நோயாளிக்கு மிக நெருக்கத்தில் உள்ள கொலையாளிகள்

 





இப்போது இறப்பின் தேவதை என மருத்துவமனையே அழைத்த புகழ்பெற்ற செவிலியரான கிரிஸ்டனைப் பார்ப்போம். கிரிஸ்டனைப் பொறுத்தவரை அனைத்துமே சோதனைகள்தான். எதற்காக உயிர்வாழ்வதற்காக இந்த பரபரப்பு என இதய பிரச்னை இல்லாதவர்களை கூட மருந்து கொடுத்து மாரடைப்பு ஏற்படுத்தி கொன்றார். எபின்பிரைன் மருந்தைக் கொடுத்து நோயாளிக்கு மாரடைப்பு ஏற்படுத்தி விட்டு கோட் ப்ளூ பட்டனை அழுத்திவிட்டு பக்கத்தில் பாவமாக நின்றுகொள்வார். மருத்துவர்களும் வேகமாக வந்து நோயாளியை காப்பாற்ற அவரின் விலா எலும்புகள் உடையும் வரை சிபிஆர் செய்துவிட்டு இறந்த நேரத்தை குறித்துக்கொண்டு அங்கிருந்து செல்வார்கள். குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் முப்பது நோயாளிகளில் 23 நோயாளிகளுக்கு கோட் ப்ளூ என்று தகவல் சொல்லியவர் கிரிஸ்டின் அம்மணிதான்.

ஒருகட்டத்தில் மருந்தகத்தில் எபின்பிரைன் மருந்துகளை பெயர் சொல்லாமல் வாங்கியது யார் என விசாரணை தொடங்கியது, மேலும் நோயாளிகள் இறந்துகொண்டே இருந்தால் பலருக்கும் பயம் ஏற்படும்தானே அப்படி ஏற்பட்டபோது பார்த்தால் செவிலியர் கிரிஸ்டின் லீவ் போட்டுவிட்டார். மருத்துவமனையின் விசாரணையைத் தடுக்க மருத்துவமனைக்கு குண்டு வைத்திருக்கிறேன் என மிரட்டினார்.

மருத்துவமனையில் பாதுகாப்பு அதிகாரியான பெரால்ட் என்பவருடன் கில்பெர்ட்டுக்கு காதல் உறவு இருந்தது. பின்னாளில் அது முறிந்தாலும் கூட காவல்துறையினர் பெரால்ட் மீது சந்தேகம் கொள்ள நிறைய வாய்ப்புகளை கில்பெர்டின் நட்புறவு உருவாக்கியது. மூன்று கொலைகளை செய்தார், நான்கு கொலை முயற்சி என கில்பெர்ட் மீது வழக்கு பதிந்து தண்ட்டனை கிடைத்தாலும் கூட நேரடியான சாட்சிகள் யாருமே கிடையாது. ஏனெனில் கில்பெர்ட் ஒன்றும் முட்டாள் கிடையாது. யார் சாகும் நிலைக்கு அருகில் உள்ளார்களோ அவர்களை மட்டும்தான் அவர் தேர்ந்தெடுத்து  இதயத்துடிப்பை அதிகரிக்கும் மருந்தைக் கொடுத்தார். யார் இறந்தார்களோ அவர்களை அருகே நின்று சுவாரசியமாக வேடிக்கை பார்த்த விதத்தில் கில்பெர்ட் சந்தேகத்திற்கு உரியவர்.

இரண்டு பிள்ளைகளைப் பெற்றவர். விவகாரத்து பெற்றுவிட்ட பெண்மணி என்றாலும் கூட நோயாளிகளைக் கொல்வதில் அவர் சக்தி பெற்றவராக தன்னை உணர்ந்தார். அவரைப் பொறுத்தவரை மனிதர்கள் அனைவருமே மார்வாரி கடையில் வைக்கும் அடகுப் பொருட்கள் போலத்தான். தேவைக்கேற்ப பொருட்களை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். இதில் அந்த நீதி, அநீதி உணர்ச்சியும் கிடையாது. எனவேதான், காதல் உறவு கொண்டிருந்த காதலரின் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த நேரத்தில்  நோயாளிகளைக் கொன்று கில்பெர்ட் தனது வேட்கையைத் தீர்த்துக்கொண்டார். நோயாளிகளை கொல்வதைக்கூட விளையாட்டு போல செய் செவிலியர்கள் உண்டு. இதெல்லாம் கொல்லும் நபர்களின் மனவலிமையைப் பொறுத்தது.

கொலை என்பது குழு முயற்சி

வெற்றி பெற்றவர்கள் வெற்றி என்பது குழு முயற்சியால் கூட்டாக இணைந்ததால் கிடைத்தது என்பார்கள். அந்த வகையில் கொலைகளை செவிலியர்கள் திட்டம் போட்டு செய்ததும் உண்டு. 1983ஆம் ஆண்டு முதல் நான்கு செவிலியர்கள் கொலைகளை செய்தனர். இதற்கான அனுசரணைகளை செவிலியர்களின் உதவியாளர்கள், நண்பர்கள் வழங்கினர். இந்த வகையில் 41 நோயாளிகள் பலியானார்கள். இதில் அனைத்து கொலைகளுக்கும் காரணமாக இருந்தவர் வேக்னர். எழுபத்து ஏழு வயது பெண்மணியை கொன்று அந்த செயலுக்காக தன்னைத்தானே பாராட்டிக்கொண்டவர் கொல்வதற்கான செவிலியர் படையை தயார் செய்தார். இதற்காக தனது படையினருக்கு விஷ ஊசிகளை எப்படி செலுத்துவது பயிற்சி வழங்கினார். நீரில் மூழ்க வைத்து ஒருவரை கொல்வது இக்குழுவினரின் சிறந்த கொலை வடிவம். அதை வெற்றிகரமாக செய்தனர்.  ஒருகட்டத்தில் கொல்வதில் பேராசை ஏற்பட நோய் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரையும் கொல்லத் தொடங்கினர். இவர்கள் தங்களின் வார்டிற்கு டெத் பெவிலியன் என பெயர் சூட்டியிருந்தனர்.

கொலையானவர்களைப் பற்றி செவிலியர்கள் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வேலை செய்த மருத்துவர் அதைக் கேட்டுவிட்டார். அவர் காவல்துறையில் புகார் செய்ய நான்கு செவிலியர்கள் மாட்டிக்கொண்டனர். செவிலியர்களின் பிரிவில் நோயாளிகளின் இறப்பைப் பற்றி கவலைப்படாமல் வேலை செய்த மருத்துவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். பிறருக்கு சிறைதண்டனை வழங்கப்பட்டது.    

எப்போதும் ரகசியமான இயல்பில் இருப்பது, தேவையான மருந்துகளை நோயாளிக்கு கொடுக்க தவறுவது, இரவு நேர பணியை மட்டும் தேர்ந்தெடுப்பது, நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கை குறிப்பிட்ட பிரிவில் மட்டும் உயர்வது ஆகிய அறிகுறிகளை ஒருவர் அடையாளம் கண்டால் செவிலியர்களை எளிதாக பிடித்துவிடலாம். அடுத்து கொலைகளை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடத்தை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். ஒரே இடத்தில் இருந்தால் கொலை எண்ணிக்கை அதிகமாகி மாட்டிக்கொள்வார்கள். எனவே வெவ்வேறு இடங்களுக்கு சென்றுகொண்டே இருப்பார்கள். இறக்குந் நோயாளிகளும் இறந்துகொண்டே இருப்பார்கள். இறக்கும் நோயாளியை த் தவிர்த்து வேறு யாருக்கும் கொலையாளி யாரென்று தெரியாது.

செவிலியர்களுக்கு நெருக்கமான ஆட்கள் யாரேனும் காவல்துறைக்கு உண்மை சொன்னால் மட்டுமே இறந்த, இறக்கவிருக்கும் ஆட்களைப் பற்றிய  உண்மைகளை அறிய முடியும்.


கருத்துகள்