இடுகைகள்

சிறப்பு இட ஒதுக்கீடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிராமங்களுக்கு டாக்டர்கள் தேவை!

படம்
Education Medical Dialogues மகாராஷ்டிரத்தில் எம்பிபிஎஸ் படிக்கவும், முதுநிலைப்படிப்பான எம்டி படித்தவர்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. இதனை அரசு வழங்குவது, இதில் படிக்கும் மாணவர்கள் ஏழு ஆண்டுகள் கிராமத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற கருத்தில்தான். இந்த இட ஒதுக்கீட்டில் படிப்பவர்கள் கட்டாயமாக ஏழு ஆண்டுகள் பழங்குடி மக்களின் கிராமத்தில் மருத்துவ சேவை செய்வது கட்டாயம். கிராமங்களில் ஏற்படும் தொற்றுநோய் கவனிக்காமல் விட்டால், அந்த இனத்தையே அழித்துவிடும் அபாயம் உள்ளது. இதற்காகவே அரசு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் உள்ள கிராம ப்புற மருத்துவநிலைமை சொல்லிக்கொள்ளும் படி இல்லை. இதன் பொருள், அங்கு மருத்துவமனைகள் இல்லை என்பதில்லை. சரியான மருத்துவர்கள், செவிலியர்கள் கிடையாது என்கிறார் மருத்துவத்துறையைச் சேர்ந்த தன்னார்வலரான டாக்டர் அமோல் அன்னடேட்.  400 மருத்துவமனைகள், 76 துணை மாவட்ட மருத்துவமனைகள், 26 நகர மருத்துவமனைகள் இருந்துமே இந்த அவலநிலைமை. இந்நிலைமை ஒடிசாவில் உச்சம் தொட்டு நிற்கிறது. இங்கு மருத்துவர்கள் வி0, வி4 என்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இத