இடுகைகள்

ஆங்கிலேயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பழமையான கட்டிடங்களை நவீனமான விழாக்களுக்கு இடமாக மாற்றுகின்றனர்! - லஸ் இல்லம், செட்டியார் வீடு

படம்
  லஸ் இல்லம், சென்னை ஆங்கிலேயர் கால வீடுகள், பழமையான வீடுகளை இப்போது நவீன தலைமுறையினர் கஃபே, இசை, தனிக்குரல் நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களாக மாற்றி வருகின்றனர்.  அதில் முக்கியமான இடத்தை சொந்தமாக கொண்டிருக்கிறார் ஏஜிஎஸ் சினிமா இயக்குநரான அர்ச்சனா கல்பாத்தி. பிரைம்ரோஸ் என்ற இல்லம் இவருடைய கணவரின் தாத்தா வழியில் கிடைத்த சொத்து. இது எங்களுடைய குடும்பத்தில் பல்வேறு நினைவுகள் கொண்ட வீடு. இதன்மூலம் மக்களும் தங்களுடைய புதிய நினைவுகளை உருவாக்கிக்கொள்ளலாம். என்கிறார். இப்போது இந்த வீட்டைப் புதுப்பித்து பல்வேறு விழாக்களுக்கு இடம் கொடுக்கும்படி மாற்றியிருக்கிறார் அர்ச்சனா.  வீட்டில் நிறைய இடம் இருக்கிறது. அதற்கு பின்னால் உள்ள மாமரம் வீட்டைப் போலவே பழமையானது. அதில்தான் எங்கள் குடும்பத்தினரின் பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகள் நடந்தன என்று நினைவுகூறுகிறார் அர்ச்சனா. பிரைம்ரோஸ் 131 எனும் இந்த வீடு லஸ் சர்ச் சாலையில் அமைந்துள்ளது. இதைப்போலவே செட்டியார் வீடு எனும் ஏவிஎம்மிற்கு சொந்தமான இடமும் கூட மக்களுக்காக 2018ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இதில் ஏறத்தாழ எண்பதிற்கும் மேற்பட்ட விழாக்கள் நடைபெற்றுள்ளன. த

இனவெறிக்கு எதிரான காந்தியின் போராட்டம்! - மாந்தருள் தெய்வம் - கல்கி கிருஷ்ணமூர்த்தி

படம்
                  மாந்தருள் தெய்வம் கல்கி கிருஷ்ணமூர்த்தி காந்தியின் வாழ்க்கையை அவர் பிறந்தது முதல் தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராட்டம் நடத்தி வெல்வது வரையிலான அவரது வாழ்க்கையைப் பேசுகிறது நூல் இது . நூலின் சிறப்பு என்னவென்றால் , இது பள்ளிக்குழ்ந்தைகளுக்கு காந்தியை அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் . பனியா என்ற இனத்தில் பிறப்பது , அவரது குடும்ப வாழ்க்கை . தொழில்வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது . சமூக வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை படிக்கும் யாவரும் புரிந்துகொள்ளமுடியும் . இதனால் கஸ்தூரிபாய் காந்தி , மணிலால் காந்தி , ஹரிலால் காந்தி ஆகியோர் பற்றிய பகுதிகள் இதில் குறைவாகவே உள்ளன . அதனால் நூலைப் படிக்கும் எவருக்கும் பெரிய குறைபாடாக தோன்றாது . அந்தளவுக்கு பொதுநலனுக்கு காந்தி என்னென்ன விஷயங்களை யோசித்துள்ளார் என்பது வாசகர்களை ரசிக்க வைக்கிறது . லண்டனுக்கு சென்று பாரிஸ்டர் படிப்பை படிக்கும் பகுதி காந்தியின் வாழ்க்கையில் முக்கியமானது . இங்குதான் அவருக்கு உணவு , கலாசாரம் சார்ந்த