இடுகைகள்

துணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊசி மூலம் புதிய உறவு அமைப்போம்!

 நல்ல சேதி ஊசி மூலம் உறவுகளை இணைப்போம்! நம் அன்புக்கு உரியவர்கள், தையல்காரர்களாக, தச்சு வேலை செய்பவர்களாக, மண்பாண்டங்களில் ஏதேனும் பொருட்களை சுயமாக உருவாக்குபவர்களாக இருக்கலாம். இப்படியானவர்கள் பலரும் நோய் காரணமாக, வயது மூப்பு காரணமாக தாங்கள் பொழுதுபோக்காக அல்லது தொழிலாக செய்து வந்த வேலைகளை செய்யமுடியாமல் போவதுண்டு. தீவிரமாக இயங்குபவர்கள் திடீரென தங்கள் செயல்பாட்டை முடக்கிக்கொண்டு சக்கர நாற்காலியில் வலம் வந்தால்... அல்லது மரணமடைந்து விட்டால் அவர்களுடைய குடு்ம்பத்தினருக்கு எப்படியிருக்கும்? அதுபோன்ற அதிர்ச்சியைக் குறைக்க லூஸ் எண்ட்ஸ் என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொண்டூழிய நிறுவனம், துணிகளை தைப்பவர்கள் யாராவது முடிக்காமல் விட்ட துணிகள் பற்றி தகவல் கொடுத்தால், அவற்றை வாங்கி தைப்பவர்களிடம் கொடுத்து அதை நிறைவு செய்து வழங்குகிறது. இதில், நிறைவு செய்யாத துணிகள், அதை நிறைவு செய்து கொடுப்பவர்கள் என யாரும் யாருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம். இதில் இணைபவர்கள் அனைவரும் மறைந்த தம் அன்புக்குரியவர்களின் நினைவாக, துணிகளைத் தைக்கிறார்கள். தைக்கும் கோரிக்கையை...

நீரில் நனைந்தால் உடையின் நிறம் அடர்த்தியாக தெரிவது ஏன்?

படம்
மிஸ்டர். ரோனி துணி துவைக்கும்போது அல்லது மழை பொழியும்போது உடை எப்படி மிகவும் அடர்த்தியான நிறமாக மாறுகிறது? மழையை ரசித்து நனைந்துகொண்டு சாலையில் சென்று இருப்பீர்கள் போல. மழைநீரில் நனையாமல் நின்றிருந்தால் இதுபோல கேள்விகள் பிறந்திருக்காது அல்லவா? நீர், உடை இழைகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறது. அதில் ஒளி பட்டு எதிரொளிப்பதால், உடையின் நிறம் அடர்த்தியானதாக தெரிகிறது. இதுபற்றி வெலிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் லெக்னர், மைக்கேல் டோர்ஃப் ஆகியோர் ஆராய்ச்சி செய்து இந்த அரிய உண்மையை கண்டுபிடித்துள்ளனர். நன்றி - பிபிசி