காலநிலையைக் கட்டுப்படுத்தும் மனித முயற்சிகள் - மேக விதைப்பு, மேக வெளுப்பு

 











 

காலநிலையை மனிதர்களால் கட்டுப்படுத்த முடியுமா?

 

உலக நாடுகளில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு 800 கோடியை உலகம் எட்டிவிட்டது. இதில் முதலிடம் சீனா, என்றால் அடுத்தது இந்தியாதான். ஒப்பீட்டளவில் சீனாவின் மனிதவளம் பெற்ற பொருளாதார வளர்ச்சியை இரண்டாவது இடத்தில் இருந்தால் இந்தியா பெற முடியவில்லை. இதற்கு தொலைநோக்கு இல்லாத தலைவர்கள் நாட்டை வழிநடத்துவதுதான் என்பதை தனியாக சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மக்களுக்கான இயற்கை வளங்கள் நீர், நிலம், உணவு என அனைத்துமே குறைந்து வருகிறது. இதை சரிசெய்ய இயற்கை நிகழ்வுகளை புரிந்துகொள்வது அல்லது அதை கட்டுப்படுத்துவது என இரு வழிகள் இருக்கின்றன. அதைப்பற்றித்தான் நாம் இப்போது படிக்கப் போகிறோம்.

இப்போது நிறைய மாநிலங்களில் அதிகமாக மழை பெய்வது, சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருந்தும் பருவமிருந்தும் கூட மழை பெய்வதே இல்லை. இந்த பிரச்னையை க்ளவுட் சீடிங் முறையில் தீர்க்க முடியும். இதற்கான சோதனை 1946ஆம் ஆண்டே நடைபெற்றது.

செயற்கையாக மழை பொழிய வைக்கும் முயற்சி தேவையா என்றால், மழை பொழிவு மட்டுமே இயற்கையாக மண்ணில் உள்ள ஆற்றலை, விதைகளை முளைக்கும் திறன் பெற்றது. மேலும் நாம் பயன்படுத்தும் நிலத்தடி நீர் மழையின் கொடைதான். மழை இயற்கையில் சற்று குறைந்து மீண்டும் பெய்ய தொடங்கும் வரை நிலத்தடி நீரை சேமித்து பயன்படுத்தலாம். ஆனால் மழை பெய்வதே இல்லை என்றால் என்ன செய்வது? அப்போது நாம் செயற்கையான ஏதாவது முறைகளை நாடி அதில் பயன் பெறமுடியுமா என்று பார்ப்பதே புத்திசாலித்தனம். உலக நாடுகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதற்கு மனிதர்களின் செயல்பாடு முக்கியமான காரணம். குறை சொல்வதை விட அதற்கான தீர்வை தேடுவது நவீன காலத்தில் முக்கியம்.

திடீரென பருவகாலங்களில் அல்லது புயல் கால ங்களில் மேக உடைப்பு ஏற்பட்டு மழைபொழிவது குறிப்பிட்ட பகுதியை சிதைத்து வெள்ள பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த சமயங்களில் வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டையாக்சைடு வாயுவை அறிவியல் முறையில் குறைத்தால் மேக உடைப்பு மழையைத் தவிர்க்கலாம்.

 

இயற்கை சார்ந்து யோசிக்கும் அறிவியலாளர்கள், செயற்கையாக மழை பெய்ய வைப்பது, புயல் மழையை தவிர்க்கும் செயல்பாடு ஆகியவற்றை எதிர்க்கிறார்கள். இதற்கு மாற்றாக கரிம எரிபொருட்களின் பயன்பாட்டை குறைத்து, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது சரியான தீர்வு என்கிறார்கள். 2008ஆம் ஆண்டு சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெய்ஜிங் நகரின் மீது மேகங்கள் திரண்டு மழை பெய்வது போல நின்றன. போட்டியின் தொடக்க நாளில் மழை பெய்தால் சீன அரசுக்கு சங்கடமாகிவிடுமே, உடனே மழை மேகத்தில் செயற்கையாக வேதிப்பொருளை தூவினர். இதனால் போட்டிக்கு முன்னதாகவே மழையை பெய்யவைத்தனர். இதுபோல சிறிய அளவிலான விஷயங்களை நாம் செய்யலாம்.

க்ளவுட் சீடிங் முறையில் மழைவரும் வாய்ப்பு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

மேகங்களை மழை பெய்ய வைக்க ரெயின் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. நிலத்தில் இருந்து எதிரி படைகளை குறிவைத்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குவது போன்ற மெக்கானிசம்தான் இதில் பயன்படுகிறது. இங்கு சில்வர் அயோடைடு வேதிப்பொருளைக் கொண்ட ராக்கெட்டுகளை மேகங்களை நோக்கி குறிவைத்து ஏவுகிறார்கள்.

மேகங்கள் மழை பெய்வதற்கு முன்னர், நீர்த்துளியாகும் அளவு இல்லாமல் அளவில் சிறியதாக இருக்கும். எனவே ஐஸ் அணு அமைப்பு போன்ற சில்வர் அயோடைடு வேதிப்பொருளை மேகம் மீது ஏவுகிறார்கள். இது நீருடன் சேர்ந்த ஐஸ் படிக அமைப்பை ஏற்படுத்துகிறது. இந்த படிக அமைப்பு பெரிதானவுடன் கீழே விழுகிறது. விழும்போது ஏற்படும் வேதிமாற்றத்தால் நீர்த்துளியாகிறது. வடுகபட்டியார் சொல்வது போல பெய்யென பெய்யும் மழை பொழிகிறது.

சீனாவில் காற்றை சுத்திகரிப்பு செய்யும் எந்திரம் வந்தபோது பலருக்கும் ஆச்சரியம். எப்படி காற்றை சுத்திகரித்து தூய்மையாக்க முடியும் என்று. இன்று இந்தியாவின் தலைநகரில் அத்தகைய எந்திரம் செயல்பட்டு வருகிறது. இப்படி ஒரு நினைத்துப் பார்க்க முடியாத ஆனால் சாத்தியமான தொழில்நுட்பம்தான் மேகத்தை வெள்ளையாக்கும் முயற்சி.

மேகத்தை வெள்ளையாக்க ஏசியன் பெயின்டையா வாங்கி பூச முடியும்? மேகத்தின் நிறம் அதிலுள்ள அணுக்கள், வேதிப்பொருட்கள் பொருத்தது. மேகம் வெள்ளையாக இருந்தால் சூரிய வெளிச்சத்தை பிரதிபலிக்கும். இதனால் சூரிய வெளிச்சம் பூமியில் அதிகம் தங்காமல் விண்வெளிக்கே சென்றுவிடும். இதனால் நமக்கு வெயிலின் தாக்கம் சற்று குறையும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்த செயல்பாட்டின் தொடக்கம், கப்பலில் இருந்து இரும்பை கடலில் கொட்டுவதுதான். இந்த இரும்பு, கடலில் உள்ள பாசிகள் உணவு தயாரிக்கவும் வளரவும் அவசியம். அவை வளர்ந்து சூழலில் உள்ள கார்பன் டையாக்சைடை ஈர்க்கின்றன. அதற்கு பதிலாக ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. பாசி இறந்ததும் கார்பன் டையாக்சைடுடன் கடலடியில் கீழே செல்கிறது. பிறகு ஆக்சிஜன் உள்ள கடல் நீரை தனி மெஷின் மூலம் உறிஞ்சி மேகத்தின் மீது பீய்ச்சி அடிக்க வேண்டும். இந்த முறையில் மேகத்தில் வேதிமாற்றம் ஏற்பட்டு, மேகம் வெள்ளை நிறத்தைப் பெறுகிறது. ஆனால் இந்த முறையில் செய்யும் செயல்பாடுகள் அதிக செலவு பிடிக்கும். இதற்கு ஏராளமான படகுகளை, எந்திரங்களை கடலில் நிறுத்தவேண்டும்.

 

image - http://clipart-library.com

 

 

 

 

 

 

 

 


கருத்துகள்