இடுகைகள்

லாக்டௌன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தனியாக அமர்ந்து வேலை செய்வது உன்னத அனுபவம் - முருகானந்தத்திற்கு எழுதிய கடிதங்கள்

படம்
  4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் வெப்பமான எனது அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதி

லாக்டௌன் காலத்தில் சென்னைவாசியின் நிலை!

படம்
  லாக்டௌன் 4.1.2022   அன்புள்ள நண்பர் இரா.முருகானந்தம் அவர்களுக்கு, வணக்கம். வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? ஜனவரி, பிப்ரவரி என இரண்டு மாதங்களுக்கு கட்டுரைகள் எழுதி மென்பொருளில் பதிந்துவிட்டேன். ஆனால், பத்திரிகை அச்சுக்கு செல்லவில்லை. இதுவரை செய்த வேலைகள் எல்லாம் வீணா இல்லையா என்று தெரியவில்லை. இப்போது உள்ள நிலைமையில் லாக்டௌன் அறிவிப்பார்கள் என பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஒரு நிலைமை வந்தால் எங்களுக்கு சம்பள வெட்டு நிச்சயம். இம்முறை வேலையில் பிழைத்திருப்போமா என்று தெரியவில்லை. இந்த பத்தியை எழுதுகிற சமயம்,   அலுவல வேலைகளை வீட்டில் இருந்து செய்யும்படி அனுமதி கொடுத்துவிட்டார்கள். நான் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை. அலுவலகத்திற்கு எப்போதும் போல வரப்போகிறேன். சக பணியாளர்கள் இல்லையென்றால் வேலை செய்வது உன்னதமான அனுபவம். என்னால் அறையில் உட்கார்ந்து வேலை செய்ய முடியவில்லை. புத்தக காட்சி வேறு தள்ளிப்போகிறது. தற்போது எழுதி வரும் அறிவியல் பகுதிகள் சார்ந்து சில நூல்களை வாங்கும் தேவை உள்ளது. கல்விக்கொள்கை பற்றி வினி கிர்பால் இந்து ஆங்கிலத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந

தலைக்கு மேலே கூரை இல்லை! - வினோத் பாலுச்சாமிக்கு எழுதிய கடிதங்கள்

படம்
  அன்புக்குரிய வினோத் அண்ணாவுக்கு, வணக்கம்.  நலமா?  உங்களின் நிலைமை அறியாமல் தங்குவதற்கு இடம் கேட்டு சங்கடப்படுத்தியதற்கு மன்னிப்பு கோருகிறேன். நான் மனதில் உள்ளதை உடனே சொல்லிவிட்டேன். இனிமேல் நான் திருவண்ணாமலை வந்தால் விடுதியில் தங்கிக்கொள்கிறேன். தங்களைப் பார்க்கும் வாய்ப்பு திகைந்தால் பார்க்கிறேன். இதனை தங்களது பணிச்சூழலைப் பொறுத்து முடிவு செய்துகொள்ளலாம். சென்னையில் இப்போதைக்கு நிறைய வேலைகள் இருப்பதால், ஒருநாளுக்கு மேல் தங்க முடியாது. குறைந்த விலை கொண்ட பட்ஜெட் விடுதியை நீங்கள் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும். எனக்கு திருவண்ணாமலை மனதை ரிலாக்ஸ் செய்வதற்கான இடம். ஆனால் உங்களுக்கு அதுதான் வாழிடமே. இரண்டிற்குமான வேறுபாட்டை உணரவில்லை. இனிமேல் தவறு நேராது.  கடிதம் எழுதுவது பற்றி இணையதளம் ஏதாவது இருக்கிறதா என தேடினேன். chitthi exchange,Mumbai chapter என பல்வேறு கடிதம் எழுதும் வலைத்தளங்கள் இருப்பதை இந்து நாளிதழில் எழுதியிருந்தனர். இது ஆச்சரியமான செய்தி.  மயிலை காபி என்ற கடையில் டீ  குடித்தேன். குங்குமத்தில் வேலை செய்யும் நண்பர் சக்தி அங்கு கூட்டிப்போனார். ஒரு டீ 25க்கு விற்கிறார்கள். கா

சினிமா, இசை அல்லாமல் பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள்! - விரிவாகும் பாட்காஸ்ட் சந்தை

படம்
                பிரபலமாகும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் ! பெருந்தொற்று காலத்தில் பிராந்திய மொழிகளில் பாட்காஸ்ட் (Podcast) சந்தை சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது . டிவி , இணையம் வெற்றி பெற்றுள்ள நவீன காலத்திலும் பாடல்கள் அல்லாத நிகழ்ச்சிகளைக் கொண்ட பாட்காஸ்ட் சந்தை சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது . கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதிலிபி எஃப்எம் என்ற ஆப் , விவசாயிகள் வாழ்க்கை பற்றி பாட்காஸ்ட் ஒன்றை வெளியிட்டது . இதனைப் படித்துவிட்டு பல்வேறு தரப்பினரும் கருத்துகளை தங்கள் மொழிகளில் தெரிவித்திருந்தனர் . 2014 இல் தொடங்கப்பட்ட நிறுவனம் 2019 ஆம் ஆண்டு முதல் பாட்காஸ்ட் சேவையை வழங்கத் தொடங்கியது . இந்த செயலியில் பதிவிடப்படும் பாட்காஸ்ட் நிகழ்ச்சிகள் இந்தியாவின் கிராமப்புறங்களிலும் கூட ரசிக்கப்பட்டு வருகின்றன . பாடல்கள் அல்லாத பல்வேறு செய்திகளுக்கான பாட்காஸ்ட் சந்தை வளர்ச்சி பெற்றாலும் வீடியோ மீதான மோகம் இந்தியர்களிடையே அதிகரித்து வருகிறது . குறிப்பாக யூடியூப்பின் வளர்ச்சி 45 சதவீதம் ( ஜூன் , ஜூலை ) வளர்ச்சியடைந்துள்ளது . நெட்பிளிக்ஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் 20 லட்சத்திற்கு அதிகமாக