பாதுகாப்புக் காவலர் பட்டதாரி ஆகிறார்!
செய்தி ஜாம்
அசத்தல்!
கற்க கசடற!
நேரு பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் காவலராக பணியாற்றி வந்தார் ராஜ்மல் மீனா (34). அங்கு, நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்களோடு வென்று பிஏ இளங்கலைப் பட்டப்படிப்பை ரஷ்ய மொழியில் கற்கவிருக்கிறார்.
TOI
கிளாப்ஸ்!
விடாமுயற்சி!
புதுடில்லியின் வடக்குப்பகுதியில் உள்ள கஜூரி காஷ் பகுதியில் ரோஹிங்கியா முஸ்லிம்களின் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு மனித உரிமை அமைப்பு மொழி மற்றும் கணினி திறன்வகுப்புகளை நடத்தியது. இதில் ரியாஸ் உல் கான் என்ற மாணவர், முதன்மை மாணவராக பரிசு வென்றார்.
indianexpress
அச்சச்சோ!
வணிக பாதிப்பு?
நடப்பு பட்ஜெட்டில், வங்கிக் கணக்கில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக பெறுபவர்களுக்கு 2சதவீத வரிவிதிப்பு அமலாகிறது. இது வேளாண் வணிகத்தைப் பாதிக்கும் என்பது வல்லுநர்கள் கருத்து. ‘டிஜிட்டல் பரிமாற்றத்திற்கான முயற்சி ’என இதற்கு நிதி அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
ie
ஆஹா!
சூழல் உதாரணம்!
கம்போடியாவின் காம்போங் ஸ்ப்யூ நகரில், சூழல் பாதிப்பை மக்களுக்குச் சொல்லும் விதமாக ரப்பிஷ் கஃபே உருவாகியுள்ளது. இதனை பீர் மற்றும் குடிநீர் பாட்டில்கள், மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கியுள்ளார் உரிமையாளரான உக் வாந்தே.
reuters
அப்படியா?
Instagram Hiding posts likes!
Instagram is hiding the number of likes on posts in Australia and Japan, in order to "remove pressure" on users.The trial which begins Thursday, means users will see a user name "and others" below posts, instead of the number, on their feed.
வெளியீட்டு அனுசரணை - தினமலர் பட்டம்