வருத்தமோ குற்ற உணர்ச்சியோ கொள்ளாத இந்துஸ்தானத்தின் புதிய விதிகள்!

 





இந்தியா, இந்துஸ்தானாக மாறத் தொடங்கிவிட்டது. இனி என்னென்ன விஷயங்களை நாம் நாளிதழ்களில் பார்ப்போம். அல்லது பார்க்க கட்டாயப்படுத்தப்படுவோம் என்பதைப் பற்றிய கற்பனை இது. அதேசமயம் சில விஷயங்கள் நடந்துகொண்டும் இருக்கலாம். 


வானொலிகளில் ஆன்மிக பாடல்கள் முழுக்க இந்து கடவுள்களைப் பற்றியதாகவே இருக்கும். சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கான பாடல்கள் ஒலிபரப்பப்படாது. மக்களிடம் வரிகளை வாங்கித்தானே அரசு ஒலிபரப்பு நிறுவனம் இயங்குகிறது என்று கூறினால், நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். 


அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், தேசத்தை முன்னேற்ற விரும்புவது மக்களின் தோளில்தான் உள்ளது. எனவே, அதிக விலை கொண்ட தரமற்ற உள்நாட்டு பொருட்களை மட்டுமேதான் வாங்கவேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ இனிமேல் அப்படித்தான். இதை சரிபார்க்க உறுதிப்படுத்த மதவாத கட்சியின் துணை அமைப்புகள் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குள் வருவார்கள். சோதனையிடுவார்கள்.  கூடுதலாக குளிர்பதனப்பெட்டி சோதனை தனி. சமையல் அறையில், இந்து மக்களுக்கான இறைச்சி மட்டுமே இருக்கவேண்டும்.


சிறுபான்மையினர் அனைவரும் தனியாக கூடாரம் ஒன்றில் அல்லது பாழ்பட்ட கட்டிடங்களி்ல் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களோடு சனாதன தர்மப்படி தலித்துகளும், பழங்குடிகளும் அடைக்கப்படுவார்கள். இவர்கள் எந்த ஒரு வணிகத்திலும் ஈடுபட அனுமதி கிடையாது. இவர்களை யாரும் வேலைக்கு வைத்துக்கொள்ளவும் கூடாது. 


வானொலி, தொலைக்காட்சிகள் இந்துக்களுக்கு என தனியாக புனிதப்படுத்தப்பட்ட தொலைபேசி எண்ணும், சிறுபான்மையினருக்கு தனி எண்ணும், தீண்டப்படாத சூத்திரர்களுக்கு தனி எண்ணும் வழங்கப்படும். அதைத்தான் அவர்கள் பயன்படுத்தவேண்டும். 


பல்வேறு விஷயங்களோடு சிலந்தி வலை போல இணைக்கப்படும் அடையாள அட்டையில் இனி சாதி, மதம் ஆகிய அடையாளங்களும் இடம்பெறும். இதனால் கலவரம் நடைபெறும்போது ஒவ்வொருவரின் இடுப்புத்துணியை அவிழ்க்கும் கடினபணி குறையும். 


மாதம்தோறும் தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் இத்தனை பேர்கள் கொல்லப்படவேண்டும் என பட்டியலை அரசே வெளியிடும். தாய் அமைப்போடு இணைந்துள்ள பல்வேறு இந்து அமைப்புகள் இலக்கை நிறைவேற்றினால் பரிசுகள் வழங்கப்படும். வீடுகளை தீக்கிரையாக்குதல், மாட்டிறைச்சியை கண்டறிதல், பாலியல் வல்புணர்வுக்கு சிறப்பு பரிசுகள் உண்டு. 


இந்து அரசுக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு அரசு பதவிகள் உண்டு. அதற்கு எதிராக இயங்குபவர்களுக்கு படுகொலை, செருப்பு வீச்சு, இணைய கேலி சித்திரவதை, போலி வழக்குகள், அமலாக்கத்துறை சோதனை, வருமான வரித்துறை சோதனைகளுக்கு உள்ளாக நேரிடும். 


தாய் அமைப்பின், சகோதர உதிரி அமைப்புகளின் வன்முறை, கலவரங்களை பொறுத்துக்கொள்பவர்களை ஆட்சித்தலைவர் சிறந்த பொறுமைசாலி என பாராட்டுவார். ஆனால் தாக்குபவர்களை ஊக்குவித்து பரிசுகளை வழங்குவார். இதுபற்றி கேள்வி கேட்பவர்கள் பத்திரிகையாளர்களோ, கல்வியாளர்களோ யாராக இருந்தாலும் விசாரணையின்றி தேசதுரோக சட்டப்படி சிறையில் தள்ளப்படுவார்கள். 


தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் வீடுகள் அனைத்தும் தனி அடையாளங்களால் குறிக்கப்படும். அவர்கள் தினசரி வெளியே வந்து புழங்கும் நேரம் வரையறுக்கப்படும். அதை மீறுபவர்கள், தாய் அமைப்பின் தொண்டர்களால் நெருப்பிட்டு எரிக்கப்படுவார்கள். வீடு தீக்கிரையாக்கப்படும். பெண்கள் வல்புணர்வு செய்யப்படுவார்கள். 


சிறுபான்மையினர் தேசப்பற்றை நிரூபிக்கும் வண்ணம் தினசரி, இந்து கடவுள் துதிகளை பாடவேண்டும். குறிப்பாக இஸ்லாமியர், இஸ்லாமிய நாடுகளை கடுமையாக வெறுக்கவேண்டும். இந்துக்களை விட இஸ்லாமியருக்கு சொத்துவரி ஆறுமாதங்களுக்கு ஒருமுறை உயர்த்தப்படும். கட்டாதோருக்கு மின்சார இணைப்பு, குடிநீர் வசதி துண்டிக்கப்படும். 


இந்துநாட்டில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர் முக்கியத்துவம் இல்லாத மக்கள். எனவே, இவர்களுக்கு கல்வி, வங்கிச்சேவை, அரசு சேவைகள் வழங்கப்படாது. நெடுஞ்சாலையில் வாகனங்களை இயக்க சிறுபான்மையினர் தனி அனுமதி அட்டையைப் பெறவேண்டும். 


எங்கு மதக்கலவரம் நடக்கிறதோ அங்கு இணைய இணைப்பு தடை செய்யப்படும். இதன்மூலம் இந்துஸ்தான பெருமை காக்கப்படும். கலவரம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு அரசு தொலைக்காட்சி அங்கு நடந்தவற்றை ஒளிபரப்பும். அரசின் ஓடிடி தளத்தில் பாலியல் வல்புணர்வு வீடியோக்கள் சந்தா வசதியுடன் வெளியாகும். 


நாடாளுமன்றம் மந்தமாக அலுப்பூட்டும் விதமாக இருப்பதால் அக்கட்டிடத்தை பூட்டிவிட்டு, சட்டங்கள் கோவில்கள் அல்லது சாமியார் மடங்களில் நிறைவேற்றப்படும். 


கோவில்களிலுள்ள பார்ப்பன பூசாரியே இனி கிராமத் தலைவராக இருப்பார். அவருக்குப் பிறகு அவருடைய மகன் வருவார். கிராமசபை தேர்தல்கள் வழியாக சனாதன தர்மம் பாதிக்கப்படுவதால், இனி தேர்தல் ஏதும் நடத்தப்படாது. 


சட்டம்தான் நாட்டை ஆளவேண்டும். மதவாத அரசுக்கு எதிரான தீர்ப்புகளை நீதிபதி வழங்கினால் அவர் மீது செருப்பு, அமிலம், மலம் வீசப்படும். இதைப் பொறுப்பவர்களை நாட்டின் ஆட்சித்தலைவர் கட்டி அணைத்து பாராட்டுவார். 


மதவாத கட்சி, பணத்தை மக்களுக்கு முழுக்க விநியோகம் செய்தபிறகு தேர்தல் நடத்தப்படும். எதிர்க்கட்சிகளுக்கான பட்டன்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இருக்காது. ஒரே பட்டன்தான். அதுவும் மதவாத கட்சிக்கானது மட்டுமே. தேர்தல் கமிஷன் தேர்தல் நடைபெறும் நாளில் கூட வாக்காளர்களை சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். அதற்கான ஜனநாயக அதிகாரம் அதற்குண்டு. 

புகைப்படங்கள் - குன்மங்கா.காம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!