இடுகைகள்

கிளர்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல்பசி, வயிற்றுப்பசி என இரண்டாலும் தவிக்கும் ராமோஜி ராவின் சுயசரிதை! - ராமோஜியம் - இரா முருகன்

படம்
  ராமோஜியம்  இரா முருகன் கிழக்கு பதிப்பகம் பிரிட்டிஷாரின் ஆட்சியில் நடக்கும் கதை. அக்காலகட்டத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கிளர்க்காக வேலை செய்யும் ராவ்ஜி, அவரது மனைவி ரத்னாபாய் ஆகியோரின் வாழ்க்கை கதைதான் நாவல்.  கொரிய டிவி தொடர்களில் பன்றிக்கறி, மாட்டிறைச்சி, நூடுல்ஸ், முட்டை எப்படி நீங்காமல் இடம்பெறுகிறதோ அதுபோல இந்த நாவலெங்கும் உணவு வகைகள் ஏராளம். தாராளம். உணவு கதையில் ஒரு பாத்திரம் போலவே வருகிறது. ராவ்ஜிக்கு அரசு வேலை என்பதால் அவர் வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. எங்கு சென்றாலும் அவரது உறவினர்கள் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் அத்தனை ருசியாக, வகை வகையாக சமைத்து போடுகிறார்கள். கும்பகோணத்தில் டீ ஆபீசராக சென்று வேலை பார்த்து, அங்கு விடுமுறைக்கு வந்திருந்த இளம்பெண் ரத்னாபாயை காதல் வலையில் வீழ்த்துகிறார். அவருமே வீழ்கிறார். பிறகுதான் அரசு தேர்வு எழுதி கிளர்க்காக சென்னையில் உத்தியோகமாகிறது. அதை வைத்தே மராட்டிய மாமனார், மச்சினன் ஆகியோரை சரிகட்டி ரத்னாவை கல்யாணம் செய்கிறார்.  1975 நாவலைப் போலவே இதிலும் நாயகன் ராவ்ஜி, அரசு விவகாரங்களை விமர்சிக்க விரும்பாத குட...

உலகை ஆனந்தமாக முத்தமிடுவதற்கான வழி - கோ கிஸ் தி வேர்ல்ட் - சுபத்ரோ பக்ஷி

படம்
  சுபத்ரோ பக்ஷி கோ கிஸ் தி வேர்ல்ட் சுபத்ர பக்ஷி சுபத்ரோ பக்ஷி இப்போது ஒடிஷாவில் உள்ள திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவராக இருக்கிறார்.இவர் தொடக்கத்தில் எப்படி பிறந்தார் வளர்ந்தார், அவரது ஆசை, லட்சியம் என்ன, அவற்றை நிறைவேற்ற எப்படி பாடுபட்டார் என்பதுதான் இந்த புத்தகத்தின் உள்ளடக்கம்.  சுபத்ரோ பக்ஷி தொழில்முனைவோர்களுக்கான நிறைய நூல்களை எழுதி வருகிறார். அந்த வகையில் இது இரண்டாவது நூல். முதல் நூல் தொழில்முனைவோர்களுக்கானது.  சுபத்ரோ பக்ஷி நூல் முடியும்போது தெளிவாக சொல்லிவிடுகிறார். தொடக்கத்தில் எனது வாழ்க்கை ஏழ்மையில் இருந்தது போல பலருக்கும் தோன்றும். ஆனால் நான் ஏழ்மையில் வாழவில்லை. எளிமையாக இருந்தது எங்கள் வீடு என்கிறார். எனவே, நாளிதழ் போல ஏழ்மையில் மாணிக்கமாக மிளிர்ந்தார் என்று நாம் தலைப்பு டைப் செய்யவே முடியாது.  ஏனென்றால், சுபத்ரோவின் அப்பா, அரசு மாஜிஸ்டிரேட்டாக இருந்தவர். பின்னாளில், சில அரசியல் பழிவாங்குதலால் மேலதிகாரியால் பணிக்குறைப்பு செய்யப்பட்டார். அப்பாவைப் பற்றி கூறும்போது, அந்த விவரிப்புகள் பக்தி பூர்வாக அமைந்திருக்கின்றன. சுபத்ரோவின் பிற்கால வாழ்க்கையை தீர்மா...