பிடிஎஸ்எம் முறையில் உள்ள வகைகள்!
பிடிஎஸ்எம்
என்று கூகுளில் தேடினால் உங்களுக்கு நிறைய ஆபாச தளங்கள் கிடைக்கும் கூடவே விக்கிப்பீடியா
குழுவினர், படாதபாடு பட்டு பிடிஎஸ்எம் வரலாற்றை முன்வைப்பார்கள். பிடிஎஸ்எம் என்பதற்கு
நிறைய விளக்கங்கள் உண்டு. நாம் பார்க்கப்போவது பாண்டேஜ், டிசிப்பிளின், சாடிசம், மாசோசிசம்
ஆகியவற்றைத்தான்.
இதில் மூன்று
முறைகளை சுருக்கமாக குறிப்பிடுவார்கள். பாண்டேஜ் / டிசிப்ளின், டாமினன்ஸ் / சப்மிசிவ்,
சாடிசம் / மாசோசிசம். (dominance submissive, Sadism, masochism)
பிடிஎஸ்எம்
முறையை சிலர் மனநல குறைபாடு என்றெல்லாம் கூட சொல்லுவார்கள். உண்மையில் இது தம்பதிகள்
இருவரும் கலந்துபேசி நடந்துகொள்ள வேண்டிய நெருக்கமான உறவுமுறை. இதில், அதிகாரம் ஒருவருக்கு
கிடைக்கும். இன்னொருவர் அதற்கேற்ப நடப்பது ஆகியவை உண்டு. எடுத்துக்காட்டு, டாமினன்ட்(எஜமான்),
சம்மிசிவ் (அடிமை) முறையில் எஜமானுக்கு அடிமையை எப்படி வேண்டுமானாலும் நடத்தும் உரிமை
உண்டு. இதில் தம்பதிகள் தான் எந்த மாதிரி இருக்கவேண்டுமென தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பாண்டேஜ்
(Bondage)
கைவிலங்கு,
கயிறு, வெல்க்ரோ போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அடிமையின் கைகளை கால்களைக் கட்டும்
முறை. முடிந்தவரை எளிதாக கழற்றும்படியான கருவிகளை பயன்படுத்துவது நலம்.
டிசிப்பிளின்
(Discipline)
எஜமான்
தான் கூறிய கட்டளைக்கு மாறாக அடிமை ஏதாவது தவறு செய்தால் அவரை திருத்தும் முறை. இதில்
உடல் ரீதியான தண்டனை பொதுவாக அடங்குவதில்லை.
தண்டனை
(Punishment)
அடிமை,
எஜமானின் பேச்சைக் கேட்காமல் நடந்துகொண்டால் எஜமானன் அடிமைக்கு சில தண்டனைகளைக் கொடுக்கலாம்.. இதுவும் கூட அடிமை சந்தோஷத்தைப்
பெறும்படியாகவே இருக்கும்.
சாடிசம்
(Sadism)
அடிமையை
உடல் ரீதியாக அல்லது மன ரீதியாக துன்பப்படுத்தி அதன் வழியாக இன்பத்தை அடைவது. வலியைத்
தூண்டுவது, அதைப் பார்ப்பது ஆகியவை இதில் உள்ளடங்கும்.
மாசோசிசம்
(Masochism)
உடல், மனம்,
உணர்ச்சி ரீதியாக ஒருவரை காயப்படுத்தி மகிழ்ச்சியைப் பெறுவது.
டாமினன்ட்
/ சப்மிசிவ் (D/s) முறையைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாக நடந்துகொள்பவர்களை கவனமாக
பார்த்துக்கொள்ளவேண்டும்.ஏனெனில் அவர்கள் மனதளவில் தன்னை மிகவும் பலவீனமாக உணர வாய்ப்புள்ளது.
கண்களைக்
கட்டிக்கொண்டு உடல் உறுப்புகளை, பெண் குறியை, ஆண் குறியை, மார்புக் காம்புகளை மென்மையாக
வருடுவது, முகத்தில் முகமூடி அணிந்து உடலுறவு கொள்வது, கைகளில் கைவிலங்குகளை பொருத்தி
இணையை உறவு கொள்வது ஆகியவை பிடிஎஸ்எம்மில் சேரும். உடலில் ஐஸ் கட்டிகள், பட்டு, முயல்
ரோமம் கொண்டு உரசுவது ஆகியவையும் இதில்தான் சேரும்.
கைகளை விலங்குகளால்
பிணைப்பது, புட்டத்தில் குச்சியால் அடிப்பது ஆகியவற்றை பார்த்து பீதியாகி பிடிஎஸ்எம்
முறையை ஏதோ வன்முறை அளவுக்கு பேசுவார்கள். அது உண்மையல்ல. ஆபாச தளங்களில் நீங்கள் பார்ப்பது
எல்லாம் காட்சி சுவாரசியத்திற்கானது. அது உண்மையான பிடிஎஸ்எம் முறை கிடையாது.
எஜமான்,
அடிமை முறையில் ஜோடிகள் இருவருமே ஒப்புக்கொண்டுதான் செய்கிறார்கள். அதில் பச்சை என்றால்
முறையை தொடரலாம். மஞ்சள் என்றால் சின்ன இடைவேளை எடுத்துக்கொள்ளலாம். சிவப்பு என்றால்
உடனடியாக செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளலாம் என்று பொருள்.
ஒருவரை
உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக பிடிஎஸ்எம் முறை சுரண்டுகிறதா என்றால் இம்முறையை செயல்படுத்தியவர்கள்
அதில் இருந்து விலகியபிறகு இப்படிக் கூறலாம். ஆனால் இந்த முறை இருவரும் விதிகளை ஏற்று
ஒப்புக்கொண்டு செய்யும் செயல்முறைகளைக் கொண்டது.
பிடிஎஸ்எம்
முறையைப் பொறுத்தவரை நீங்கள் ஒருவரை நம்புவது முக்கியம். அப்படி நம்பிக்கை இல்லாத நபரிடம்
நீங்கள் பிடிஎஸ்எம் முறையை செயல்படுத்தக் கூடாது. அது நல்லதல்ல.
கருத்துகள்
கருத்துரையிடுக