இடுகைகள்

அதிகவயது முதல்வர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியாவின் மன்னர்கள்!

படம்
குடியாட்சி மன்னர்கள் ! நவீன் பட்நாயக் (71), ஒடிஷா முதல்வர் விவசாயம் மற்றும் கல்வித் திட்டங்களின் மூலம் ஒடிஷாவின் முகத்தை மாற்றியவர் . சாலைகள் , பாலங்கள் அமைப்பதோடு ஸ்மார்ட் நகரங்கள் , இ - ஹப் ஆகியவற்றை அமைப்பதாக வாக்குறுதி தந்தார் . பதினெட்டு ஆண்டுகளுக்கு மேலாக முதல்வராக ஒடிஷாவை ஆண்டு வருகிறார் பட்நாயக் (2000 லிருந்து ). டாக்டர் ராமன்சிங் (65), சத்தீஸ்கர் முதல்வர் மக்களை நேரடியாக சந்திக்கும் லோக் சூரஜ் அபியான் திட்டம் 2005 ஆம் ஆண்டிலிருந்து அமலிலுள்ளது . அரசின் கொள்கை மக்களுக்கு உதவுகிறதா என சரிபார்க்க இத்திட்டம் உதவுகிறது . அனைவருக்கும் உணவு உரிமை சட்டத்தின்படி , ஊட்டச்சத்துக்குறைவு 30 சதவிகிதமாக குறைந்துள்ளது . சத்தீஸ்கரின் அரியணையை பதினான்கு ஆண்டுகளுக்கும் மேலாக கைப்பற்றி வைத்துள்ளார் ராமன்சிங் . பவன் சாம்லிங் (67), சிக்கிம் முதல்வர் . எழுபது சதவிகித நிதி கிராம விவசாயத்திற்கு . சூழலை மாசுபடுத்தாத முறையில் மதுபானம் , மருந்து , விடுதிகள் இயங்குகின்றன . கல்வியறிவு 82 சதவிகிதம் . ஆசிர