இடுகைகள்

ஆக்ஸ்ஃபோர்ட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இதழியல் லாபம் சம்பாதிக்கும் வணிகத் தொழிலாக மாறிய வரலாறு!

படம்
  ஜர்னலிசம் – ஷார்ட் இன்ட்ரோடக்‌ஷன் ஆக்ஸ்போர்ட் பிரஸ் பத்திரிகை தொழில் அன்றிலிருந்து இன்றுவரை கொள்கை ரீதியாக செயல்பாட்டு ரீதியாக எப்படி மாறியிருக்கிறது என கூறுகிறார்கள். நூலில் அதிகம் பேசப்படுபவர், ரூபர்ட் முர்டோக் என்ற ஊடக தொழிலதிபர்தான். இவர்தான் ஸ்டார் டிவி குழுமத்தை தொடங்கியவர். இப்போது ஸ்டார் டிவி குழுமத்தை டிஸ்னி நிறுவனம் வாங்கிவிட்டது. ரூபர்ட்டின் ஃபாக்ஸ் டிவி அமெரிக்க ஊடக கலாசாரத்தை மறு வடிவமைப்பு செய்தது என்று கூற வேண்டும். ஐரோப்பா முழுக்கவே ஊடகங்களின் கொள்கைகளை மாற்றி பொழுதுபோக்கை முதன்மையாக்கி செய்திகளின் தரத்தை கீழிறக்கிய ஊடக தொழிலதிபர் ரூபர்ட் முர்டோக். பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகள், அரசியல்வாதிகளுக்கு ஏற்றபடி செய்திகளை மக்கள் மாற்றிப் புரிந்துகொள்ளும்படி எழுதுவது, மடை மாற்றி தலைப்புகளை வைப்பது, முக்கியமான செய்திகளை இருட்டடிப்பு செய்வது என இங்கிலாந்தில் உள்ள சன், கார்டியன், டெய்லி மிரர் என ஏராளமான நாளிதழ்களை, ஜர்னலிசம் நூல் சாடுகிறது. எடுத்துக்காட்டுகளுடன் தான் பேசியவற்றை வாசகர்களுக்கு கொடுக்கிறது. நூலில் உள்ள உள்பக்க படங்களை கீழே உள்ள கேப்ஷன்களுடன் சேர்த்து