மாற்றுப் பாலினத்தவர்களுக்கான திரைப்படங்கள்- பட்டியல்

 









ஃபிரன்ட் கவர்





ஹேப்பி டுகெதர்





ஹார்ட் பீட்ஸ் லவுட்




லவ் சைமன்


எ ஃபென்டாஸ்டிக் வுமன்

2017

டேனியல் வேகா நடித்துள்ள படம். அவர்தான் மெரினா. அவரது பார்ட்னர் திடீரென இறந்துபோகிறார். இருவருமே மாற்றுப்பாலினத்தவர்கள். இறந்துபோனவரின் குடும்பத்தினருக்கு மாற்றுப்பாலினத்தவர் என்றாலே ஆகாது. இந்த சூழ்நிலையை அவர் எப்படி சமாளிக்கிறார், மாற்றுப்பாலினத்தவர்களை சமூகம் எப்படி புரிந்துகொள்கிறது என்பதை சொல்லிய சிலிய படம். வெளிநாட்டு பட வரிசையில் ஆஸ்கர் பரிசு பெற்றது. 

டிஸ்குளோசர் 

2020

ஆவணப்படம். 


திரைப்படங்களில், சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவர்கள் எப்படி நடத்தபடுகிறார்கள் என்பதை அவர்களை வைத்தே பகிர்ந்துகொண்டால் எப்படி இருக்கும்? நெட்பிளிக்ஸின் ஆவணப்படம். வாய்ப்பு இருப்பவர்கள் பாருங்கள். 


ஃபிரன்ட் கவர் 2015

சீன நடிகர் ஒருவருக்கும், உடை வடிவமைப்பாளருக்கும் பற்றிக்கொள்ளும் ஒரினச்சேர்க்கை உறவு பற்றிய கதை. 


ஹேப்பி டுகெதர்

1997

இரு ஆண்களுக்கு இடையிலான ஓரினச்சேர்க்கை உறவு எப்படி வன்முறை கொண்டதாக மாறி, பிரிவு நேரிடுகிறது என்பதை சொல்லுகிற படம். ஹாங்காங் தொடங்கி அர்ஜென்டினா வரையில் செல்லும் இரு நண்பர்களின் பயணம்தான் திரைப்படத்தின் கதை. 


ஹார்ட்ஸ் பீட்ஸ் லவுட்

2018

இதில் இரு பெண்கள்தான் முக்கியமான பாத்திரங்கள். பால்புதுமையினரின் காதல் சொல்லும் படம். அடிப்படையில் படம் தந்தை, மகள் பாசத்தைத்தான் சொல்ல வருகிறது. மகளுக்கும், ரோஸ் என்ற பெண்ணுக்குமான காதல் படத்தில் சுவாரசியமாக இருக்கிறது. 



லவ் சைமன் 

2018

மாற்றுப்பாலினத்தவர்களைப் பற்றி பேசிய முக்கியமான ஜனரஞ்சகமான படம். சைமன், ஓரினச்சேர்க்கையாளர். பள்ளி மாணவராக இருக்கிறார். அவர் தன்னை அப்படியே ஏற்றுக்கொண்டு அதை வெளியில் கூறுவதுதான் கதை. இவரது அம்மாவாக ஜெனிஃபர் கார்னர் நடித்திருக்கிறார். 


மேலும் படங்களைப் பார்க்க நினைக்கிறீர்களா? லிங்க் இதோ

https://www.glamour.com/gallery/best-lgbt-movies?utm_source=nl&utm_brand=fye&utm_campaign=aud-dev&utm_mailing=thematic_fye_060222&utm_medium=email&bxid=5bd67a8d3f92a41245de1eaa&cndid=44971915&hasha=d4d9b6b4c903f9b1e8fe836183cbf641&hashb=09978a314e6ad2570f16f6dfdb86993562eb43c4&hashc=82b6ee2abd196808b6b103e5f95ec7090b381f174d1b5bad1633efe3d1a583ca&esrc=FYL_SEG_APR18&sourcecode=thematic_fye&utm_term=Thematic_FYE



கருத்துகள்