ராமானுஜன் இயந்திரம் - இஸ்ரேல் ஆய்வாளர்கள் சாதனை!
கணிதமேதை ராமானுஜனின் கணிதம், இன்று கணினித் துறைகளிலும் பயன்பட்டு வருகிறது. 1887 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிறந்து தானாகவே கணிதத்தை பரிசோதனை செய்து அதில் சாதனைகளைச் செய்தவரை இந்தியா பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால் இங்கிலாந்து அரவணைத்துக்கொண்டது. தற்போது அவரின் கணிதம் மூலமாக பை மற்றும் இ என்ற நிலை எண்களுக்கான விளக்கங்கள் கிடைத்துள்ளன.
1914 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் கல்வி கற்க சென்றார் ராமானுஜன். அங்கு அவருக்கு பேராசிரியர் ஹார்டி என்பவர் அறிமுகமானார். இவர் மூலமே ராமானுஜனின் பல்வேறு தியரங்கள் மக்களுக்கு அறிமுகமானது.
ராமானுஜன் தானாகவே கற்று போட்ட பல்வேறு கணக்குகள் சரியானவை என்று பின்னர் உறுதியாயின. ஆனால் அவர் பிறரை ஒப்புக்கொள்ள வைக்கும் முறையை கடைபிடிக்கவில்லை என்கிறார் வார்விக் பல்கலையைச்சேர்ந்த ஆசிரியரான செலிமர். இதுபற்றி இஸ்ரேல் விஞ்ஞானிகள் ராமானுஜன் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் செய்துள்ளது சோதனை கணிதம் என்ற முறையில் நல்ல முயற்சிதான். ஆனால் இது புதிதான யோசிக்கும் முறை அல்ல என்கிறார் செலிமர்.
நன்றி: நியூ சயின்டிஸ்ட்