ஊசி மூலம் புதிய உறவு அமைப்போம்!

 நல்ல சேதி


ஊசி மூலம் உறவுகளை இணைப்போம்!


நம் அன்புக்கு உரியவர்கள், தையல்காரர்களாக, தச்சு வேலை செய்பவர்களாக, மண்பாண்டங்களில் ஏதேனும் பொருட்களை சுயமாக உருவாக்குபவர்களாக இருக்கலாம். இப்படியானவர்கள் பலரும் நோய் காரணமாக, வயது மூப்பு காரணமாக தாங்கள் பொழுதுபோக்காக அல்லது தொழிலாக செய்து வந்த வேலைகளை செய்யமுடியாமல் போவதுண்டு. தீவிரமாக இயங்குபவர்கள் திடீரென தங்கள் செயல்பாட்டை முடக்கிக்கொண்டு சக்கர நாற்காலியில் வலம் வந்தால்... அல்லது மரணமடைந்து விட்டால் அவர்களுடைய குடு்ம்பத்தினருக்கு எப்படியிருக்கும்?

அதுபோன்ற அதிர்ச்சியைக் குறைக்க லூஸ் எண்ட்ஸ் என்ற தன்னார்வ நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தொண்டூழிய நிறுவனம், துணிகளை தைப்பவர்கள் யாராவது முடிக்காமல் விட்ட துணிகள் பற்றி தகவல் கொடுத்தால், அவற்றை வாங்கி தைப்பவர்களிடம் கொடுத்து அதை நிறைவு செய்து வழங்குகிறது. இதில், நிறைவு செய்யாத துணிகள், அதை நிறைவு செய்து கொடுப்பவர்கள் என யாரும் யாருக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசம். இதில் இணைபவர்கள் அனைவரும் மறைந்த தம் அன்புக்குரியவர்களின் நினைவாக, துணிகளைத் தைக்கிறார்கள். தைக்கும் கோரிக்கையை விடுக்கிறார்கள். இப்படி தைப்பதன் வழியாக புதிய உறவுகள் உருவாகின்றன என்பதே ஆச்சரியமான விஷயம்.  


ஸ்வெட்டர் ஒன்றை ஒருவரின் அம்மா தைத்துக்கொண்டிருக்கும்போது, வாதம் தாக்குகிறது. அவர், பின்னாளில் கை கால்களை சரியாக இயக்க முடியாதபடி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி நாட்களை கடத்தும்படி ஆகிறது. சில காலத்திற்குப் பிறகு, அவர் இறந்துவிட்டாலும் கூட அவர் தொடங்கி முடிக்காமல் விட்ட ஸ்வெட்டரை அவரது குடும்பத்தினர் பார்க்கும்போதெல்லாம் மனதில் வலி மின்னலென வந்துபோகும் இல்லையா? அதைத் தீர்க்கும் விதமாக லூஸ் எண்ட்ஸ் தன்னார்வ நிறுவனம் செயல்படுகிறது. இன்ஸ்டாகிராமில் பொழுதுபோக்காக அல்லது தொழிலாக செய்யும் தையல் கலைஞர்கள் தங்களை பதிவு செய்துகொண்டால் போதுமானது. அவர்களை லூஸ் எண்ட்ஸ் நிறுவனம் தொடர்பு கொண்டு, வேலையை முடித்து தர கோருகிறது. இதில், தைத்து முடிக்காமல் உள்ள துணியை கொடுப்பவர், அதை தைப்பவரிடம் வீடியோ வழியாக உரையாடும் வசதியையும் லூஸ் எண்ட்ஸ் நிறுவனத்தினர் செய்து கொடுக்கிறார்கள். 

மூலம்

எ டைட் நிட் கம்யூனிட்டி - மேகி கார்டன்

ரீடர்ஸ் டைஜஸ்ட்

#looseends #needle #help #feelings #memories #family #instagram #tears #fullfilments #knitt community 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!