இடுகைகள்

ஐ.நா அமைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அகதிகளுக்கு உதவிய பிரேசில் நாடு!

படம்
வெனிசுலா நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதனால் அங்கு வாழ முடியாமல் வெளியேறும் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர். அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்காக கருணை அடிப்படையில் பல்வேறு நாடுகள் அகதிகளை தங்க வைத்து வருகின்றன. பிரேசில் நாடு, ஒரே நாளில் 21 ஆயிரம் வெனிசுலா அகதி மக்களை தன் நாட்டில் தங்க வைத்து சாதனை  செய்துள்ளது. இதற்கு முன்பு 263 பேர்களை மட்டுமே தன் நாட்டில் வாழ அனுமதித்திருந்தது. மனித உரிமை கண்காணிப்பகத்தின் பல்வேறு அறிக்கைகள் அடிப்படையில் பிரேசில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெனிசுலாவில் போராட்டக்கார ர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் மீது நிக்கோலஸ் மதுரோ அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அங்கு மக்கள் சாப்பிடவும் வழியின்றி தவித்து வருகின்றனர். காரணம், பணவீக்கம். நோய்களுக்கு சிகிச்சை தரும் அமைப்புகளும் செயலிழந்து விட்டதால், மக்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அகதிகள் மறுவாழ்வு நடவடிக்கையில் மைல்கல் என ஐ.நா அமைப்பு பிரேசில் நாட்டைப் பாராட்டியுள்ளது. இதற்கு மனித உரிமை கண்காணிப்பகம் நிறைய

மனித வளக்குறியீட்டெண்டில் இந்தியாவுக்கு 129வது இடம்!

படம்
giphy நூற்றி எண்பத்தைந்து நாடுகளைக் கொண்ட மனித வளக்குறியீட்டுப் பட்டியலில் இந்தியா, 129 வது இடத்தைப் பிடித்துள்ளது.  போனமுறையை விட இம்முறை ஒரு இடம் முன்னேறி உள்ளது. மனித வளக்குறியீடு என்பது ஒருவரின் தனிமனித வருமானம், வாழ்க்கைத்தரம், கல்வி ஆகியவற்றைப் பொறுத்து மதிப்பிடப்படுகிறது. இதனை ஐ.நா அமைப்பு பட்டியலிட்டு வெளியிடுகிறது. தொண்ணூறுகளிலிருந்து 2018 வரையிலான காலகட்டத்தில் இந்தியர்களின் வாழ்நாள் 11 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் சிறுவர்களின் அளவு 3.5 ஆண்டுகளாக கூடியுள்ளது. தனிநபர் வருமானம் 250 சதவீதம் அளவாக உயர்ந்துள்ளது என்கிறது இந்த அறிக்கை. மனிதவளக் குறியீட்டில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத், ஜன்தன்யோஜனா ஆகிய திட்டங்கள் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 2005 லிருந்து 2016 வரையிலான காலகட்டத்தில் 271 மில்லியன் மக்கள் வறுமையின் பிடியிலிருந்து வெளியே வந்துள்ளனர். உலகில் வறுமையில் உள்ளவர்களின் அளவில் இது 28 சதவீதம் ஆகும். மேலும், உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவு உயரவில்லை. 24 சதவீதமாக உள்ளது. தெற்காசிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பார்டர் மார்க

சுகாதாரமான குடிநீருக்கு இந்தியாவில் சட்டம் தேவை!

படம்
சுத்தமான நீருக்கு சட்டம் தேவை! சுத்தமான நீருக்கான சட்டத்தை ஐ.நா. சபை கொண்டு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. 2010 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, சுகாதாரமான நீரைப் பெறுவது மனிதனின் அடிப்படை உரிமை என்று சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவிலுள்ள சிடிசி எனும் அமைப்பின் பரிந்துரைப்படி, 50 நாடுகள் சுகாதாரமான குடிநீரை வழங்கி வருகின்றன.  ஐ.நா அமைப்பு, 2.1 பில்லியன் மக்கள் சுகாதாரமான குடிநீரைப் பெறுவதில் தடுமாறி வருகின்றனர் என்று கூறியுள்ளது. அமெரிக்காவில் சுகாதாரமான குடிநீருக்கான சட்டம் அமலில் உள்ளது. அதன்படி தொழில்மயமான அந்நாட்டில் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம், அங்கு ஏரிகள், ஆறுகள், கிணறுகள் என அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் தனியாரின் கிணறுகள் உள்ளே வராது. இவை எண்ணிக்கையில் 25க்கும் குறைவு. இங்கிலாந்தில், தொண்ணூறுகளில் குடிநீர் கண்காணிப்பகம் ஒன்று நிறுவப்பட்டது. இந்த அமைப்பு மக்கள் குடிக்கும் நீர் சரியான அரசு தர அளவுகளில் உள்ளதாக என்று கண்காணிக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய நீர் கண்காணிப்பக அமைப்பு குடிநீரைக் கண்காணித்து அதன் தரத்தை நிர்ணயி