வலியை உணர்வது முக்கியமா?

 

 

 

 

 

 Woman, Sad, Depression, Skin, Naked, Nude, Headache

 

 

 

வலியை, மகிழ்ச்சியை உணர்த்தும் நரம்பு அமைப்புகள்


நாம் பூனையின் தலையை தொடும்போது உணரும் மென்மையான உணர்வு எப்படி வருகிறது? இதற்கு நரம்பு அமைப்புகள்தான் காரணம். வலியோ, மகிழ்ச்சியோ இந்த இரண்டுமே நரம்பு அமைப்புகளின் சென்சார்கள் மூலமே மூளைக்கு தெரிய வருகிறது. வலி என்பது உடலுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை நாம் உணர உதவுகிறது. வலி எந்தளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவு பிரச்னை பெரிதாக இருக்கிறது என உணர்ந்து உடனே செயல்படவேண்டும்.


வலி என்ற உணர்வு இல்லாதபோது நாம் நெருப்பில் கைவைத்தாலும் அது நம் கையை சுடும் என்று தெரியாது. இதனால் கை காயப்படும் அபாயம் உள்ளது. வலி என்பது நமது உயிரைக் காப்பாற்றும் புத்திசாலித்தனமான அறிகுறி. இந்த அறிகுறி தாவரங்களுக்கு கிடையாது. எனவே, அவற்றை வெட்டினாலும் தங்களது வலியை வெளிப்படுத்த முடியாது. மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும் வலியை பிறருடன் பகிர்ந்துகொள்ள முடியும். வலியை உணர முடியாத தன்மை ஒருவருக்கு மரபணு காரணமாக ஏற்படலாம். இதனை காக்னிடல் இன்சென்ஸிடிவிட்டி டு பெயின் என்கிறார்கள். நீளமாக சொல்ல கடினமாக இருந்தால் சிஐபி. இப்படி ஒருவர் இருந்தால் அவர் தனது வாழ்க்கையை வாழ்வது கடினம்.


வலி தெரியாதபோது அவருடைய உடல் உறுப்புகள் காயம்படுவது நடக்கும். இங்கு உடல் உறுப்புகள் காயம்படுகிறது என்ற எச்சரிக்கை ஒலிதான் வலி என்பதைப புரிந்துகொண்டால் இதன் முக்கியத்துவத்தை எளிதாக அறியலாம். தோலின் கீழேயுள்ள நோசிசெப்டர் எனும் உணர்வு அமைப்புகள் உள்ளன. அதனை வலி உணரும் நரம்பு அமைப்புகள் என்று கருதலாம். பருவகாலம், கருவிகளால் ஏற்படும் காயங்கள், வேதிப்பொருட்கள், வெப்பம் ஆகியவற்றை நரம்பு உணர்வு அமைப்புகள் மூளைக்கு சிக்னல்களாக அனுப்புகின்றன. இதற்கு தண்டுவடம் ஊடகமாக பயன்படுகிறது. உணவு, தட்பவெப்பநிலை ஆகியவை நோரெசிப்டர்களை உசுப்பும் தன்மை கொண்டவை. இதனை பாலிமாடல் என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.


டாப் ரோமன் நூடுல்ஸை சிக்கன் பிளேவரில் வாங்கி வந்து சமைத்து சூடாக சாப்பிடும்போது, மூளை என்ன உணரும். வெப்பம், அதனை காரமான சுவை ஆகியவை நாக்கின் சுவை மொட்டுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை உணர்ந்து காரமாக உள்ளது என்ற செய்தி மூளைக்கு செல்லும். இதுவே உணவு காரமாக வலி உணர்வை ஏற்படுத்துகிறது என்ற செய்தியாக நமக்கு தோன்ற, அந்த உணவை சற்றே தள்ளி வைக்கிறோம். அல்லது அதனை சமநிலைப்படுத்தி சாப்பிட தண்ணீரைத் தேடுகிறோம்.


வலி உணர்வுகள் இல்லாதபோது நாம் மோசமான உணவுகளை சாப்பிட்டு அதனால் வாய், உணவுக்குழாய், குடலிலுள்ள திசு செல்கள் கூட பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, சுவை உணர்வு சார்ந்து வரும் சிக்னல்கள் பெரிதாக்கப்பட்ட மூளை அதனை கவனித்து அதற்கு என்ன காரணமோ அதனை தடுக்க நினைக்கிறது. பொதுவாக விளையாட்டு வீரர்கள், ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு அடிபடும்போது, அந்த உணர்வை தடுத்து வைக்கும் பணியும் மூளையுடையதுதான். குழந்தைகளுக்கு காது குத்தும்போது, தடுப்பூசி போடும்போது அவர்களை வேறுபக்கம் கவனம் திரும்பச்செய்தை பார்த்திரப்பீர்கள். இது உண்மையில் உளவியல் சார்ந்த யுக்திதான். இதனை பிளாசிபோ அனல்ஜெசியா என்று கூறுகின்றனர்.


வலி உணரும் அமைப்பில் ஏற்படும் சிக்கலை குரோனிக் பெயின் என்று கூறலாம். மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை ஒருவரின் உடலில் சிதைந்த வலி உணரும் அமைப்பை மேலும் பாதிக்கிறது. மக்கள்தொகையில் இருபது சதவீதம் பேர் நீண்டகாலம் தொடரும் வலியால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காலம் இருபது ஆண்டுகளாக இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


வலி என்பதை திசு செல்கள் பாதிக்கப்படுவதை உடல் வெளிப்படுத்தும் மொழி என்று கூறலாம். இதனை எப்படி அளவிடுவது என்றால் நடைமுறையில் கடினம்தான். ஒருவர் வலியில் கரைந்தழுவது, இதயத்தின் துடிப்பு அதிகரிப்பு, ரத்தவோட்டத்தின் வேகம் ஆகியவற்றை இதற்கு அடிப்படை அம்சங்களாக கருதலாம். பொதுவாக புற்றுநோய் ஏற்பட்டவர்கள் வலி நிவாரண சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அதிகரித்து வருகிறது. ஒருவர் இத்தனை நாட்கள்தான் இருப்பார் என்று தீர்மானிக்கப்பட்ட பிறகு அவரின் வலியைக் குறைப்பது முக்கியமானது. வலியைக் குறைக்க ஆஸ்பிரின், இபுபுரோபேன் ஆகிய மருந்துகள் அதிகம் பயன்படுகின்றன. மார்பினை மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே பயன்படுத்தவேண்டும். இதனை அதிகம் பயன்படுத்தினால் இதற்கு அடிமையாகும் ஆபத்தும் உள்ளது. வலி நிவாரண சிகிச்சைகளுக்கென தனி மருத்துவமனைகள் இப்போது தொடங்கப்பட்டு வருகின்றன. இறப்பு எப்போது வந்தாலும் அதனை அதிக வலியின்றி அணுக மருத்துவர்களின் சிகிச்சை உதவுகிறது.


பேராசிரியர் ஐரின் ட்ரேசி


சயின்ஸ்போகஸ்




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்