ஆள் மாறாட்டத்தால் தங்கத்திருட்ட பிரச்னையில் மாட்டிக்கொள்ளும் பங்காருராஜூ- இதே கோல்ட் இஹெ

 







இதே கோல்ட் இஹெ

இயக்கம் - வீரு போட்லா

இசை - சாகர் மகதி





தலைப்பில் கூறியது போல சிரிக்கும் புத்தர் சிலை ஒன்றைத் திருடுகிறார் ஒருவர். சிலையை பறிகொடுத்த கும்பல் அதை தேடுகிறபோது, மாட்டுகிறவர்தான் பங்காரு ராஜூ. நேர்மையாக இருந்து வேலை செய்யும் இடத்தில் எல்லாம் வம்பும் வழக்குமாக இழுத்துவிடுபவர். தங்க கடத்தல் பிரச்னையில் மாட்டுகிறார். எப்படி அதிலிருந்து வெளியே வருகிறார் என்பதுதான் கதை. 

படத்தில் சுனில் தான் நாயகன் என்பதால், காமெடியில் அடக்கி வாசிக்க அவரது  சக நண்பர்கள் எல்லோரும் அட்டகாசம் செய்கிறார்கள். குறிப்பாக தன் நண்பன் பங்காருவிடம் கூட புரோபெஸ்னலாக திருடும் சகலகலா சங்கர். இவர் வரும் காட்சிகள் மட்டும் தான் படத்தில் சற்று ஆறுதலாக இருக்கின்றன. மற்றபடி படத்தில் வரும் காட்சிகள் 70,80 கால திரைப்படங்களில் சற்றேறக்குறைய சுட்டதுதான். 



அம்மா சென்டிமென்ட் காட்சி, அவர் சுனிலை தனது மூத்தமகனாக ஏற்பது, அவரை அடிக்கும்போது சுனில் கண்கள் சிவப்பாவது, சுஷ்மா ராஜை கடத்திச்செல்லும்போது மெல்ல அவருக்குள் கோபம் வந்து அடிப்பது என படத்திற்குள் அவர்களை அவர்களே கிண்டல் செய்துகொள்கிறார்களா என நாம் யோசிக்கும் வகையில் நிறைய காட்சிகள் உள்ளன. 

படத்தில் சுஷ்மா ராஜை புக் செய்துவிட்டு அவருக்கான பாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அவர் வரும் காட்சியில் பாதிநேரம் ஜோம்பி போல ஏதோ ஒரு திக்கில் போனைப் பார்த்தபடி நடந்துகொண்டே இருக்கிறார். இவரைத்தான் பங்காரு ராஜூ காதலிக்கிறாராம். அப்படியெனில் அவர் எந்தளவு மறைகழண்ட மனிதராக இருக்கவேண்டும். சுஷ்மா ராஜை விட படத்தில் நம்மை ஈர்ப்பவர், சுனில் வர்மாவின் காதலியாக அறிமுகமாகும் ரிச்சா பனாய் தான். அழகான உயிர்ப்புள்ள முகமும், வாளிப்பான உடலும் நடிகர் பிரிதிவி ராஜ் சொல்வது போல பேண்ட் போட மறந்து டவுசரே போட்டு சுற்றினாலும் கூட அழகாக இருக்கிறார். 

சாகர் மகதியின் இசையில் காதல் பாடல்கள் இரண்டு பரவாயில்லை. அதிலும் ரிச்சா பனாயை  ஓரங்கட்டி விடுகிறார்கள். இதனால் பாடலில் இருக்கும் வசீகரமும், கவர்ச்சியும் காணாமல் போய்விடுகிறது. 

படத்தின் இறுதிக்காட்சி  அடடா அப்பப்பா சொல்ல வைக்கிறது. எந்த புத்திசாலித்தனமும் இல்லாத பகுதி அது. ஏன் சுனில் முதன்மை நாயகராக மாறி பிறகு காமெடியன் மற்றும் வில்லன் ரோலுக்கு திரும்பினார் என்பதற்கு இந்த படமே சாட்சி. 

படத்தில் ஈர்ப்பது சகலகலா சங்கர், ரிச்சா பனாய் மற்றும் சாகர் மகதியின் இசை மட்டுமே. மற்ற விஷயங்கள் எல்லாம் இருக்கவேண்டுமே என இருக்கின்றன. 

விடுகதையோ இந்த வாழ்க்கை

கோமாளிமேடை டீம் 

நன்றி

யூட்யூப்

https://www.youtube.com/watch?v=poGw41lxswU


கருத்துகள்