யாத்திரைகளை விட மக்களின் உயிர் முக்கியம்! - புஷ்கர்சிங் தமி, ஜார்க்கண்ட் முதலமைச்சர்
புஷ்கர் சிங் தமி
உத்தர்காண்ட் முதலமைச்சர்
உங்கள் மாநிலத்தில் தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கிவீட்டீர்களா?
50 சதவீத மக்களுக்கு முதல் தடுப்பூசியை வழங்கிவிட்டோம். மத்திய அரசு எங்களுக்கான தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரித்தால் விரைவில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கிவிடுவோம்.
சுற்றுலாபயணிகளை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்?
பொதுமுடக்கத்தில் வீட்டிலேயே அடைந்து கிடந்தவர்கள், இப்போது வெளியே வருகிறார்கள். இதனை அரசாக நினைத்து தடுக்க முடியாது. மக்கள்தான் வெளியே வருவதை அவர்களாகவே கட்டுப்படுத்திக் கொண்டால்தான் உண்டு.
உத்தர்காண்டில் சில மாதங்களில் பல்வேறு முதல்வர்கள் மாறிவிட்டார்கள். நீங்கள் உங்கள் நிலையைப் பொறுத்து கடினமான முடிவுகள் எடுக்க முடியுமா?
என்மேல் நம்பிக்கை வைத்த கட்சிக்கார ர்கள், தொண்டர்கள், பிரதமர் மோடி ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். நான முதல்வர் ஆவேன் என நினைத்தே பார்க்கவில்லை. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறேன்.
கன்வார் யாத்திரைகளுக்கு அனுமதி மறுத்தது கடுமையான முடிவுதான் அல்லவா?
இப்போதுள்ள சூழலில் மக்களின் உயிரைக் காப்பாற்றுவது முக்கியம். யாத்திரைகள் பிற ஆண்டுகளில் கூட வரும். அதனைக் கொண்டாடிக் கொள்ளலாம். டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களிலிருந்து கங்கை நீரை எடுக்க மக்கள் இங்கு வருகின்றனர். நாங்கள் எடுத்த முடிவு மக்களுக்கானது என்பதை கடவுளே சாட்சியாக பார்த்துக்கொண்டிருப்பார். மக்களின் உயிர் அநியாயமாக பலியாவதை அவர் விரும்ப மாட்டார்.
இதுபற்றி வல்லுநர்களிடம் பேசினீர்களா?
அரசு, அனைத்து தரப்பு மக்களிடமும் பேசி யாத்திரைகளை நிறுத்தி வைக்கும் முடிவுக்கு வந்தது. நோய்த்தொற்று வைரசும் பல்வேறு வடிவங்களில் மாறி வருவதால் உத்தர்காண்ட் மாநிலம் நோய்த்தொற்றின் மையமாக மாற விரும்பவில்லை. எங்கள் மாநில மக்கள் பொதுவாகவே பயணம் செய்ய விரும்புபவர்கள்.
கும்பமேளா நடந்து கொரோனா நோய்த்தொற்று அதிகம் பரவியது உங்களது முடிவில் தாக்கம் ஏற்படுத்தியதா?
ஆமாம். மனிதர்கள் தங்களின் அனுபவத்திலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். நானும் அப்படித்தான் கற்றுக்கொண்டேன். கும்பமேளாவுக்கு வந்தவர்கள் பலரும் போலியான கொரோனா சான்றிதழ்களை வைத்திருந்தனர். விசாரணைக்கு பயந்து இப்படி செய்த செயல் இனி எப்போதும் நடக்ககூடாது.
ஹெச்டி
சுனேத்ரா சௌத்ரி
கருத்துகள்
கருத்துரையிடுக