இடுகைகள்

யுனெஸ்கோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்விட்சர்லாந்தின் அழகான இடம் - ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச்

படம்
  ஜங்க்ஃபிராவு அலெட்ஸ்ச் அமைந்துள்ள இடம் – ஸ்விட்சர்லாந்து யுனெஸ்கோ அங்கீகாரம் 2001 டிப்ஸ் மலையேற்றம் செய்ய நினைத்துள்ளவர்கள், அனென்ஹட் எனும் இடத்திற்கு செல்லலாம். இங்கு நல்ல உணவும், மலைகளை பார்க்கும் கோணமும் சிறப்பாக அமைந்துள்ளது.     ஸ்விட்சர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைப்பகுதி. அரசால் பாதுகாக்கப்பட்டபகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதியின் பரப்பு 823 சதுர கிலோமீட்டர் ஆகும். இங்கு பார்க்க வேண்டிய சிகரங்கள் என இரண்டைக் கூறலாம். ஒன்று, ஜங்க்ஃபிராவு மலைச்சிகரம். இதன் உயரம், 4,158 மீட்டர் ஆகும். ஃபின்ஸ்டெரா ஹார்ன் என்ற மலைச்சிகரம் இதை விட உயரமானது இங்கேயே அமைந்துள்ளது. ஆலெட்ஸ் மலைத்தொடர் இருபத்து மூன்று கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்டுள்ளது. பெரும்பாலும் இங்குள்ள மலைத்தொடர்களுக்கு வருபவர்கள் சாதாரண சுற்றுலா பயணிகள் அல்ல. பெரும்பாலும் மலையேற்ற வீரர்கள்தான் வருகிறார்கள். ஸ்விட்சர்லாந்து நாட்டின் இந்த மலைப்பகுதி மிகவும் பன்மைத்தன்மை கொண்டது. பசுமையான புல்வெளி, பனி சூழ்ந்த மலைகள், மலையில் உள்ள ஏரிகள் என பார்த்து ரசிக்க ஏராளமான இடங்கள் உள்ளன. மலையேற்

ஐஸ்லாந்தில் அமையப்பெற்ற அழகிய தேசியப்பூங்கா!

படம்
  திங்வெல்லிர் அமைந்துள்ள இடம் – ஐஸ்லாந்து கலாசார அங்கீகாரம் பெற்ற ஆண்டு – 2004 ஐஸ்லாந்து நாட்டில் அமைந்துள்ள பழமையான தேசியப் பூங்காவின் பெயர் திங்வெலிர். 930ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு மாற்றங்களைக் கண்டு வந்துள்ள இடம் இது. இரண்டு மலைச்சிகரங்களுக்கு நடுவில் அமைந்துள்ள அல்மனாக்ஜாவில் தேசியப் பூங்கா உள்ளது. நாட்டின் முதல் ஜனநாயக நாடாளுமன்றமும் இங்குதான்   முதன்முதலில் உருவாகி இயங்கி வந்தது. வடக்கு அட்லாண்டிக் நடுவில் உள்ள தீவை நார்ஸ் என்பவர் கண்டுபிடித்தார். இதற்கான காலம் அறுபது ஆண்டுகள்.   1262ஆம் ஆண்டு நார்வே ஐஸ்லாந்தை கட்டுப்படுத்தி ஆண்டது. திங்வெல்லிர் என்ற இடமானது கிறிஸ்துவ மக்களுக்கான புனித இடம். இங்குள்ள மக்கள் எந்த வன்முறையும் இல்லாமல் தங்கள் மதத்தை மாற்றிக்கொண்டனர். இங்கு செல்பவர்கள் வட அமெரிக்க கண்டத்தட்டு, ஐரோப்பிய கண்டத்தட்டு என இரண்டிலும் பயணிக்க முடியும்.அட்லாண்டிக்கின் நடுப்பகுதியில் நீளமான மலைத்தொடர்களைக் கொண்ட நாடு ஐஸ்லாந்து. ஆக்சாரா என்ற ஆறு இங்கே ஓடுகிறது. அல்மனாக்ஜாவிலிருந்து திங்வல்லவட்டன் எனும் இடத்திற்கு அருவியாக மாறி செல்கிறது. திங்வல்லவட்டான் எனும் இயற்கை

தொன்மையான இடங்களைக் கொண்ட கோட்டார்!

படம்
  கோட்டார் அமைந்துள்ள இடம் மான்டெனெக்ரோ குடியரசு கலாசார இடமாக அறியப்பட்ட ஆண்டு 1979 என்ன செய்யலாம் கடல் பகுதியில் படகு ஒன்றை வாடகைக்கு பிடித்து ஜாலியாக டூர் செல்லலாம்   கோட்டார், அட்ரியாடிக் கடல்பகுதியில் அமைந்துள்ளது. துறைமுகம் அமைந்துள்ள பகுதி நீங்கள் கனவில் காணும் காட்சி போல அழகாக அமைந்துள்ளதுதான் சிறப்பானது. நீர்பரப்பு அதற்கு அருகில் உயர்ந்துள்ள மலைப்பகுதிகள் என பார்க்க பிரமிக்க வைக்கும் காட்சிகளை இங்கு காணலாம். ரோமன் கால கட்டிடங்கள், அகலமான சாலைகள், மத்திய காலகட்டத்தில் கட்டப்பட்ட சுவர்கள், தேவாலயங்கள் என பார்த்து வியப்பு கொள்ள மகிழ நிறைய இடங்கள் உள்ளன. கோட்டார் பகுதி, பதினைந்தாம், பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியின் பரப்பு, 14,600 சதுர கிலோமீட்டராகும். இந்தியாவில் தொன்மையான இடங்களை பாதுகாக்கிறோம் என சங்கர் சிமெண்டை குலைத்து பூசுவார்கள் அல்லவா, அந்த மாதிரி இல்லாமல் உண்மையாகவே தங்களது பாரம்பரிய இடங்களை பாதுகாக்க மெனக்கெடுகிறது அரசு. நகரத்தின் முக்கியமான கட்டிடங்களை சிறப்பாக மறு புனரமைப்பு செய்து பாதுகாக்கிறார்கள். கோட்டார் கடற்புறம் மட்டுமல்லாது அதன்