தொன்மையான இடங்களைக் கொண்ட கோட்டார்!
கோட்டார்
அமைந்துள்ள
இடம்
மான்டெனெக்ரோ
குடியரசு
கலாசார இடமாக
அறியப்பட்ட ஆண்டு 1979
என்ன செய்யலாம்
கடல் பகுதியில்
படகு ஒன்றை வாடகைக்கு பிடித்து ஜாலியாக டூர் செல்லலாம்
கோட்டார்,
அட்ரியாடிக் கடல்பகுதியில் அமைந்துள்ளது. துறைமுகம் அமைந்துள்ள பகுதி நீங்கள் கனவில்
காணும் காட்சி போல அழகாக அமைந்துள்ளதுதான் சிறப்பானது. நீர்பரப்பு அதற்கு அருகில் உயர்ந்துள்ள
மலைப்பகுதிகள் என பார்க்க பிரமிக்க வைக்கும் காட்சிகளை இங்கு காணலாம். ரோமன் கால கட்டிடங்கள்,
அகலமான சாலைகள், மத்திய காலகட்டத்தில் கட்டப்பட்ட சுவர்கள், தேவாலயங்கள் என பார்த்து
வியப்பு கொள்ள மகிழ நிறைய இடங்கள் உள்ளன.
கோட்டார்
பகுதி, பதினைந்தாம், பதினேழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியின் பரப்பு,
14,600 சதுர கிலோமீட்டராகும். இந்தியாவில் தொன்மையான இடங்களை பாதுகாக்கிறோம் என சங்கர்
சிமெண்டை குலைத்து பூசுவார்கள் அல்லவா, அந்த மாதிரி இல்லாமல் உண்மையாகவே தங்களது பாரம்பரிய
இடங்களை பாதுகாக்க மெனக்கெடுகிறது அரசு. நகரத்தின் முக்கியமான கட்டிடங்களை சிறப்பாக
மறு புனரமைப்பு செய்து பாதுகாக்கிறார்கள்.
கோட்டார்
கடற்புறம் மட்டுமல்லாது அதன் நகர்ப்புறமும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக உள்ளது.
பழைய நகரத்தின் வழியாக செல்லும்போது நிறைய பழமையான கதீட்ரல், தேவாலயங்கள், நேரான சாலைகள்,
மறைந்துள்ள சந்தைகள் ஆகியவற்றைப் பார்க்கலாம்.
பழைய நகரத்தில்
நுழையும்போதே அதன் வாசலில் தொன்மையான மணிக்கூண்டைப் பார்க்கலாம். இங்குள்ள நெப்போலியன்
திரையரங்கம், மாரி டைம் அருங்காட்சியகம் முக்கியமானவை. அருங்காட்சியகத்தில் கப்பல்கள்,
ஆயுதங்களை கண்காட்சியாக வைத்திருக்கிறார்கள். இங்கு பெராஸ்ட் என்ற நகரத்திற்கு படகு
மூலம் சென்றால் தீவில் பார்க்க நிறைய நல்ல இடங்கள் உண்டு. பத்து நிமிடங்கள் படகில்
செல்லும்போது நன்கு விரிவான வடிவத்தில் கோட்டார் பகுதியை நீங்கள் பார்த்து மகிழலாம்.
நடந்து சென்றால்
நிதானமாக ஊரைப் பார்க்க ஒரு நாள் ஆகும். இல்லை கோவிலுக்கு செல்கிறார்களே அதுபோல செல்லவேண்டுமென்றால்
பேருந்து வசதியும் உண்டு. எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.
வேர்ல்ட்
கிரேட்டஸ்ட் ஹெரிடேஜ் சைட்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக