இடுகைகள்

கீழடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழர்கள் தம்மை கண்டறிய ஓர் நூல்! - கீழடி - வரலாற்று பொக்கிஷம்!

படம்
கீழடி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மதுரை மற்றும் சிவகங்கை அருகிலுள்ள எல்லைப்பகுதியான கீழடியில் கிடைத்துள்ள பொருட்கள் பற்றிய விரிவான நூல் இது. தொல்லியல் துறை கமிஷனரான உதயசந்திரன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் ஊக்கத்துடன் ஆராய்ந்து, பல்வேறு தொன்மைப் பண்பாட்டு எச்சங்களைக் கண்டறிந்துள்ளனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ் பிராமி எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன என்பதை நூல் முழுக்க அடிக்கடி சொல்கிறார்கள். இதற்குப் பின்னணியில் அதை மறுப்போரின் குரல்கள் அழுத்தமாக இருக்கலாம். அன்றைக்கு வாழ்ந்த மக்களின் கட்டடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அணிகலன்கள்,  பானைத் துண்டுகள் என பலவற்றையும் பிரமாதமாக புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தி இருக்கிறார்கள். டிரோன் விமானங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று நண்பர் கூறினார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் தமிழர்கள் கல்வி அறிவு பெற்றார்கள் என்பதை தகர்ப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை முக்கியமாக கொண்டால் வரலாற்று நூலை நாம் திருத்தி எழுத வேண்டும். அதை நோக்கி நகர்வதற்கு கீழடி ஆய்வு முக்கியமானது. மத்திய அரசின் தலையீட்டால் ஆய்வை மத்திய தொல்லியல்