இடுகைகள்

ஜோ பைடன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியின் பொருளாதார அறிவு உலகைக் காப்பாற்றுமா? - நூல் அறிமுகம்

படம்
  ஸ்கேரி ஸ்மார்ட் மோ காவாதத் பான் மெக்மில்லன் 699 மனிதர்கள் எழுதும் அல்காரிதப்படிதான் எந்திரங்கள் இயங்குகின்றன. இதன் செயல்பாடு பற்றி இன்னும் நாம் புரிந்துகொள்ளவேண்டியுள்ளது. இதனைப் பற்றி ஆசிரியர் விளக்கி எழுதியுள்ளார்.  ஷட் டவுன் ஆடம் டூஸ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 899 பொதுமுடக்கம் வந்தபிறகு நாடுகளின் பொருளாதாரம் 1929ஆம் ஆண்டுக்கு முன்னர் சென்றுவிட்டது. பணம், தங்கம் என பலவற்றையும் செலவு செய்யும் நிலைக்கு நாடுகள் வந்துவிட்டன. பெருந்தொற்று காரணமாக மாநிலங்களின் எல்லைகள் மூடப்பட்டு நாடுகளின் செயல்பாடுகள் தடைபட்டுள்ளன. இப்படி உலகம் முழுக்க நடந்த விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார் ஆசிரியர்.  பெரில் பாப் வுட்வர்ட் ராபர்ட் காஸ்டா சைமன் ஸ்ஹஸ்டர் அமெரிக்காவில் டிரம்ப் தேர்தலில் தோற்றபிறகு பைடன் ஆட்சிக்கு வருகிறார். அவருடைய காலம் வரலாற்றில் மிக மோசமானதாக அமைந்துவிட்டது. இருநூறு பேர்களுக்கு மேல் நேர்காணல் கண்டு அரசியல் சிக்கல்களை பேசியுள்ளனர். எகனாமிஸ்ட் காந்தி ஜெய்திர்த் ராவ் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  499 இன்றும் பொருளாதார நூல்களில் காந்தியப் பொருளாதாரத்தை பற்றி மாணவர்கள் படிக்கிறார்கள். காந்தி வறுமைய

ஜோபைடன் இந்தியாவுடன் நட்புறவுடன் இருக்கவே வாய்ப்பு அதிகம்! - மைக்கேல் குஜெல்மேன்

படம்
              மைக்கேல் குஜெல்மேன் தெற்காசியாவுக்கான வில்சன் சென்டர் துணை இயக்குநர் அமெரிக்க அதிபராகியுள்ள ஜோ பைடனுக்கு அடுத்துள்ள சவால்கள் என்ன ? அவர் எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் ? பைடன் இப்போதைக்கு உள்நாட்டில் உள்ள அவசரகால நிலைமையை கவனிக்க வேண்டும் . இப்போது பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில் நான்கு விஷயங்கள் முக்கியத்துவப்படுத்தப்பட்டுள்ளன . அவை , பெருந்தொற்று , பொருளாதாரம் , இனவெறி , பருவச்சூழல் ஆகியவையாகும் . இவற்றை எக்சிகியூட்டிவ் ஆர்டராக பைடன் கையெழுத்திட்டு செயல்படுத்த உள்ளார் . அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் இடையில் சுவர் கட்டும் திட்டம் , பிற நாட்டினர் அமெரிக்காவிற்கு வந்து குடியேறுவதற்கான தடை ஆகியவற்றை திரும்ப பெற்றுள்ளார் . இதனால் வெளியுறவுக்கொள்கை அமெரிக்காவில் உருவாக்கப்படாமல் போகவில்லை . அவர்கள் விரைவில் பாரிஸ் சூழல் ஒப்பந்தத்தில் இணைய உள்ளனர் . அடுத்து வரும் பிப்ரவரி மாதத்தில் மேலும் பல்வேறு ஆணைகள் செயல்பாட்டிற்கு வரும் . உள்நாட்டுப் பாதுகாப்பு , குவான்டினாமோ சிறை மூடல் ஆகியவற்றையும் இதில் இணைப்பார்கள் . ஆப்கானிஸ்தானில் படைகள

வெள்ளை மாளிகை தாக்குதலுக்கு வழிவகுத்த பார்லர் சமூகவலைத்தள சேவை! - பின்னணியில் வலதுசாரி முதலீட்டாளர்

படம்
                அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையை வலதுசாரி டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர் . இதன் காரணமாக உலக நாடுகளில் அமெரிக்கா இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்தது . இத்தனைக்கும் அங்கு பாதுகாப்பு இருந்ததா என்று கேட்குமளவுக்கு போராட்டக்கார ர்களை காவல்துறை எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்த்தது . இதையொட்டி நடந்த வன்முறை சம்பவங்களுக்கு டிரம்ப் பேசிய பேச்சுகள் முக்கிய காரணம் . அதேபோல வலதுசாரி , கலக , துவேஷ கருத்துகளை பரப்பும் பார்லர் எனும் சமூக வலைத்தளம் தற்போ ஆப்பிள் , கூகுள் , அமேசான் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது . பார்லர் எனும் சேவை டிவிட்டர் போன்ற மைக்ரோபிளாக்கிங் போன்றதுதான் . இதிலும் உங்களுக்கு பிடித்தவரைப் பின்தொடரலாம் . கருத்துகளை பகிரலாம் . ஆனால் எந்த கருத்துகளையும் பார்லர் பயனருக்கு பரிந்துரைக்காது . எந்த பயனர் தொடர்பான தகவல்களையும் பகிரமாட்டோம் என்று பார்லர் கூறியுள்ளதால் , இதன் பதிவுகளை வேறு எந்த சமூகவலைத்தளத்திலும் பகிர முடியாது . ஆனால் பிற சமூக வலைத்தள பதிவுகளை ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்து பயனர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள் . அமெரிக்காவில் 8 மில்ல

ஜோ பைடன் மாற்றம் செய்யவிருக்கும் கொள்கைகள் இவை

படம்
                ஜோ பைடன் மாற்றம் செய்யவிருக்கும் கொள்கைகள் இவை வணிகம் ட்ரம்ப் சீனாவுடன் செய்த வணிகப்போர் வேறுவகையில் தொடரும் . கூட்டணி நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு மறைமுகமான வழியில் சீனாவுக்கு வர்த்தக அழுத்தம் தரப்பட வாய்ப்புள்ளது . அணுஆயுத ஒப்பந்தம் ஈரான் அமெரிக்காவுடன் அணுஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது . இதன்மூலம் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்க நீக்கிக்கொள்ள வேண்டியிருக்கும் . இருநாட்டு உறவுகள் சீர்ப்பட ஒப்பந்தம் மிகவும் அவசியம் . சூழல் ஒப்பந்தம் தூய ஆற்றல் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது . 2018 ஆம் ஆண்டு அதிக கார்பன் வாயுவை வெளியிட்ட நாடுகள் வரிசையில் சீனா , ஜப்பான் , அமெரிக்கா , இந்தியா , ரஷ்யா ஆகியவை உண்டு் . 1.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் கார்பன் வாயுவை வெளியிடுவதற்கான கடும் சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது . அமெரிக்காவில் தயாரிப்போம் சாத்தியமில்லாத திட்டம்தான் . ஆனால் தேசியவாதம் வளர்ந்து வரும்போது என்ன செய்வது ? டிரம்ப் ஏற்படுத்திய மேட் இன் அமெரிக்காவை இன்னும் பெரிய

கமலா ஹாரிஸ் மூலம் இந்தியர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள முடியும்! - மஜூ வர்க்கீஸ், ஜோபிடன் தேர்தல் பிரசார அதிகாரி

படம்
          மஜூ வர்கீஸ் ஜோ பைடன் அரசியல் கூட்டத்திற்கான செயல்பாட்டு அதிகாரி நீங்கள் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் உடன் தேர்தல் பிரசாரத்தில் முதல் நாள் தொடங்கி கூடவே இருக்கிறீர்கள்? பிப்ரவரி 2020 அன்று நாங்கள் ஐயோவா, நியூ ஹாம்ஸையர், அலபாமா ஆகிய இடங்களில் கூட்டங்களை நடத்தினோம். மிக கடினமான நாட்கள் அவை. மெல்ல நாங்கள் இதில் தேர்ந்து வருகிறோம். எங்களிடம் மிகச்சிறிய குழு உள்ளது. குறைவான வளங்கள்தான் உள்ளது. நாங்கள் பராக் ஒபாமா, ஜோ பைடன் ஆகியோருடன் பணியாற்றியுள்ளோம். ஜோவின் அனுபவங்கள், பிறருக்காக யோசித்து செயல்படும் தன்மை ஆகியவை முக்கியமாக என்னை ஈர்த்தவை. கோவிட் -19 நோய்த்தொற்றால் இறந்தவர்களுக்கு நாம் இரங்குதலை செலுத்த வேண்டும். இந்திய அமெரிக்கராக செனட்டர் கமலா ஹாரிசை துணை அதிபராக நீங்கள் நிறுத்தியுள்ளீர்கள். இந்த தேர்வு சரியா? அது முக்கியமானதுதான். எங்களுக்கு ஏராளமான இமெயில்கள், போன் அழைப்புகள் இதுதொடர்பாக வந்துள்ளன.  இந்தியர்கள் கமலா ஹாரிசுடன் தங்களை இணைத்துக்கொள்வது எளிதானது. அவர் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படம், இந்தியர்களின் வாழ்க்கையை உணர்த்துகிறது. அரசில் இந்தியர்கள் மருத்துவர்களாகவோ, பொறிய