வாசிப்பு மற்றும் பொருளாதாரம் பிட்ஸ்!





Neonmask❤💚👑







பிட்ஸ்!

வாசிப்பு


நவீன தலைமுறை இளைஞர்கள்  92% சதவீதம் பேர் தங்களுக்குப் பிடித்த விஷயங்களைக் குறித்து இணையத்தில் தேடிப் படிக்கின்றனர். இவர்களின் இணைய வாசிப்பு என்பது இவர்களின் பெற்றோர்களை விட அதிகம்.

பதிப்பகத்துறை சரிவடைந்து வருவதாக பலர் கூறுகின்றனர். ஆனால், புதிய தலைமுறை வாசகர்களால் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது உண்மை.

அமெரிக்கர்கள் தனிநபராக நூலுக்குச் செலவிடும் தொகை 110 டாலர்கள். படிக்கச் செலவிடும் தோராய நேரம் 15.6 நிமிடங்கள். ஆண்டுக்கு ஒரேயொரு புத்தகம் படித்த அமெரிக்கர்களின் சதவீதம் 74.

பொருளாதாரம்

ஆர்பிஐ யின் இலச்சினை, கிழக்கிந்திய கம்பெனியின் இலச்சினையான Double Mohur ஐ முன்மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.

ஆர்பிஐயின் நிதி ஆண்டு என்பது நடப்பு ஆண்டின் ஜூலை 1 முதல் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை ஆகும்.

ரிசர்வ் வங்கியின் முதல் துணை ஆளுநராக(2003) நியமிக்கப்பட்ட பெண்மணி, கே.ஜே. உதேசி(KJ Udeshi).

1938 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி, 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் செய்தது.


நன்றி: பிரின்ச்.காம், ஸ்டேட்ஸ்டா.காம்