கணவன் வல்லுறவு செய்து பெண்களைக் கொல்ல ஆதரவு தந்த அன்பு மனைவி
இங்கிலாந்தில்
நடைபெற்ற உண்மைக்கதை இது. அங்கே வாழ்ந்த ஃபிரெட் அவரது மனைவி ரோஸ் ஆகியோர் இணைந்து
இருபது ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட பெண்களை வல்லுறவு செய்து கொன்று புதைத்து வந்தனர்.
வீட்டின் கீழ்த்தளத்தில் பிணங்களைப் புதைத்தவர்கள் அதற்கு மேல் கற்களைப் பதித்து மேல்தளத்தில்
பிள்ளைகளை படுத்து தூங்க வைத்திருந்தனர். ஃபிரெட் மீது அவரது மகளே வல்லுறவு புகாரைக்
கொடுத்தபோதுதான், சமூகநலத்துறைக்கு அவர்கள் மீது சந்தேகம் வந்தது. ஆளைப்பார்த்தால்
அழகு வேலையப் பார்த்தால் எழவு என்று சொல்லுவார்கள். அதேபோலத்தான் ரோஸ் குடும்பம் இருந்த்து.
ஃபிரெட் மூலம் ரோஸிற்கு எட்டு பிள்ளைகள் இருந்தனர். அவர்களில் பெண் குழந்தைகளை வல்லுறவு
செய்ய ரோஸ் மேரி அனுமதித்த கோரம் யாரும் நினைத்தே பார்க்காதது.
சமூக
செயல்பாட்டாளர்கள் ரோஸின் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் ரோஸ் விபச்சாரம் செய்து
சம்பாதித்து வந்தது தெரிந்தது. வீட்டில் பாலியல் விளையாட்டுகளை விளையாடும் பொருட்கள்
நிறைய இருந்தன. குழந்தைகளை விசாரித்தபோது ஹெதர் என்ற சிறுமி சில ஆண்டுகளுக்கு முன்னர்
காணாமல் போய்விட்டாள் என புகார் கூறினர். இதைப்பற்றி கேட்டபோது ஹெதர் போல புதைத்துவிடுவோம்
என ஃபிரெட் தம்பதி மிரட்டியிருக்கிறார்கள். பிறகுதான் வீட்டின் தளத்தை தோண்டி பார்க்க
காவல்துறைக்கு தோன்றியது. தோண்டிப் பார்த்தால் ஹவுஸ் ஆஃப் ஹாரர் என தலைப்பிட்டு எழுதுவதற்கான
நிறைய விஷயங்கள் கிடைத்தன. முதல் மனைவி, தனது உடல் பசிக்கு இணங்கிய, இணங்காத நிறைய
பெண்களை ஃபிரெட் கொன்று புதைத்து வைத்திருந்தார்.
உண்மையை
காவல்துறை கண்டுபிடித்ததும் ரோஸ் கொலைகளைப் பற்றி ஏதும் தெரியாது என வாக்குமூலம் கொடுத்தார்.
ஃபிரெட் ஏற்கெனவே சொல்லிக்கொடுத்த தந்திரமான முறை என காவல்துறை விசாரணையில் கண்டுபிடித்தனர்.
இறந்தவர்களின் உடலில் கை, கால் எலும்புகள் மட்டும் இல்லை. எங்கே என்று பார்த்தால் ஃபிரெட்
அதை புனிதமான பொருட்களாக கருதி எடுத்து பத்திரப்படுதித வைத்திருந்தார். பெற்றோருக்கு
எதிரான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டிற்கு சாட்சியாக அவர்களின் மகளான அன்னா மரியா
என்பவரே நீதிமன்றத்திற்கு வந்து உண்மையை உலகிற்குச் சொன்னார். இதுபோல கொடூரங்களை தம்பதியினர்
ஏற்றுக்கொண்டு செய்வதை புரிதலுடன் செய்யும் குற்றச்செயல் என உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக