இடுகைகள்

காலன் ஆப் பெர்க்காமன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மூளை பற்றி நடைபெற்ற முக்கியமான ஆராய்ச்சிகள்!

படம்
      மூளை ஆராய்ச்சி! கி.பி இரண்டாம் நூற்றாண்டில் காலன் ஆப் பெர்க்காமன் என்ற மருத்துவரை சுற்றி அனைவரும் கூடியிருந்தனர். அவர் அக்காலத்தில் மருத்துவர்களின் இளவரசன் என்று புகழப்பட்டவர். அன்று சபையில் அவர் செய்துகாட்டிய காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்றுவரை இதயம்தான் நமது நடவடிக்கைகளுக்கு காரணம் என்று கூறிவந்த மூடநம்பிக்கை அழிந்துபோனது. பன்றி ஒன்றை வைத்து மூளைதான் அனைத்து நடவடிக்கைகளுக்கும் காரணம் என பெர்க்காமன் நிரூபித்தார். இதனை இப்போது நவீன மருத்துவர்கள், அறிவியலாளர்கள் கேட்கும்போது புதிதாக சுவாரசியம் ஒன்றும் தோன்றாது. காலன் நிகழ்த்திய டெமோவை உலகின் புகழ்பெற்ற மருத்துவ நிரூபணம் என்று வரலாற்று ஆய்வாளர் சார்லஸ் கிராஸ் இதனை புகழ்கிறார். காலன் அந்த நிகழ்ச்சியை டெமோ காட்டி புகழ்பெற்றார். ஆனால் அதற்கு முன்னதாகவே அதுதொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்து வந்தன. பொதுவாக மூளையை ஆராய்ந்ததை விட அதுபற்றிய மூடநம்பிக்கைகளில்தான் உலகம் பெரும்பாலான நேரம் இருந்தது என்பது உண்மை. இதற்கு முக்கியக்காரணம் தேவாலயங்களை மூளையைப் பற்றி ஆராய்வதற்கு விதித்திருந்த தடைதான். எனவே ஆராய்ச்சியாளர