இடுகைகள்

தண்டுவடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

4டி பிரின்டிங்கில் என்னவெல்லாம் சாத்தியமாகும்?

படம்
  நல்ல செய்தி  கண்டுபிடிப்புகள் 2021 ஆண்டு முழுக்க நாளிதழ்களில் காட்டுத்தீ பற்றிய செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். டிவி, சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் பகிரப்பட்டன. அமெரிக்க அரசு, காட்டுத்தீயை கட்டுப்படுத்தவென 4 பில்லியன் டாலர்களை ஒதுக்கியது. காட்டுத்தீயை முன்னதாக கண்டுபிடித்து கட்டுப்படுத்தினால்தான் இழப்பை கட்டுப்படுத்த முடியும். அதுதான் சரியான தீர்வு. ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரைச் சேர்ந்த டிரையாட் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம், காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்கான தீர்வுகளோடு வந்துள்ளது.  இந்த நிறுவனத்தின் சென்சார்கள், காற்றில் உள்ள காட்டுத்தீ பரவலால் உருவாகும் வேதிப்பொருட்களை அடையாளம் காண்கிறது. உடனே வயர்லெஸ் முறையில் அதிகாரிகளுக்கு தகவல்களை அனுப்புகிறது. அண்மையில் செய்த சோதனையில் பதினைந்து நிமிடங்களில் சமிக்ஞைகளை அனுப்பி நம்பிக்கை அளித்துள்ளது. அமெரிக்காவில் இந்த புதிய சென்சார்களை வாங்கிப் பயன்படுத்த உள்ளனர். 2030ஆம் ஆண்டுக்குள் டிரையாட் தனது பேரளவிலான சென்சார்களை மரத்தில் பதிக்க திட்டமிட்டுள்ளது.  2 முதுகெலும்பில் அடிபட்டவர்கள் திரும்பி இயல்பாக நடப்பது கடினம். பெரும்பாலும் படுக்கையி

வலியை உணர்வது முக்கியமா?

படம்
                  வலியை , மகிழ்ச்சியை உணர்த்தும் நரம்பு அமைப்புகள் நாம் பூனையின் தலையை தொடும்போது உணரும் மென்மையான உணர்வு எப்படி வருகிறது ? இதற்கு நரம்பு அமைப்புகள்தான் காரணம் . வலியோ , மகிழ்ச்சியோ இந்த இரண்டுமே நரம்பு அமைப்புகளின் சென்சார்கள் மூலமே மூளைக்கு தெரிய வருகிறது . வலி என்பது உடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் உணர உதவுகிறது . வலி எந்தளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவு பிரச்னை பெரிதாக இருக்கிறது என உணர்ந்து உடனே செயல்படவேண்டும் . வலி என்ற உணர்வு இல்லாதபோது நாம் நெருப்பில் கைவைத்தாலும் அது நம் கையை சுடும் என்று தெரியாது . இதனால் கை காயப்படும் அபாயம் உள்ளது . வலி என்பது நமது உயிரைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான அறிகுறி . இந்த அறிகுறி தாவரங்களுக்கு கிடையாது . எனவே , அவற்றை வெட்டினாலும் தங்களது வலியை வெளிப்படுத்த முடியாது . மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும் வலியை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும் . வலியை உணர முடியாத தன்மை ஒருவருக்கு மரபணு காரணமாக ஏற்படலாம் . இதனை காக்னிடல் இன்சென்ஸிடிவிட்டி டு பெயின் என்கிறார்கள் . நீளமாக சொல்ல கடினமாக இருந்தால் சிஐபி . இப்படி ஒருவ