடிஞ்சா இவனப்புடி இயக்கம்: கே.எஸ்.ரவிக்குமார் கதை: டி.சிவக்குமார் ஒளிப்பதிவு ராஜரத்தினம் இசை: இமான் கதை: சத்யம் நேர் வகிடு எடுத்து சீவிய நல்ல மனிதர். இவருக்கு எதிராக ஜெல் போட்டு வாரிய தலை, தொப்பி சகிதமாக ஊர்ப் பெருசுகளின் பணத்தைக் கொள்ளையடிக்கும் சாமர்த்தியசாலி சிவம். இருவரும் ஒருவரா, வேறு வேறா என்று காவல்துறை ஸ்கெட்ச் போட்டு கண்டுபிடிப்பதுதான் கதை. ஆஹா கிச்சா சுதீப் நன்றாக நடித்திருக்கிறார். என்ன அவர் பேச்சில்தான் தடுமாற்றமாக இருக்கிறது. தன்னுடைய குரலில் பேசுகிறாரா அல்லது ரஜினி போல மிமிக்ரி ஏதாவது செய்கிறாரா என்று கண்டுபிடிப்பதிலேயே படம் பாதி போய்விடுகிறது. நித்யா மேனன் இந்த படத்திற்கு என்ன செய்யமுடியுமோ அதை செய்கிறார். பிரகாஷ்ராஜின் போர்ஷன் சிறியதுதான் என்றால் கவனிக்க வைக்கிறார்.    ஐயையோ இதுபோல பணத்தைக் கொள்ளையடிக்கும் படம் என்றால், எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதை கொஞ்சமேனும் டீட்டெய்லாக சொல்லுவார்கள். இதில் படம் தொடங்கும்போது நடக்கும் கொள்ளையைத் தவிர்த்து வேறெங்கும் சிவத்தின் புத்திசாலித்தனத்திற்கு எந்த சாட்சியும் இல்லை. மேலு