கொலை செய்வதற்கு காரணம் தேவையில்லை! - கொலைகாரர்களின் உளவியல் ரகசியம்

 









அசுரகுலம்

ரத்த சாட்சி 1.0

கொலை செய்வதற்கான காரணங்கள் என்பதை காவல்துறையினர் எப்போதும் தேடுவார்கள். ஆனால் அப்படியெல்லாம் எந்த காரணமும் இல்லை என்று சொல்லும் குற்றவாளிகள் உலகில் உண்டு. அவர்களில் ஒருவர்தான் கில்மோர். இவர், 1976இல் எரிபொருள் நிலையத்திற்கு துப்பாக்கியுடன் சென்றார். அங்கு பணியாற்றிய மேக்ஸ் என்பவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். அவரும் பணிந்தார். கையில் உள்ள, ட்ராயரில் உள்ள பணத்தைக் கூட தர நினைத்தார். ஆனால் கில்மோர் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்பட வில்லை. முட்டிபோட்டு உட்காரவைத்து பின்புறத்தில் இருந்து சுட்டுக்கொன்றவர், அதை தனக்கும் தன்னை விட்டுச்சென்ற காதலிக்குமான நினைவுப்பரிசாக நினைத்தார்.

இதற்குப் பிறகு அப்படியே சென்றவர், மோட்டல் ஒன்றில் நுழைந்தார். அங்கு இருந்தவரையும் துப்பாக்கி காட்டி மிரட்டியவர், அவர் அதற்கு பணிந்தவுடன் அவரையும் கொன்றார். கில்மோரை அவரது உறவினரே காட்டிக்கொடுத்தார். எதற்காக அந்த கொலை செய்தார் என்றால் தான் தொடர்ச்சியாக கொலை செய்யவேண்டும். மிரட்டிய விவகாரம் தெரிந்தால் காவல்துறை அவரை கைது செய்துவிடும் என கில்மோர் நினைத்தார். மூன்றாவது கொலை செய்வதற்கு முன்னரே காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

டேவிட்டின் அம்மா, அவருக்கு பிடித்தமான அனைத்தையும் அவரிடமிருந்து பிடுங்கினார். இதனால் ஏற்பட்ட வருத்தம் அப்பாவியான மூன்று சிறுவர்களை கொல்லும் அளவுக்கு சென்றது. உண்மையில் அந்த சிறுவர்கள், அப்பாவிகள். நல்லவர்களும் கூட. கொல்வதற்கு உண்மையில் தகுதியே இல்லாதவர்கள். இருந்தாலும் நான் அவர்களைக் கொன்றேன். அதற்கு எந்த காரணமும் இல்லை. இதற்கு நான் வளர்ந்த சூழல், பெற்றோர், மரபணு என எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை என பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தார். ஐந்து கொலைகளை செய்தேன் என சொன்னார் மூன்று கொலைகளுக்கான தண்டனை வழங்கப்பட்டது. மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் இருந்தபோதுதான் பத்திரிகையில் தனது கொலைகளுக்கு எந்த காரணமும் இல்லை என்று கூறினார்.

டேவிட் ராணுவத்தில் இருந்தபோதுகூட மெக்கிலிஸ்டர் என்ற சிறுவனைக் கொன்றார். அதற்காக நீதிமன்றத்தில் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு வெளியே வந்து இலினாய்சில் வசித்தபோது பதினைந்து வயது சிறுவனை கத்தியால் குத்தி கொன்றார். இதற்காக 35 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 17 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டு வெளியே வந்தார். மூளையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் தன்னை மனநல மையத்தில் வைத்திருக்க கோரிக்கை வைத்தார் டேவிட். ஆனால் சிறை அதிகாரிகள், மருத்துவமனையினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு டேவிட் தனது வீட்டில் கொலை செய்து சிமெண்ட் பூசி  மறைத்து வைத்த பிணங்கள் மீட்கப்பட்டன. ஏன் சிறுவர்களைக் கொன்றீர்கள் என்று கேட்டதற்கு, நான் தனிமையில் இருந்தேன். அதுவே என்னை அழித்துவிட்டது என பதில் சொன்னார். கொன்ற சிறுவர்களை அவருக்கு மனதளவில் பிடித்திருந்தது. அவர்களை அவர் உடலுறவுக்காக பயன்படுத்தவில்லை. பிறகு சிறையில் இருந்தபோது என்ன நினைத்தாரோ, போர்வையில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தான் இறப்பது பற்றியும் முன்னரே பேசும்போது அறிகுறிகளைக் காட்டினார். ஆனால் சுற்றியிருந்தவர்கள் யாரும் அதை சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.

சிறுவர்களை குறிவைத்த வில்லன்!

ஜேம்ஸ் எட்வர்ட் டங்கன் 3. இவர்தான் 1978ஆம் ஆண்டு தொடங்கி ஏராளமான கொலைகளைச் செய்த முக்கியமான சீரியல் கொலைகாரர். சிறுவர்களை பாலியல் ரீதியாக வல்லுறவு செய்து கொல்வது இவரது பாணி. அமெரிக்காவின் இடாகோவில் குரோன் – மெக்கென்சி என்ற குடும்பத்தை தாக்கியவர், அனைவரையும் கொன்றுவிட்டு சிறுமி, அவளது தம்பி என இருவரை மட்டும் கடத்திச் சென்றார். இது நாடு முழுக்க முக்கியமான குற்றச்செய்தியானது. பிறகு சாஸ்தா என்ற பெண்ணை ஹோட்டலில் அடையாளம் கண்டு மக்கள் தகவல் கொடுக்க காவல்துறை அச்சிறுமியை மீட்டு விசாரித்தது. அதில், அவளையும், தம்பியையும்(டைலன் குரோன்) கடத்திய ஜேம்ஸ் பலமுறை பாலியல் வல்லுறவு செய்தார் என்றும் தம்பியை பிறகு சுட்டுக் கொன்றுவிட்டதாகவும் கூறினார்.

சிறுவர்களை கடத்தி வல்லுறவு செய்வது ஜேம் ஸ் முதலில் இருந்தே செய்து வந்த குற்றம்தான். அதற்காக அவருக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் தண்டனை கூட கொடுத்தது. சிறுவர்களை தாக்குவதால் அவர்களை விட்டு தள்ளியிருக்கும் நிபந்தனையின் பேரில் அவருக்கு பிணை கிடைத்தது.  

 

ஜேம்ஸ் தன்னைப் பற்றி தனது மனநிலைமை கொலைகளைப் பற்றி வலைப்பூவில் எழுதி வந்தார். ஃபிப்த் நெய்ல் என்பதுதான் அவரது வலைப்பூ பெயர். அதில் அவர் சாத்தானால் கொலைகளை, வல்லுறவு செய்வதாக கூறியிருந்தார். இறுதியாக இந்த சமூகத்தை எந்தளவு சிதைக்க முடியுமோ அந்தளவு சிதைத்து பிறகு இறப்பது என எழுதி வைத்திருந்தார்.


கருத்துகள்