சுகாதாரமான குடிநீருக்கு இந்தியாவில் சட்டம் தேவை!






சுத்தமான நீருக்கு சட்டம் தேவை!



சுத்தமான நீருக்கான சட்டத்தை ஐ.நா. சபை கொண்டு வந்து ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. 2010 ஆம் ஆண்டு ஜூலை 28 அன்று, சுகாதாரமான நீரைப் பெறுவது மனிதனின் அடிப்படை உரிமை என்று சட்டம் உருவாக்கப்பட்டது.


அமெரிக்காவிலுள்ள சிடிசி எனும் அமைப்பின் பரிந்துரைப்படி, 50 நாடுகள் சுகாதாரமான குடிநீரை வழங்கி வருகின்றன.  ஐ.நா அமைப்பு, 2.1 பில்லியன் மக்கள் சுகாதாரமான குடிநீரைப் பெறுவதில் தடுமாறி வருகின்றனர் என்று கூறியுள்ளது.


அமெரிக்காவில் சுகாதாரமான குடிநீருக்கான சட்டம் அமலில் உள்ளது. அதன்படி தொழில்மயமான அந்நாட்டில் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம், அங்கு ஏரிகள், ஆறுகள், கிணறுகள் என அனைத்தும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் தனியாரின் கிணறுகள் உள்ளே வராது. இவை எண்ணிக்கையில் 25க்கும் குறைவு.


இங்கிலாந்தில், தொண்ணூறுகளில் குடிநீர் கண்காணிப்பகம் ஒன்று நிறுவப்பட்டது. இந்த அமைப்பு மக்கள் குடிக்கும் நீர் சரியான அரசு தர அளவுகளில் உள்ளதாக என்று கண்காணிக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய நீர் கண்காணிப்பக அமைப்பு குடிநீரைக் கண்காணித்து அதன் தரத்தை நிர்ணயிக்கிறது.

2019 மார்ச் 28 ஆம் தேதி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் குடிநீரின் தரத்தை மேம்படுத்தி மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்படி பல்வேறு திருத்தங்கள் சட்டத்தில் அமலாயின.

சிங்கப்பூரில் நீரை சுத்திகரித்து வழங்குவது தொடர்பான பல்வேறு முன்னோடி திட்டங்கள் உள்ளன. அனைத்தும் 2008 ஆம் ஆண்டு உருவாக்கிய சட்டப்படி நடைபெறுகிறது. இதற்கு வழிகாட்டியாக உலக சுகாதார நிறுவனத்தின் விதிகளை கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவும் இம்முறையில் செயல்படுகிறது.


நன்றி: டைம்ஸ் வாட்டர் பாசிட்டிவ் செய்திகள்.

Image - pinterest











பிரபலமான இடுகைகள்