மௌனப் புயல் ட்யுராங்கோ - ரௌத்திரம் பழகு அத்தியாயம் 1


Image result for comics hero durango




சத்தமின்றி யுத்தம் செய்!

ட்யுராங்கோ கலக்கும்

ரௌத்திரம் பழகு!

கதையில் நீதி, நேர்மை இத்யாதிகளுக்கு இடமில்லை. ட்யுராங்கோ காசுக்கு கொலைகளை செய்யும் மௌன எமன். பேசுவது குறைவு. ரத்தப்பொத்தல் விழுந்த கையுடன் பத்து பேர்களை போட்டுத்தள்ளும் மனதிடம், உடல்பலம் கொண்டவன்.

தன் குடும்பத்திடமிருந்து விலகிப்போய் துப்பாக்கியும் தோட்டாக்களுமாக் வாழ்பவனை கடிதம் ஒன்று அமெரிக்காவின் பண்ணைக்கு வரவைக்கிறது. அங்கு வசிக்கும் ஹாரி லாங் என்ற அவரின் சகோதரர், அவனுக்கு பணம் தருவதாக கூறி அங்கு வரச்சொல்லி கடிதம் எழுதி அனுப்புகிறார். ஆனால் ட்யுராங்கோ அங்கு வரும்போது காரியம் மிஞ்சியிருக்கிறது.

செனட்டர் ஹ்யூலெட் தன் பண்ணையை விரிவாக்க அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்துகிறார். தனக்கு போட்டியாக கால்நடைப் பண்ணைகளை வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளுகிறார். லாரியும் அப்படி கூலிப்படையால் கொல்லப்படுகிறார். இந்த விஷயம் தோள், வயிறு, கை என பல்வேறு தோட்டாக்கள் துளைக்கப்பட்டு கீழே விழுந்து கிடக்கும்போதுதான் ட்யுராங்கோவுக்கு தெரிகிறது. பின் எப்படி எதிரிகளை வீழ்த்தி தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறார் என்பதே கதை.

கதையில் வரும் பனி நம் கண்முன் விழுவது போல அவ்வளவு யதார்த்தமாக வரைந்திருக்கிறார் ஓவியர். அனைத்து உள்ளறை காட்சிகளும் ஆயில் பெயிண்டிங் போல இருக்கிறது. நுட்பமான டீட்டெய்ல்கள் கொண்ட படங்கள். படத்தின் நாயகன் போலவே அனைத்தும் பனி சூழ்ந்து ஒருவித அமைதி படங்கள் முழுக்க இருக்கிறது. சடக்கென வன்முறை விஸ்வரூபம் எடுக்கிறது.

வித்தியாசமான சவால் கதையைப் படிக்க ட்யுராங்கோவை தேர்ந்தெடுக்கலாம்.

-கோமாளிமேடை டீம்

நன்றி: பாலமுருகன்