உடலை நேர்த்தியாக்கிக்கொள்ள முயலும் இளைஞர்கள்! பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர் அதிகரிக்கிறதா?
கண் இமை திருத்த சிகிச்சை |
வஜினா மறுகட்டமைப்பு சிகிச்சை |
ஹைமெனோ பிளாஸ்டி |
காஸ்மெட்டிக்
மேக் ஓவர்- உடலை அறுவை சிகிச்சை மூலம் திருத்திக்கொள்ள அலைபாயும் இளைஞர்கள்.
இன்று ஒருவர்
வேலைக்கு சேர வேண்டுமெனில் நிறுவனங்களில் சில அவர்களின் சமூக வலைத்தள கணக்குகளையும்
கேட்கிறார்கள். இந்த வகையில், தங்களின் புகைப்படத்தை பிறர் பார்க்கும்போது கண் புருவம்
சரியாக இருக்கவேண்டும். டிஷர்ட் அணிந்தால் மார்பகங்கள் நல்ல பருத்த வடிவத்தில் தெரியவேண்டும்.
எந்த போஸிலும் மூக்கு அழகாக இருக்கவேண்டும். பேண்ட் அணிந்தால் பெண்குறி புடைப்பாக அதன்
வடிவம் வெளியே தெரிவது போல இருக்க கூடாது என பெண்களும், ஆண்கள் தங்கள் வயிற்றை பாளம்
பாளமாக வெடித்த வயல்போல கட்டாக இருக்கவேண்டுமென மெனக்கெடுகிறார்கள்.
தங்களது உடல்,
மனம் பற்றி நிறுவனத்தினர் தவறாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ன இன்று அதிகம் கவலைப்படுகிறவர்கள்
உருவாகிவிட்டனர்.
மூக்கின்
வளர்ச்சி பெண்களுக்கு பதினாறு வயதிலும் ஆண்களுக்கு பதினெட்டு வயதிலும் முழுமை பெறுகிறது.
இந்த வயதிற்குள் மூக்கின் அமைப்பை மாற்றி அமைத்தால் பல்வேறு பின்விளைவுகள் ஏற்படும்.
இதைப்பற்றி மருத்துவர்கள் எடுத்துச் சொன்னாலும் பரவாயில்லை செய்யுங்கள் என வற்புறுத்துவர்களாக
மாறி விட்டார்கள். இதை மருத்துவர்கள் பாடி டிஸ்மார்பிக் டிஸார்டர் என்று குறிப்பிடுகிறார்கள்.
இன்னும் நேர்த்தி நேர்த்தி என படுத்தி எடுக்கும் ஆட்களை மருத்துவர்கள் ஓசிடி பிரச்னை
உள்ளவர்கள் என அடையாளப்படுத்துகிறார்கள்.
காஸ்மெட்டிக்
அறுவை சிகிச்சைகள் முன்பே கூட இருந்தவைதான்.ஆனால் இன்று அவற்றின் மவுசு அதிகரித்துவிட்டது.
வேலை, தனது உருவத்தை தானே பார்த்து மகிழும் சுயமோகம், அடுத்து சினிமாவில் வருவது போன்ற
திருத்தங்கள் கொண்ட முகம் என பல்வேறு அறுவைசிகிச்சைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
ஆண்கள், மார்புச்சதையை குறைத்து வயிற்று பகுதியில் அப்ஸ் வருவது போல டோன்ட்டு உடலை
அறுவை சிகிச்சையில் பெறுகிறார்கள். பெண்கள் தங்களது அடிவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு
நீக்கி, குறியை இறுக்கம் செய்துகொள்ளும் அறுவை சிகிச்சையை செய்துகொள்கிறார்கள். ஹைமெனோபிளாஸ்டி,
லேபியாபிளாஸ்டி ஆகிய அறுவை சிகிச்சைகள் பெண்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன. இதற்கான
சிகிச்சை கட்டணம் பதினெட்டு சதவீத ஜிஎஸ்டி வரியுடன் 40 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீள்கிறது.
நாற்பது வயதிற்கு
மேல் ஆன பெண்கள், இளைஞர்களுடன் வேலை செய்யும்போது தாழ்வுணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.
எனவே அவர்கள் தங்களை இளமையாக காண்பித்துக்கொள்ள அடிவயிற்றுக் கொழுப்பு உறிஞ்சி முகத்தின்
தசைகளில் செலுத்திக்கொள்கிறார்கள். இதனால் முகம் சற்று பளபளப்பாக தெரியும். இது அவர்களுக்கு
அலுவலக ரீதியாக தொழில் அடிப்படையில் நம்பிக்கை தருகிறதாம்.
இப்படி இளமை
வேகத்தில் அலைபாயும் ஆட்களை வைத்து பணம் சம்பாதிக்க தேசிய மருத்துவ கவுன்சிலின் விதிகளை
மதிக்காமல் கிளினிக் தொடங்கி அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறார்கள். இதுபோன்ற மோசடியான
மருத்துவர்கள், போடாக்ஸ் ஊசிகளை தவறான தசையில் செலுத்தினால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து
ஏற்பட்டுவிடும். அறுவை சிகிச்சை செய்ய வருபவர்கள் ஒருமுறை செய்யும் அழகு சிகிச்சையில்
அவர்கள் திருப்தி கொள்வதில்லை. அறுவை சிகிச்சைகளுக்கு இடையில் மூன்று மாத இடைவெளி தேவை.
ஆனால் தங்களது உறுப்பு நேர்த்தியாக இல்லை என இரண்டு மூன்று என அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள்
அதிகரித்து வருகிறார்கள். அழகு என்பதெல்லாம் சமூக வலைத்தளம், ஊடகங்கள் உருவாக்கும்
மாயைதான். ஆனால் அதை புரிந்துகொள்ளும் பக்குவத்தில் இளைஞர்கள் இல்லை. அந்த அறியாமையை
வைத்துத்தான் காஸ்மெடிக் கிளினிக்குகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி பணத்தை குவித்து
வருகின்றன.
இப்போது சிகிச்சை
கட்டணங்களைப் பார்ப்போம்.
லிப்போசக்சன்
– 2 லட்சம்
ரினோபிளாஸ்டி
– 2 லட்சம்
ஐலிட் லிஃப்ட்
– 1.5 லட்சம்
ஹேர் டிரான்ஸ்பிளான்ட்
-80,000 – 1.5 லட்சம் வரை
டம்மி டக்
– 3 லட்சம்
ஃபேட் கிராஃப்டிங்
– 1 லட்சம்
பிரெஸ்ட்
இம்ப்ளான்ட் – ரிடக்ஷன் – 2.5 லட்சம் – 3 லட்சம் வரை
ஃபீமேல் ஜெனிடாலா
கரெக்ஷன் – 75 ஆயிரம் – 1.2 லட்சம் வரை
மேல் பிரெஸ்ட்
அறுவை சிகிச்சை – 80 ஆயிரம் 1.2 லட்சம் வரை
ஃபேஸ் ரீஜூனுவேஷன்
– 80 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை
ஆங்கிலத்தில்
– ரிங்கு கோஷ்
இந்தியன்
எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக