அடையாளம் தெரியாத கடவுள் காப்பாற்றும் கிராஃபிட்டி எனும் புரட்சிகர கலை!
இங்கிலாந்தில் பாங்ஸி என்ற கலைஞர் அரசியல் கிராஃபிட்டிகளை வரைந்தே புகழ்பெற்றவர். அவரை பாங்ஸி என்று சொல்லி அழைத்தாலும் கூட அவரது முகத்தை யாருமே பார்த்தது இல்லை. அமெரிக்காவில் தான் கிராஃபிட்டி முதலில் தொடங்கியது. அரசு, தனியார் என்றெல்லாம் கிடையாது. உடனே ஸ்ப்ரே பெயின்டை குலுக்கிக்கொண்டு வரையத்தொடங்கிவிடுவதுதான் கிராஃபிட்டி கலைஞர்களின் ஸ்டைல்.
சட்டவிரோதம் என்று சொல்லி காவல்துறை அடிக்கடி துரத்தினாலும் அதற்கெல்லாம் கிராஃபிட்டி கலைஞர்கள் பயப்படுவதில்லை. ஆரஞ்ச் தெலுங்குபடத்தில் ராம்சரண் கிராஃபிட்டி வரைந்துகொண்டு கல்லூரியில் படிப்பவராக நடித்திருப்பார். இந்த கிராஃபிட்டி என்ற வார்த்தை கிரேக்கத்தின் கிராபீன் என்ற வார்தையிலிருந்து உருவானது. இப்படி வரைபவர்கள் சிலர் மட்டும்தான் பெயரை எழுதுவார்கள். பலர் ஓவியத்தை வேகமாக வரைந்துவிட்டு இடத்தை காலி செய்துவிடுவார்கள்.
இப்போது பல்வேறு முரல் கலைஞர்களும் கூட்டமாக சுற்றுவது இன்ஸ்டாவில்தான். சுவர்களில் வரைவதும் பெரிதாக மவுசு குறையாமல் சென்றுகொண்டிருக்கிறது.
இங்கிலாந்தின் பிரிஸ்டலில்தான் பாங்ஸி வசிக்கிறார். கிராஃபிட்டி கலைஞர் என்றால் பலருக்கும் இவர்தான் நினைவுக்கு வருகிறார். குழந்தை பலூனை வைத்திருப்பது, இரண்டு போலீஸ்கார ர்கள் முத்தம் கொடுத்துக்கொள்வது என சீரியசான அரசியல் கிராஃபிட்டி படங்களை சுவர்களில் வரைவது இவர் பொழுதுபோக்கு. இவரது படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டு 12 மில்லியன் அளவுக்கு விற்பனையானது மகத்தான சாதனை.
புகழ், பணம் இரண்டுக்காகவும் நான் படங்களை வரைவதில்லை என்று பாங்க்ஸி கூறியுள்ளார்.
படம் வரையலாம் என்றால் உடனே உயரமான கட்டிடத்தில் ஏறி வரைந்துவிட முடியாது.என்ன படங்களை வரைகிறீர்கள், எந்த இடத்தில் வரைகிறீர்கள் என்பதெல்லாம் கூட இதில் முக்கியம். மெல்போர்ன், வார்சா, பாரீஸ் ஆகிய இடங்களில் கிராஃபிட்டி வரைய ஊக்குவிக்கிறார்கள். இங்கு அதிக கட்டுப்பாடுகள் கிடையாது. இப்படி வரைவதால் சுற்றுலா பயணிகள் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். அரசு இதனால் ஸ்ப்ரே கன்டெய்னர்களை வைத்துக்கொண்டு சுற்றுபவர்களை ஏதும் சொல்லுவதில்லை. அமெரிக்காவில் இன்னும் நிறைய இடங்களில் காசு கொடுத்துதான் வரையவேண்டும். அதனை அரசு அழிக்காது.
நிறங்கள் இல்லாமல் கரித்துண்டுகளில் வரையும் படங்கள் புரட்சிகரமானவை என கலைஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஆனால் எது சிறந்த கிராஃபிட்டி என எப்படி சொல்லுவது? குறிப்பிட்ட ஐடியா , படம் என கலைஞர் எதனை வரைய நினைக்கிறாரோ அதனை அவர் சுவரில் உள்ள படத்தில் சொல்லிவிட்டால் போதுமானது என்கிறார்கள். பொதுவாக சுவரில் வரையும் படங்கள் பொதுவாக அரசியல்ரீதியானவைதான். ஆனால் இன்று சுவர்களில் வரையப்படும் படங்கள் நீர்த்துப்போனவையாக பார்ப்பதற்கு அழகாக மட்டும் இருக்கின்றன என கிராஃபிட்டி மீது விமர்சனங்களை கூறுகிறார்கள்.
OZY
https://banksy.co.uk/in.asp
கருத்துகள்
கருத்துரையிடுக