இஸ்ரேலிய அரச பயங்கரவாதம், தேசியவாதத்திற்கு எதிராக நிற்கும் இயக்குநர் - நாடவ் லாபிட்

 












கலக இயக்குநர்

 

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாடவ் லாபிட். இப்படி அறிமுகப்படுத்துவதை விட விவேக் அக்னிகோத்ரி என வலதுசாரி இயக்குநர் எடுத்த காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை குப்பை, வக்கிரம் என சொன்னவர் என்றால் எளிதாக புரியும்.

உலகத் திரைப்பட திருவிழாவில் தங்க மயிலுக்கான பரிசுப்போட்டியில் காஷ்மீர் ஃபைல்ஸ் எப்படி இடம்பெற்றது. வக்கிரமான குறிப்பிட நோக்கத்தை அடிப்படையாக கொண்டபடம் என வெளிப்படையாக விமர்சித்தார் இயக்குநர் நாடவ் லாபிட்.  உண்மையில் யூதர்கள் பற்றி இப்படியொரு படத்தை யாரேனும் எடுத்தால் கூட எனக்கும் பீதியாகிவிடும். உண்மையில் இது கௌரவமான செயல் அல்ல. முக்கியமான பிரச்னைகளை பேச வேண்டுமெனில் அதற்கான தன்மையில் இயல்பில்தான் பேசவேண்டும்.  47 வயதான சினிமா இயக்குநர் பாரிஸ் நகரில் வாழ்கிறார்.

ஒன்றை செய்வதை விட அதைப்பற்றி பேசுவது எளிது. அப்படித்தான் நிறையப் பேர் சொல்லுவார்கள். இஸ்ரேலிய இயக்குநரான நாடவ் எடுத்த சினானிம்ஸ் என்ற படம் 2019ஆம் ஆண்டு தங்க கரடி விருது வென்ற படமாகும். 2021இல் எடுத்த அஹெட்ஸ் நீ என்ற படம், கேன்ஸ் திரைப்பட விருதில் ஜூரிவிருதை வென்றது. இந்த படம் இஸ்ரேல் நாட்டின் தேசியவாதம், நாட்டின் குடிமகன் என்ற அடையாளம் ஆகியவற்றையும், அரசின் செயல்பாட்டையும் கேள்வி கேட்கும் இயல்புடையது.

நாடவ் எப்போதும் இஸ்ரேல் நாட்டின் அரசின் சட்டதிட்டங்களோடு போரிட்டுக்கொண்டே இருப்பவர்தான். இதற்கு சரியான எடுத்துக்காட்டு என அவர் தங்க கரடி வென்ற சினானிம்ஸ் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இஸ்ரேலிய அரசின் கலாசாரதுறை அமைச்சர் மிரி ரெஜிவ் பதிவிட்ட சமூகவலைத்தள பதிவை காணலாம்.  நான் இன்னும் விருது வென்ற படத்தைப் பார்க்கவில்லை. சாதனைக்கு வாழ்த்துகள். இஸ்ரேலிய சட்டப்படி அந்தப்படம் பொருத்தமானதா என்று பார்க்கவேண்டும் என்றார்.

மக்களுடைய வாழ்க்கை பற்றிய முக்கியமான பிரச்னைகளை பேசும் சிந்தனைகள் சரியோ, தவறோ எதுவாக இருந்தாலும் அதை நான் எனது திரைப்படங்களில் பேசுவதற்கு முயல்கிறேன் என தீர்மானமாக பேசினார். இவரின் அஹெட்ஸ் நீ என்ற படத்தில், திரைப்பட இயக்குநர் பாலைவன கிராமங்களுக்கு சென்று படத்தை திரையிட முயல்கிறார். அப்போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அரசின் அனுமதி பெற்றால் சர்ச்சைக்குரிய விஷயங்களை மக்களுடன் பேசுவதைத் தவிர்க்கலாம் என்று இயக்குநரை கட்டாயப்படுத்துகிறார். படங்கள் சர்ச்சை ஆகுவது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இஸ்ரேல் நாட்டிலிருந்து அல்லது உலகின் ஏதாவது ஒரு பாகத்திலிருந்து எனது படத்தைப் பற்றிய சர்ச்சைகள் எழும் என்றார்.

நாடவ், தனக்கு இஸ்ரேல் நாட்டைப் பற்றிய உணர்ச்சிரீதியான சித்திரம் உள்ளது. அதனால் சில விஷயங்களைப் பேசும் படங்கள் உருவாகின்றன என நினைக்கிறேன். நீங்கள் மலை, சிகரம் என ஏதாவது ஒன்றுடன் நெருக்கமான உணர்வீர்கள். நான் எனது நாட்டை அப்படி உணர்கிறேன். நான் வேறு பணியில் இருந்திருந்தால் நிச்சயம் கவலைப்பட்டிருப்பேன் என ஒருமுறை கூறியிருக்கிறார் நாடவ்.

காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற படத்தை எடுத்தால் எளிதாக அரசின் முத்தமும், அணைப்பும் கிடைத்திருக்கும். ஆனால் அப்படி வரலாற்றில் அரசுக்கு ஆதரவாக செல்லப்பிராணிகளாக இருந்த திரைப்பட இயக்குநர்கள் கலைஞர்களாக உருவாகவில்லை. நான் அப்படி இருப்பதை பெருமையாக நினைக்கவில்லை. ஒரு கலைஞன் தனிமையில் இருப்பதே நல்லது என்றார். 2014ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெறும் உலக திரைப்படவிழாவில் பங்கேற்று வருகிறார் நாடவ்.

கிண்டர் கார்டன் டீச்சர் என்ற படத்திற்கு நாடவிற்கு வெள்ளிக் கரடி விருதும் படத்தின் நாயகி சரித் லாரிக்கு மற்றொரு விருதும் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. உள்ளூர் திரைப்படங்களை பார்க்க வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் திரைப்பட விழாவில் ஜூரியாக இருக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறினார்.

நாடவ் பதிமூன்று திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவரது பெற்றோர்களும் இஸ்ரேலிய திரைத்துறை சார்ந்தவர்கள்தான். நாடவ் லிபிடின் படங்கள் இஸ்ரேலிய அரசியலைப் பேசுவதோடு, அவல நகைச்சுவையான காட்சிகளைக் கொண்டிருப்பவை.

தி இந்து ஆங்கிலம்

11.12.2022

யூட்பில் இந்திய செய்தி ஊடகங்களில்(நியூஸ் 18, இந்தியா டுடே,) உள்ள செய்திகளை நேர்காணல்களைப் பார்க்காமல் உலக திரைப்பட விழா சார்ந்த யூட்யூப் சேனல்களில் நாடவ் லாபிட்டின் நேர்காணல்களைப் பார்க்கலாம்.  

கருத்துகள்