இடுகைகள்

பத்ம விருதுகள் 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளுக்கு மரியாதை - பத்ம விருதுகள் 2019

படம்
விவசாயிகளுக்கு மரியாதை பனிரெண்டு விவசாயிகள் பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அதில் நான்கு பேர் மரபான விவசாயம் சார்ந்தவர்கள். அதில் கமலா புஜ்ஹாரியும் ஒருவர். இவர் கோரபுட் மாவட்டத்திலுள்ள(ஒடிஷா) தொன்மையான பயிர்வகைகளை காக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட விவசாயி. இவர் 2002  ஈக்குவடார் இனிசியேட்டிவ் என்ற விருதை தென் ஆப்பிரிக்காவில் பெற்று சாதித்தவர். மாநில திட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றிய பெருமை உடையவர். பீகாரின் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி தேவி, நிலத்தின் தரத்தை உறுதிசெய்து அதனை நேர்த்தியாக்கும் செயல்பாடுகளை முன்னெடுத்தவர். இவருக்கு பெயரே கிசான் சாச்சி என்பதுதான். 300 க்கும் மேற்பட்ட பெண்களை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழுவை உருவாக்கிய பெருமை கொண்டவர். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பாபுலால் தாகியா, இரண்டு ஏக்கர் நிலத்தில் நூற்றுபத்து வெரைட்டி பயிர்களை விதைத்தவர். மரபான பயிர்களை 2005 ஆம் ஆண்டிலிருந்து சேகரித்து வருகிறார் பாபுலால் தாகியா. பாடல்களில் மட்டுமே இருந்த பயிர்கள் பெருமளவு அழிந்தாலும் அவற்றை காக்க முயற்சித்து வருகிறார் பாபுலால் தாகியா.  விதைக்கான யாத்திரையை

பத்ம விருதுகள் 2019 - மருத்துவர்கள்

படம்
தமிழக அரசின் கலைமாமணி போல இன்னும் பத்ம விருதுகள் அரசியல் கழகங்களின் விருப்பச்சொத்தாக மாறவில்லை. அதற்கு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளே சாட்சி. பிரதமரின் தலைமையிலான ஆறுபேர் கொண்ட கமிட்டி, பரிந்துரைகளிலிருந்து தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கிறது. இதில் பாரத ரத்னா மட்டும் விதிவிலக்கு. ஆண்டுக்கு மூன்று நபர்களுக்கு வழங்கப்படும் இந்த விருதை பிரதமர் நேரடியாக குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்து வழங்க உதவுகிறார். இந்த ஆண்டு சமூகத்திற்கு உழைத்த மருத்துவர்கள், விவசாயிகள், சமூகத்தலைவர்கள் ஆகியோருக்கு பத்ம அங்கீகாரம் கிடைத்துள்ளளது. இதில் சில விருதுகளை அரசியல் நோக்கம் கொண்டதாகவும் கருதலாம். அவற்றை விடுங்கள். மருத்துவத்துறையில் சாதித்தவர்களை பார்ப்போம். ராமஸ்வாமி வெங்கடஸ்வாமி பேராசிரியர் ராமஸ்வாமி வெங்கடஸ்வாமி புகழ்பெற்ற பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையாளர். ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்கான கழகத்தை தொடங்கியவர். தேசிய மருத்துவ அறிவியல் அகாடமிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையுடையவர். செரிங் நோர்பூ ஜம்மு காஷ்மீரிலுள்ள லடாக்கில் பெண்களின