இடுகைகள்

ஃப்ராய்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தான், பிறர் என்பதை எப்படி புரிந்துகொள்கிறோம்?

படம்
  உளவியல் பகுப்பாய்வில் தன்னுணர்வற்ற மனம் என்பதில் நினைவுகள் சேமிக்கப்பட்டிருக்கும். அதை தன்னுணர்வு மனம் எளிதாக பெறமுடியாது என அறிந்துகொண்டிருக்கிறோம். ஆனால், தன்னுணர்வற்ற மனதில் உள்ள நினைவுகள், சிலமுறை வெ்வேறு வழிகளில் தன்னுணர்வு மனத்திடம் தொடர்புகொள்கிறது. இதை கார்ல் ஜங், தனது ஆய்வில் விவரிக்கிறார். கனவுகள், அடையாளங்கள், பல்வேறு வித குணங்கள், பேசும்போது கூறும் பொருத்தமற்ற வார்த்தைகள் ஆகியவற்றை தொடர்புகொள்ளும் வழிமுறைகளாக கூறுகிறார்.  உளவியலில் தான் பிறர் என்பது முக்கியம். ஒரு பெரிய கூட்டத்தில் மனிதர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் தனித்தனியானவர்கள்தான். காரணம், அவர்களின் சுயம் வேறுபட்டது. பிறர் என்பது தன்னைக் கடந்த விஷயங்கள், உலகைக் குறிக்கிறது. ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருந்து பிறந்த நொடியில் இருந்து உலகைப் புரிந்துகொள்ள முயல்கிறது. நாம் சில விஷயங்களைப் பற்றி யோசிக்கிறோம். எழுதுகிறோம். ஆனால் அதை பிறருக்கு கூறவேண்டுமெனில் இருவருக்கும் பொதுவான ஊடகம் தேவைப்படுகிறது. அதாவது மொழி. மொழி கைவிட்டால் புகைப்படங்கள் சைகைகளை நாடலாம்.  ஜாக்குயிஸ் லாகன் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் பிறந்தவர்.

கார்ல் ஜங்கின் தனித்துவமான உளவியல் ஆய்வுகள்!

படம்
  கார்ல் ஜங் ஃப்ராய்டின் மனப்பகுப்பாய்வு கொள்கைகளை உலகம் முழுக்க கொண்டு சென்றவர். ஸ்விட்சர்லாந்து நாட்டில் கல்விக்கு புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தார். அம்மாவுக்கு நெருக்கமான பிள்ளை, அம்மா, மன அழுத்தத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு அதனால் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தார். ஐரோப்பிய மொழிகளை கற்றவர் தொன்மையான சமஸ்கிருதம் கூட கற்றுக்கொண்ட திறமைசாலி. எம்மா ராசென்பாக் என்ற பெண்மணியை மணந்தவருக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்தனர்.  உளவியலில் பயிற்சி பெற்று வந்தவர், 1907ஆம் ஆண்டு உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்டை சந்தித்தார். பிறகு அவருடன் இணைந்து மனப்பகுப்பாய்வு கொள்கைகளில் ஆய்வு செய்து வந்தார். பின்னாளில் அவரின் கொள்கைகளில் வேறுபாடு தோன்ற, பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, இந்தியா என பல்வேறு நாடுகளில் சுற்றி அந்நாட்டின் தொல்குடிகளோடு உரையாடினர். அந்த காலகட்டத்தில் மானுடவியல், அகழாய்வு ஆகியவற்றில் அதீத ஆர்வம் கொண்டு இயங்கினார். 1935இல் ஜூரிச் பல்கலையில் பேராசிரியராக இருந்தவர், பின்னர் ஆராய்ச்சி செய்வதற்காக வேலையை விட்டு விலகினார்.  கார்ல் ஜங், உளவியல், மானுடவியல்,ஆன்மிகம் என