பிணங்களோடு வாழ்வதே இன்பம் - நீல்சனின் வாழ்க்கை முறை
அசுரகுலம்
ரத்த சாட்சி
1.0
ஜெஃப்ரி டாமர்,
நீல்சன் ஆகிய இருவரும் அமைதியாக இருக்கும் நபர்கள்தான். ஆனால் செய்த கொலைகள் எல்லாமே
பீதியூட்டும் ரகத்தைச் சேர்ந்தவை. டாமரைப் பொறுத்தவரை உடலுறவில் ஈடுபடவென தனி ஜோம்பி
போன்ற உடல் தேவைப்பட்டது. அதை உருவாக்க முடியும் என நம்பினார். நீல்சனைப் பொறுத்தவரை
தன் ஆயுளுக்கும் தன்னை விட்டு நீங்காத ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். இவர்கள் மட்டுமல்ல
கொலைகளை செய்யும் பலரும் மக்களை உயிருள்ளவர்களாக பார்க்கவில்லை. அவர்கள், பொருட்களை
எப்படி தேவைக்கு எடுத்து பயன்படுத்துகிறோம். அதுபோல நினைத்து பயன்படுத்தினார்கள்.
நீல்சன் தனக்கு
தேவையான இரைகளை பப்களில் கண்டுபிடித்தார்.
இவருக்கு பிறரை தனக்கு வேண்டிய விஷயங்களைச்
செய்யச் சொல்லி கேட்பது அவமானமாக இருந்தது. எனவே தன்னைத் தானே இறந்துபோனது போல மாற்றிக்
கொண்டு கண்ணாடி முன்னே சரி பார்த்துக்கொள்வார்.
ஆனால் இதெல்லாம் கூட அவருக்கு மனதில் நினைத்த மகிழ்ச்சியைத் தரவில்லை. 78களில் நீல்சன், பப் ஒன்றுக்குச் சென்றார். அங்குள்ளவரை தனது வீட்டுக்கு
வரச்சொல்லி அழைத்துச் சென்றார். வீட்டுக்கு சென்றதும் சில பீர்களை குடித்தார்கள். என்னதான்
விருந்தினர் என்றாலும் கூட அவரும் தன் வீட்டுக்கு போகவேண்டுமே அப்படி போகும்போது பின்னால்
இருந்து விருந்தினரின் கழுத்தை நெரித்தார். அதற்கு நபர் அணிந்திருந்த டையே உதவியது.
இதில் அவருக்கு நினைத்துப் பார்க்க முடியாத மகிழ்ச்சி கிடைத்தது. கொன்றவரை தன்னோடு
கொஞ்சநாட்கள் வைத்துக்கொண்டார் உடல் அழுகத் தொடங்கவே வீட்டின் கீழேயே புதைத்து வைத்தார்.
பிறகு நிறைய
ஆண்களை வீட்டுக்கு அழைத்து வருவதும் அவர்களை கொன்று உடல்களோடு பொம்மை போல நினைத்து
விளையாடுவதும் தொடர்ந்தது. ஒருவகையில் உடலை வைத்து இருப்பது அவரின் தனிமையை குறைத்தது.
உடல் அழுகி துர்நாற்றம் வீசத்தொடங்கியதும் உடலை வெட்டி குப்பைகளில் போட்டுவிடுவார்.
கொன்ற பிணங்களை குளிப்பாட்டி தன்னோடு படுக்கையில் வைத்து சீராட்டுவது நீல்சனின் வழக்கம்.
பிறகு தனது
வீட்டை வேறு ஒரு பில்டிங்கிற்கு மாற்றும்போது தோட்டம் இல்லாத இடமாக அமைந்துவிட்டது.
உண்மையில் இது துரதிர்ஷ்டம்தான். இதன் காரணமாக, கொன்ற உடல் உறுப்புகளை வெட்டி கழிவறையில்
போட்டார். விளைவு, செப்டிக் டேங்கிற்கு நீர் செல்லாம் குழாய்கள் அடைத்துக்கொண்டன. இதுபற்றிய
புகார் கிடைத்ததும் காவல்துறை சோதித்ததில் இரண்டு ஆண்களின் உடல் பாகங்கள் என கண்டுபிடித்தனர்.
பிறகு விசாரித்தபோது பதினைந்து ஆண்களை கொன்றதாக ஒப்புக்கொண்டார். சிறை தண்டனையின்போது
தான் கொன்ற ஆண்களின் உடல் உறுப்புகளை சுவரில் வரைந்து பொழுதுபோக்கினார்.
நீல்சனின்
சிறுவயது தனிமையும் அலைகழிச்சலுமான வாழ்க்கையைக் கொண்டது. இவரின் அப்பா சிறுவயதிலேயே
இறந்துவிட்டார். இவரை தாத்தா ஆண்ட்ரூ வளர்த்தார். அவரது அம்மா, நீல்சனை கண்டுகொள்ள
முடியாத விரக்தியான மனநிலைக்கு சென்றுவிட்டார். ஒருமுறை கடலில் மூழ்கப்போன நீல்சனை
சிறுவன் ஒருவன் காப்பாற்றினான். அவன் நீல்சனின் சட்டை, பேண்டை கழற்றி நிர்வாணமான உடலில்
சுய இன்பம் அனுபவித்து சுக்கிலத்தை மேலே தெளித்தான். இதெல்லாமே நீல்சனின் நினைவில்
பதிந்துவிட்டது. 1961ஆம் ஆண்டு நீல்சன் அரசின் ராணுவத்தில் சமையல்காரனாக சேர்ந்தார்.
அங்குதான் கறியை வெட்டும் பக்குவம் கைவந்தது. ராணுவத்தில் நீல்சனுக்கு நண்பன் ஒருவன்
கிடைத்தான். அவனை இறந்துபோனவர் போல படுக்க வைத்து விளையாடுவது நீல்சனுக்கு பிடித்தமானது.
நீதிமன்றத்தில்
தான் கொலை செய்யவில்லை. விடுதலை கொடுங்கள் என்றெல்லாம் முட்டி மோதினார் நீல்சன். ஆனாலும்
பருப்பு வேகவில்லை. ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் இருந்தே தனது அனுபவங்களை நூலாக்க
முயன்றார். அதற்கு அரசு அனுமதி மறுத்துவிட்டது.
நெக்ரோபிலியா
என்பதை முறையான கோட்பாடாக்க அளித்தவர், ரிச்சர்ட் வான் கிராஃப்ட் எபிங். 1886ஆம் ஆண்டு
நெக்ரோபிலியா பற்றிய முறையான வரையறையை வழங்கினார். அவர் இதற்கு எடுத்துக்காட்டாக கூறிய
வழக்கு பெர்ட்ராண்ட் என்பவருடையது. சிறுவயதில் இருந்தே விலங்குகளை, பறவைகளை பிடித்து
உடல் பாகங்களை அக்குவேறு ஆணிவேராக பிரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். உயிரோடு இருக்கும்போதே
விலங்குகளின் கை, கால்களை தனியே பிரிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார் பெர்ட்ராண்ட். பின்னாளிலும்
இந்த ஆர்வம் வளர்ந்து ஆலமரம் போலானது.
பிறகு கல்லறையைத்
தேடிப்போன பெர்ராண்ட், அங்கு புதைத்திருந்த பிணங்களை தோண்டி எடுத்து உடலுறவு கொள்ளத்
தொடங்கினார். தனது வேலை முடிந்ததும் பிணத்தை அப்படியே போட்டுவிட்டு நல்ல பிள்ளையாக
வீடு வருவது பெர்ராண்டின் வழக்கம். இதைப் பார்த்து மக்கள் புகார் கொடுக்க காவல்துறை
இதென்னடா புது விவகாரம் என கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. அவர்களும் இறந்த
பிணம் என்பதால் ஓராண்டு சிறை தண்டனை விதித்தனர். பெர்ராண்ட் நீதிமன்றத்தில் தன்னால்
பிணங்களை தோண்டியெடுக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என ஒப்புக்கொண்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக