இஸ்ரோ சாதனை மைல்கற்கள்!
சந்திரயான் புறப்பட இன்னும் 11 நாட்கள்தான் உள்ளன. இந்த நேரத்தில் இஸ்ரோவின் சாதனைகள் என்னவென்று பார்த்துவிடலாமா?
1969 ஆக.15 இஸ்ரோ அமைப்பு தொடங்கப்பட்டது.
1971 ஆம் ஆண்டு SHAR மையம் செயல்படத் தொடங்கியது.
இன்று இதன் பெயர் SDSC.
1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 - இஸ்ரோ முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டாவை விண்ணில் செலுத்தியது.
1977 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று, தகவல் தொடர்பான சோதனைகள் தொடங்கப்பட்டன. இதன்விளைவாக கிராமங்களுக்கு டிவிகள் சென்றன.
1979 ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று, பாஸ்கரா எனும் சோதனை முறை செயற்கைக் கோள் ஏவப்பட்டது.
1993 ஆம் ஆண்டு செப்.20 அன்று பிஎஸ்எல்வி மாதிரி சோதிக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு அக்.22 அன்று, இஸ்ரோ சந்திரயான் 1 விண்ணில் ஏவப்பட்டது.
2014 ஆம் ஆண்டு செப்.24 அன்று இஸ்ரோவின் மாம், செவ்வாயின் வட்டப்பாதையில் நுழைந்தது.
2019 ஜூலை 15 ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படவிருக்கிறது.
நன்றி: டைம்ஸ் - சேத்தன் குமார்